Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் - Page: 4

Al-Hijr

(al-Ḥijr)

௩௧

اِلَّآ اِبْلِيْسَۗ اَبٰىٓ اَنْ يَّكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ ٣١

illā ib'līsa
إِلَّآ إِبْلِيسَ
இப்லீஸைத் தவிர
abā
أَبَىٰٓ
மறுத்து விட்டான்
an yakūna maʿa
أَن يَكُونَ مَعَ
ஆகுவதற்கு/உடன்
l-sājidīna
ٱلسَّٰجِدِينَ
சிரம் பணிந்தவர்கள்
இப்லீஸைத் தவிர; (அவன்) சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௩௧)
Tafseer
௩௨

قَالَ يٰٓاِبْلِيْسُ مَا لَكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ ٣٢

qāla
قَالَ
கூறினான்
yāib'līsu
يَٰٓإِبْلِيسُ
இப்லீஸே!
mā laka
مَا لَكَ
உனக்கென்ன நேர்ந்தது?
allā takūna
أَلَّا تَكُونَ
நீ ஆகாதிருக்க
maʿa
مَعَ
உடன்
l-sājidīna
ٱلسَّٰجِدِينَ
சிரம் பணிந்தவர்கள்
(அதற்கு உங்கள் இறைவன் இப்லீஸை நோக்கி) "இப்லீஸை! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன?" என்று கேட்டான். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௩௨)
Tafseer
௩௩

قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ٣٣

qāla
قَالَ
கூறினான்
lam akun
لَمْ أَكُن
நான் இல்லை
li-asjuda
لِّأَسْجُدَ
சிரம் பணிபவனாக
libasharin
لِبَشَرٍ
ஒரு மனிதனுக்கு
khalaqtahu
خَلَقْتَهُۥ
படைத்தாய்/அவனை
min
مِن
இருந்து
ṣalṣālin
صَلْصَٰلٍ
‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது
min
مِّنْ
இருந்து
ḥama-in
حَمَإٍ
களிமண்
masnūnin
مَّسْنُونٍ
பிசுபிசுப்பானது
அதற்கவன் "(காய்ந்தால்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு (நெருப்பால் படைக்கப்பட்ட) நான் சிரம் பணிவதற்கில்லை; (ஏனென்றால், நான் அவரைவிட மேலானவன்)" என்று கூறினான். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௩௩)
Tafseer
௩௪

قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌۙ ٣٤

qāla fa-ukh'ruj
قَالَ فَٱخْرُجْ
கூறினான்/வெளியேறு
min'hā
مِنْهَا
இதிலிருந்து
fa-innaka
فَإِنَّكَ
நிச்சயமாக நீ
rajīmun
رَجِيمٌ
விரட்டப்பட்டவன்
அதற்கு இறைவன் "நீ இங்கிருந்து அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எம் சந்நிதியிலிருந்து) விரட்டப்பட்டு விட்டாய்" என்று கூறினான். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௩௪)
Tafseer
௩௫

وَّاِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ اِلٰى يَوْمِ الدِّيْنِ ٣٥

wa-inna
وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
l-laʿnata
ٱللَّعْنَةَ
சாபம்
ilā yawmi l-dīni
إِلَىٰ يَوْمِ ٱلدِّينِ
கூலி நாள் வரை
அன்றி "விசாரணை நாள் (வரும்) வரையில் உன்மீது நிச்சயமாக என்னுடைய சாபமும் (கோபமும்) உண்டாவதாக!" (என்றும் கூறினான்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௩௫)
Tafseer
௩௬

قَالَ رَبِّ فَاَنْظِرْنِيْٓ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ ٣٦

qāla
قَالَ
கூறினான்
rabbi
رَبِّ
என் இறைவா
fa-anẓir'nī
فَأَنظِرْنِىٓ
அவகாசமளி எனக்கு
ilā
إِلَىٰ
வரை
yawmi
يَوْمِ
நாள்
yub'ʿathūna
يُبْعَثُونَ
எழுப்பப்படுவார்கள்
அதற்கவன் "என் இறைவனே! (இறந்தவர்கள்) உயிர் பெற்றெழும்பும் நாள் (வரும்) வரையில் நீ எனக்கு அவகாசமளி" என்று கேட்டான். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௩௬)
Tafseer
௩௭

قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ ٣٧

qāla
قَالَ
கூறினான்
fa-innaka
فَإِنَّكَ
நிச்சயமாக நீ
mina l-munẓarīna
مِنَ ٱلْمُنظَرِينَ
அவகாசமளிக்கப்பட்டவர்களில்
அதற்கு (இறைவன்) "நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது" என்றான். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௩௭)
Tafseer
௩௮

اِلٰى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ ٣٨

ilā
إِلَىٰ
வரை
yawmi
يَوْمِ
நாள்
l-waqti
ٱلْوَقْتِ
நேரத்தின்
l-maʿlūmi
ٱلْمَعْلُومِ
குறிப்பிடப்பட்டது
அதற்கு (இறைவன்) "நிச்சயமாக (அவ்வாறே) குறிப்பிட்ட அந்நாள் வரையிலும் உனக்கு அவகாசமளிக்கப்பட்டது" என்றான். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௩௮)
Tafseer
௩௯

قَالَ رَبِّ بِمَآ اَغْوَيْتَنِيْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَۙ ٣٩

qāla
قَالَ
கூறினான்
rabbi
رَبِّ
என் இறைவா
bimā aghwaytanī
بِمَآ أَغْوَيْتَنِى
நீ வழி கெடுத்ததன் காரணமாக/என்னை
la-uzayyinanna
لَأُزَيِّنَنَّ
நிச்சயமாக அலங்கரிப்பேன்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wala-ugh'wiyannahum
وَلَأُغْوِيَنَّهُمْ
இன்னும் நிச்சயமாக வழிகெடுப்பேன்/அவர்களை
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
அதற்கவன் "என் இறைவனே! நீ என் வழியைத் தடுத்துக் கொண்டதன் காரணமாக பூமியிலுள்ள (பொருள்களை) நான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௩௯)
Tafseer
௪௦

اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ ٤٠

illā
إِلَّا
தவிர
ʿibādaka
عِبَادَكَ
உன் அடியார்களை
min'humu
مِنْهُمُ
அவர்களில்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
பரிசுத்தமானவர்கள்
எனினும், அவர்களில் கலப்பற்ற (பரிசுத்த) உள்ளத்தை உடைய உன் (நல்) அடியார்களைத் தவிர; (அவர்களை வழி கெடுக்க என்னால் முடியாது)" என்று கூறினான். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௪௦)
Tafseer