Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் - Page: 6

Al-Hijr

(al-Ḥijr)

௫௧

وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ اِبْرٰهِيْمَۘ ٥١

wanabbi'hum
وَنَبِّئْهُمْ
அறிவிப்பீராக/அவர்களுக்கு
ʿan ḍayfi
عَن ضَيْفِ
விருந்தாளிகள் பற்றி
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுடைய
(நபியே!) இப்ராஹீமுடைய விருந்தாளிகளின் வரலாற்றை நீங்கள் அவர்களுக்கு அறிவியுங்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௫௧)
Tafseer
௫௨

اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًاۗ قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ ٥٢

idh dakhalū
إِذْ دَخَلُوا۟
அவர்கள் நுழைந்த போது
ʿalayhi
عَلَيْهِ
அவரிடம்
faqālū
فَقَالُوا۟
கூறினர்
salāman
سَلَٰمًا
ஸலாம்
qāla
قَالَ
கூறினார்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
minkum
مِنكُمْ
உங்களைப் பற்றி
wajilūna
وَجِلُونَ
பயமுள்ளவர்கள்
அவர்கள் இப்ராஹீமிடம் சென்று "ஸலாமுன்" (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) என்று கூறியதற்கு, அவர் "நிச்சயமாக நான் உங்களைப் பற்றி பயப்படுகிறேன்" என்றார். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௫௨)
Tafseer
௫௩

قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِيْمٍ ٥٣

qālū
قَالُوا۟
கூறினார்கள்
lā tawjal
لَا تَوْجَلْ
பயப்படாதீர்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
nubashiruka
نُبَشِّرُكَ
நற்செய்திகூறுகிறோம் உமக்கு
bighulāmin
بِغُلَٰمٍ
ஒரு மகனைக் கொண்டு
ʿalīmin
عَلِيمٍ
அறிஞர்
அதற்கவர்கள், "நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக நாம் உங்களுக்கு மிக்க ஞானமுடைய ஓர் மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்" என்று கூறினார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௫௩)
Tafseer
௫௪

قَالَ اَبَشَّرْتُمُوْنِيْ عَلٰٓى اَنْ مَّسَّنِيَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ ٥٤

qāla
قَالَ
கூறினார்
abashartumūnī
أَبَشَّرْتُمُونِى
எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா?
ʿalā an massaniya
عَلَىٰٓ أَن مَّسَّنِىَ
எனக்கு ஏற்பட்டிருக்க
l-kibaru
ٱلْكِبَرُ
முதுமை
fabima
فَبِمَ
எதைக் கொண்டு?
tubashirūna
تُبَشِّرُونَ
நற்செய்தி கூறுகிறீர்கள்
அதற்கவர் "இம்முதுமையிலா நீங்கள் எனக்கு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றீர்கள்!" என்று கூறினார். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௫௪)
Tafseer
௫௫

قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِيْنَ ٥٥

qālū
قَالُوا۟
கூறினார்கள்
basharnāka
بَشَّرْنَٰكَ
நற்செய்தி கூறினோம்/உமக்கு
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
falā takun
فَلَا تَكُن
ஆகவே ஆகிவிடாதீர்
mina l-qāniṭīna
مِّنَ ٱلْقَٰنِطِينَ
அவநம்பிக்கையாளர்களில்
அதற்கவர்கள், ("பரிகாசமாக அல்ல) மெய்யாகவே நாங்கள் உங்களுக்கு (மகனைப் பற்றி) நற்செய்தி கூறுகிறோம். (அதைப்பற்றி) நீங்கள் அவநம்பிக்கைக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௫௫)
Tafseer
௫௬

قَالَ وَمَنْ يَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖٓ اِلَّا الضَّاۤلُّوْنَ ٥٦

qāla
قَالَ
கூறினார்
waman
وَمَن
யார்?
yaqnaṭu
يَقْنَطُ
அவநம்பிக்கை கொள்வார்
min raḥmati
مِن رَّحْمَةِ
அருளில் இருந்து
rabbihi
رَبِّهِۦٓ
தன் இறைவனின்
illā
إِلَّا
தவிர
l-ḍālūna
ٱلضَّآلُّونَ
வழிகெட்டவர்கள்
அதற்கவர், "வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவன் அருளைப் பற்றி எவன்தான் அவநம்பிக்கை கொள்ளக்கூடும்" என்றார். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௫௬)
Tafseer
௫௭

قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَ ٥٧

qāla
قَالَ
கூறினார்
famā
فَمَا
என்ன?
khaṭbukum
خَطْبُكُمْ
உங்கள் காரியம்
ayyuhā l-mur'salūna
أَيُّهَا ٱلْمُرْسَلُونَ
தூதர்களே!
(பின்னர் மலக்குகளை நோக்கி, "இறைவனால்) அனுப்பப்பட்டவர்களே! உங்கள் விஷயமென்ன?" என்று கேட்டார். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௫௭)
Tafseer
௫௮

قَالُوْٓا اِنَّآ اُرْسِلْنَآ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ ٥٨

qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
ur'sil'nā
أُرْسِلْنَآ
அனுப்பப்பட்டோம்
ilā
إِلَىٰ
பக்கம்
qawmin
قَوْمٍ
மக்களின்
muj'rimīna
مُّجْرِمِينَ
குற்றம் புரிகின்றவர்கள்
அதற்கவர்கள் "(மிகப்பெரிய) குற்றம் செய்து கொண்டிருக்கும் மக்களிடம் (அவர்களை அழித்துவிட) மெய்யாகவே நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௫௮)
Tafseer
௫௯

اِلَّآ اٰلَ لُوْطٍۗ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِيْنَۙ ٥٩

illā
إِلَّآ
தவிர
āla
ءَالَ
குடும்பத்தார்
lūṭin
لُوطٍ
லூத்துடைய
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
lamunajjūhum
لَمُنَجُّوهُمْ
பாதுகாப்பவர்கள்தான் அவர்களை
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
"எனினும், லூத்துடைய சந்ததிகளைத் தவிர (மற்ற அனைவரையும் அழித்து விடுவோம்.) நிச்சயமாக நாங்கள் அவர் (சந்ததி)கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்வோம் ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௫௯)
Tafseer
௬௦

اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَآ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِيْنَ ࣖ ٦٠

illā
إِلَّا
தவிர
im'ra-atahu
ٱمْرَأَتَهُۥ
அவருடைய மனைவி
qaddarnā
قَدَّرْنَآۙ
முடிவு செய்தோம்
innahā
إِنَّهَا
நிச்சயமாக அவள்
lamina l-ghābirīna
لَمِنَ ٱلْغَٰبِرِينَ
தங்கிவிடுபவர்களில்தான்
எனினும், அவருடைய மனைவியைத் தவிர, நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிடுவாளென்று நாம் முடிவு செய்துவிட்டோம்" (என்று இறைவன் கூறியதாகக் கூறினார்கள்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௬௦)
Tafseer