Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் - Page: 7

Al-Hijr

(al-Ḥijr)

௬௧

فَلَمَّا جَاۤءَ اٰلَ لُوْطِ ِۨالْمُرْسَلُوْنَۙ ٦١

falammā jāa
فَلَمَّا جَآءَ
வந்த போது
āla
ءَالَ
குடும்பத்தார்
lūṭin
لُوطٍ
லூத்துடைய
l-mur'salūna
ٱلْمُرْسَلُونَ
தூதர்கள்
(இறைவனால்) அனுப்பப்பட்ட (அம்)மலக்குகள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபொழுது, ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௬௧)
Tafseer
௬௨

قَالَ اِنَّكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ ٦٢

qāla
قَالَ
கூறினார்
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
qawmun
قَوْمٌ
கூட்டம்
munkarūna
مُّنكَرُونَ
அறியப்படாதவர்கள்
அவர் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் (நான்) அறியாத மக்களாய் இருக்கின்றீர்களே!" என்று கூறினார். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௬௨)
Tafseer
௬௩

قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِيْهِ يَمْتَرُوْنَ ٦٣

qālū
قَالُوا۟
கூறினர்
bal
بَلْ
மாறாக
ji'nāka
جِئْنَٰكَ
வந்துள்ளோம்/உம்மிடம்
bimā
بِمَا
எதைக் கொண்டு
kānū
كَانُوا۟
இருந்தனர்
fīhi
فِيهِ
அதில்
yamtarūna
يَمْتَرُونَ
சந்தேகிக்கின்றனர்
அதற்கவர்கள், "(உங்களது மக்களாகிய) இவர்கள் எதைச் சந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ அதை நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௬௩)
Tafseer
௬௪

وَاَتَيْنٰكَ بِالْحَقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ ٦٤

wa-ataynāka
وَأَتَيْنَٰكَ
இன்னும் வந்துள்ளோம்/உம்மிடம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாம்
laṣādiqūna
لَصَٰدِقُونَ
உண்மையாளர்கள்தான்
மெய்யான விஷயத்தையே நாம் உங்களிடம் கொண்டு வந்திருக்கிறோம். நிச்சயமாக நாம் (அவர்களை அழித்துவிடுவோம், என்று உங்களுக்கு) உண்மையே கூறுகிறோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௬௪)
Tafseer
௬௫

فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَيْثُ تُؤْمَرُوْنَ ٦٥

fa-asri
فَأَسْرِ
ஆகவே, செல்வீராக
bi-ahlika
بِأَهْلِكَ
உமது குடும்பத்தினருடன்
biqiṭ'ʿin
بِقِطْعٍ
ஒரு பகுதியில்
mina al-layli
مِّنَ ٱلَّيْلِ
இரவின்
wa-ittabiʿ
وَٱتَّبِعْ
இன்னும் பின்பற்றுவீராக
adbārahum
أَدْبَٰرَهُمْ
அவர்களுக்குப் பின்னால்
walā yaltafit
وَلَا يَلْتَفِتْ
திரும்பிப் பார்க்கவேண்டாம்
minkum
مِنكُمْ
உங்களில்
aḥadun
أَحَدٌ
ஒருவரும்
wa-im'ḍū
وَٱمْضُوا۟
இன்னும் செல்லுங்கள்
ḥaythu
حَيْثُ
இடத்திற்கு
tu'marūna
تُؤْمَرُونَ
ஏவப்பட்டீர்கள்
ஆகவே, இன்றிரவில் சிறிது நேரம் இருக்கும்பொழுதே நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு, (அவர்கள் முன்னும்) நீங்கள் பின்னுமாகச் செல்லுங்கள். உங்களில் ஒருவருமே திரும்பிப் பார்க்காது உங்களுக்கு ஏவப்பட்ட இடத்திற்குச் சென்று விடுங்கள்" என்றார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௬௫)
Tafseer
௬௬

وَقَضَيْنَآ اِلَيْهِ ذٰلِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰٓؤُلَاۤءِ مَقْطُوْعٌ مُّصْبِحِيْنَ ٦٦

waqaḍaynā
وَقَضَيْنَآ
முடிவு செய்தோம்
ilayhi
إِلَيْهِ
அவருக்கு
dhālika
ذَٰلِكَ
அது
l-amra
ٱلْأَمْرَ
காரியம்
anna dābira
أَنَّ دَابِرَ
நிச்சயமாக வேர்
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்களின்
maqṭūʿun
مَقْطُوعٌ
துண்டிக்கப்படும்
muṣ'biḥīna
مُّصْبِحِينَ
விடிந்தவர்களாக
அன்றி, நிச்சயமாக இவர்கள் அனைவரும் விடிவதற்குள்ளாகவே வேரறுக்கப்பட்டு விடுவார்கள் என்றும் நாம் (அம்மலக்குகள் மூலமாக) அவருக்கு அறிவித்தோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௬௬)
Tafseer
௬௭

وَجَاۤءَ اَهْلُ الْمَدِيْنَةِ يَسْتَبْشِرُوْنَ ٦٧

wajāa
وَجَآءَ
வந்தார்(கள்)
ahlu l-madīnati
أَهْلُ ٱلْمَدِينَةِ
அந்நகரவாசிகள்
yastabshirūna
يَسْتَبْشِرُونَ
மகிழ்ச்சியடைந்தவர்களாக
(இதற்கிடையில் லூத் நபியின் வீட்டிற்கு வாலிபர்கள் சிலர் வந்திருப்பதாக அறிந்து) அவ்வூரார் மிக்க சந்தோஷத்துடன் (லூத் நபியின் வீட்டிற்கு) வந்து (கூடி) விட்டனர். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௬௭)
Tafseer
௬௮

قَالَ اِنَّ هٰٓؤُلَاۤءِ ضَيْفِيْ فَلَا تَفْضَحُوْنِۙ ٦٨

qāla
قَالَ
கூறினார்
inna hāulāi
إِنَّ هَٰٓؤُلَآءِ
நிச்சயமாக இவர்கள்
ḍayfī
ضَيْفِى
என் விருந்தினர்
falā tafḍaḥūni
فَلَا تَفْضَحُونِ
ஆகவே அவமானப்படுத் தாதீர்கள்/என்னை
(லூத் நபி அவர்களை நோக்கி) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தாளிகள். ஆகவே, (அவர்கள் முன்பாக) நீங்கள் என்னை இழிவுபடுத்தாதீர்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௬௮)
Tafseer
௬௯

وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ ٦٩

wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
walā tukh'zūni
وَلَا تُخْزُونِ
இன்னும் இழிவு படுத்தாதீர்கள்/என்னை
அன்றி நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; என்னை அவமானப்படுத்தாதீர்கள்" என்று கூறினார். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௬௯)
Tafseer
௭௦

قَالُوْٓا اَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعٰلَمِيْنَ ٧٠

qālū
قَالُوٓا۟
கூறினர்
awalam nanhaka
أَوَلَمْ نَنْهَكَ
நாம் தடுக்கவில்லையா?/உம்மை
ʿani l-ʿālamīna
عَنِ ٱلْعَٰلَمِينَ
உலகமக்களை விட்டு
அதற்கவர்கள் "உலகில் யாராயிருந்தாலும் (சிபாரிசுக்கு) நீங்கள் வரக்கூடாதென்று நாம் உங்களைத் தடுத்திருக்கவில்லையா?" என்று கூறினார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௭௦)
Tafseer