Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் - Page: 5

Al-Hijr

(al-Ḥijr)

௪௧

قَالَ هٰذَا صِرَاطٌ عَلَيَّ مُسْتَقِيْمٌ ٤١

qāla
قَالَ
கூறினான்
hādhā ṣirāṭun
هَٰذَا صِرَٰطٌ
இது/வழி
ʿalayya
عَلَىَّ
என் பக்கம்
mus'taqīmun
مُسْتَقِيمٌ
நேரானது
அதற்கு (இறைவன்) கூறியதாவது: "அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி." ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௪௧)
Tafseer
௪௨

اِنَّ عِبَادِيْ لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغٰوِيْنَ ٤٢

inna
إِنَّ
நிச்சயமாக
ʿibādī
عِبَادِى
என் அடியார்கள்
laysa laka
لَيْسَ لَكَ
இல்லை/உனக்கு
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
sul'ṭānun
سُلْطَٰنٌ
அதிகாரம்
illā mani
إِلَّا مَنِ
தவிர/எவர்(கள்)
ittabaʿaka
ٱتَّبَعَكَ
பின்பற்றுகின்றார்(கள்)/ உன்னை
mina l-ghāwīna
مِنَ ٱلْغَاوِينَ
வழிகெட்டவர்கள்
(மனத்தூய்மையுடைய) என் அடியார்களிடத்தில் நிச்சயமாக உனக்கு யாதொரு செல்வாக்கும் இருக்காது. வழிகேட்டில் உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர. ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௪௨)
Tafseer
௪௩

وَاِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِيْنَۙ ٤٣

wa-inna jahannama
وَإِنَّ جَهَنَّمَ
நிச்சயமாக/நரகம்
lamawʿiduhum
لَمَوْعِدُهُمْ
வாக்களிக்கப்பட்ட இடம்/அவர்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரின்
(உன்னைப் பின்பற்றிய) அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடம் நிச்சயமாக நரகம்தான். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௪௩)
Tafseer
௪௪

لَهَا سَبْعَةُ اَبْوَابٍۗ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ ࣖ ٤٤

lahā
لَهَا
அதற்கு
sabʿatu
سَبْعَةُ
ஏழு
abwābin
أَبْوَٰبٍ
வாசல்கள்
likulli
لِّكُلِّ
ஒவ்வொரு
bābin
بَابٍ
வாசலுக்கும்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
juz'on
جُزْءٌ
ஒரு பிரிவினர்
maqsūmun
مَّقْسُومٌ
பிரிக்கப்பட்ட
அந்நரகத்திற்கு ஏழு வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் (செல்லக்கூடிய வகையில்) அவர்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௪௪)
Tafseer
௪௫

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۗ ٤٥

inna
إِنَّ
நிச்சயமாக
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
அஞ்சியவா்கள்
fī jannātin
فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
waʿuyūnin
وَعُيُونٍ
இன்னும் நீரருவிகளில்
நிச்சயமாக, இறை அச்சமுடையவர்களோ சுவனபதிகளிலும் (அதிலுள்ள) நீரருவிகளிலும் (உல்லாசமாக) இருப்பார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௪௫)
Tafseer
௪௬

اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِيْنَ ٤٦

ud'khulūhā
ٱدْخُلُوهَا
நுழையுங்கள் அதில்
bisalāmin
بِسَلَٰمٍ
ஸலாம் உடன்
āminīna
ءَامِنِينَ
அச்சமற்றவர்களாக
(அவர்களை நோக்கி) நீங்கள் ஈடேற்றத்துடனும் அச்சமற்றவர்களாகவும் இதில் நுழையுங்கள்" (என்று கூறப்படும்). ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௪௬)
Tafseer
௪௭

وَنَزَعْنَا مَا فِيْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ ٤٧

wanazaʿnā
وَنَزَعْنَا
நீக்கிவிடுவோம்
mā fī ṣudūrihim
مَا فِى صُدُورِهِم
எதை/நெஞ்சங்களில்/அவர்களுடைய
min ghillin
مِّنْ غِلٍّ
குரோதத்தை
ikh'wānan
إِخْوَٰنًا
சகோதரர்களாக
ʿalā sururin
عَلَىٰ سُرُرٍ
கட்டில்கள் மீது
mutaqābilīna
مُّتَقَٰبِلِينَ
ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக
(ஒருவருக்கு ஒருவர் மீது இம்மையில்) அவர்களின் மனதில் இருந்த குரோதங்களை நாம் நீக்கிவிடுவோம். (அவர்களும்) மெய்யான சகோதரர்களாக ஒருவர் ஒருவரை முகம் நோக்கி கட்டில்களில் (உல்லாசமாகச் சாய்ந்து) இருப்பார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௪௭)
Tafseer
௪௮

لَا يَمَسُّهُمْ فِيْهَا نَصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِيْنَ ٤٨

lā yamassuhum
لَا يَمَسُّهُمْ
ஏற்படாது/அவர்களுக்கு
fīhā
فِيهَا
அதில்
naṣabun
نَصَبٌ
சிரமம்
wamā
وَمَا
இன்னும் இல்லை
hum
هُم
அவர்கள்
min'hā
مِّنْهَا
அதிலிருந்து
bimukh'rajīna
بِمُخْرَجِينَ
வெளியேற்றப்படுபவர்களாக
அதில் அவர்களை யாதொரு சிரமமும் அணுகாது. அதில் இருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௪௮)
Tafseer
௪௯

۞ نَبِّئْ عِبَادِيْٓ اَنِّيْٓ اَنَا الْغَفُوْرُ الرَّحِيْمُۙ ٤٩

nabbi
نَبِّئْ
அறிவிப்பீராக
ʿibādī
عِبَادِىٓ
என் அடியார்களுக்கு
annī anā
أَنِّىٓ أَنَا
நிச்சயமாக நான்தான்
l-ghafūru
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்
(நபியே!) நீங்கள் என்னுடைய அடியார்களுக்கு அறிவியுங்கள்: "நிச்சயமாக நான் மிக்க மன்னிக்கும் கிருபை உடையவன். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௪௯)
Tafseer
௫௦

وَاَنَّ عَذَابِيْ هُوَ الْعَذَابُ الْاَلِيْمُ ٥٠

wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ʿadhābī huwa
عَذَابِى هُوَ
என் வேதனைதான்
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
l-alīmu
ٱلْأَلِيمُ
துன்புறுத்தக்கூடியது
(ஆயினும்) என்னுடைய வேதனையும் நிச்சயமாக மிக்க கொடியதே!" ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௫௦)
Tafseer