Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் - Page: 3

Al-Hijr

(al-Ḥijr)

௨௧

وَاِنْ مِّنْ شَيْءٍ اِلَّا عِنْدَنَا خَزَاۤىِٕنُهٗ وَمَا نُنَزِّلُهٗٓ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ ٢١

wa-in min shayin
وَإِن مِّن شَىْءٍ
எப்பொருளும்/இல்லை
illā
إِلَّا
தவிர
ʿindanā
عِندَنَا
நம்மிடம்
khazāinuhu
خَزَآئِنُهُۥ
பொக்கிஷங்கள்/அதன்
wamā nunazziluhu
وَمَا نُنَزِّلُهُۥٓ
இன்னும் இறக்க மாட்டோம்/அதை
illā biqadarin
إِلَّا بِقَدَرٍ
தவிர/ஓர் அளவில்
maʿlūmin
مَّعْلُومٍ
குறிப்பிடப்பட்ட
ஒவ்வொரு பொருளின் பொக்கிஷங்களும் நம்மிடமே இருக்கின்றன. எனினும், அவற்றை (அந்தந்தக் காலத்தில் அவற்றிற்குக்) குறிப்பிட்ட அளவில் தான் நாம் இறக்கி வைக்கிறோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨௧)
Tafseer
௨௨

وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَسْقَيْنٰكُمُوْهُۚ وَمَآ اَنْتُمْ لَهٗ بِخَازِنِيْنَ ٢٢

wa-arsalnā
وَأَرْسَلْنَا
இன்னும் அனுப்புகிறோம்
l-riyāḥa
ٱلرِّيَٰحَ
காற்றுகளை
lawāqiḥa
لَوَٰقِحَ
கருக்கொள்ள வைக்கக் கூடியதாக
fa-anzalnā
فَأَنزَلْنَا
இறக்குகிறோம்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
மேகத்திலிருந்து
māan
مَآءً
மழை நீரை
fa-asqaynākumūhu
فَأَسْقَيْنَٰكُمُوهُ
புகட்டுகிறோம்/உங்களுக்கு/அதை
wamā antum
وَمَآ أَنتُمْ
இல்லை/நீங்கள்
lahu
لَهُۥ
அதை
bikhāzinīna
بِخَٰزِنِينَ
சேகரிப்பவர்களாக
மேகம் கருக்கொள்ளும்படியான காற்றையும் நாமே அனுப்பி வைக்கிறோம். அம்மேகத்திலிருந்து மழையையும் நாமே பொழியச் செய்கிறோம். அதனை நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். (மழையின் நீரை மேகத்தில்) நீங்கள் சேகரித்து வைக்கவில்லை; (நாம்தான் சேகரிக்கிறோம்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨௨)
Tafseer
௨௩

وَاِنَّا لَنَحْنُ نُحْيٖ وَنُمِيْتُ وَنَحْنُ الْوَارِثُوْنَ ٢٣

wa-innā lanaḥnu
وَإِنَّا لَنَحْنُ
நிச்சயமாக நாம்தான்
nuḥ'yī
نُحْىِۦ
உயிர் கொடுக்கிறோம்
wanumītu
وَنُمِيتُ
இன்னும் மரணிக்க வைக்கிறோம்
wanaḥnu
وَنَحْنُ
நாம்
l-wārithūna
ٱلْوَٰرِثُونَ
அனந்தரக்காரர்கள்
(உங்களுக்கு) நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கின்றோம்; நாமே (உங்களை) மரணிக்கச் செய்வோம். அனைத்திற்கும் நாமே வாரிசுகள்! (சொந்தக்காரர்கள்). ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨௩)
Tafseer
௨௪

وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِيْنَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِيْنَ ٢٤

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ʿalim'nā
عَلِمْنَا
அறிந்தோம்
l-mus'taqdimīna
ٱلْمُسْتَقْدِمِينَ
முன் சென்றவர்களை
minkum
مِنكُمْ
உங்களில்
walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ʿalim'nā
عَلِمْنَا
அறிந்தோம்
l-mus'takhirīna
ٱلْمُسْتَـْٔخِرِينَ
பின் வருபவர்களை
உங்களுக்கு முன் சென்றவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம்; (உங்களுக்குப்) பின் வரக்கூடியவர்களையும் நிச்சயமாக நாம் அறிவோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨௪)
Tafseer
௨௫

وَاِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْۗ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ ࣖ ٢٥

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka huwa
رَبَّكَ هُوَ
உம் இறைவன்தான்
yaḥshuruhum
يَحْشُرُهُمْۚ
ஒன்று திரட்டுவான் இவர்களை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் இவர்கள் அனைவரையும் (விசாரணைக்காக மறுமையில் தன் முன்) கூட்டுவான். நிச்சயமாக அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨௫)
Tafseer
௨௬

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍۚ ٢٦

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
khalaqnā
خَلَقْنَا
படைத்தோம்
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதனை
min
مِن
இருந்து
ṣalṣālin
صَلْصَٰلٍ
‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது
min ḥama-in
مِّنْ حَمَإٍ
இருந்து/களிமண்
masnūnin
مَّسْنُونٍ
பிசுபிசுப்பானது
(காய்ந்தால் "கன் கன்" என்று) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நிச்சயமாக நாமே (உங்கள் மூலப் பிதாவாகிய முதல்) மனிதனை படைத்தோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨௬)
Tafseer
௨௭

وَالْجَاۤنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ ٢٧

wal-jāna
وَٱلْجَآنَّ
ஜின்னை
khalaqnāhu
خَلَقْنَٰهُ
படைத்தோம்/அதை
min qablu
مِن قَبْلُ
முன்பே
min
مِن
இருந்து
nāri
نَّارِ
நெருப்பு
l-samūmi
ٱلسَّمُومِ
கொடிய உஷ்ணமுள்ளது
அதற்கு முன்னதாக ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨௭)
Tafseer
௨௮

وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰۤىِٕكَةِ اِنِّيْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍۚ ٢٨

wa-idh qāla
وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
innī
إِنِّى
நிச்சயமாக நான்
khāliqun
خَٰلِقٌۢ
படைக்கப்போகிறேன்
basharan
بَشَرًا
ஒரு மனிதனை
min ṣalṣālin
مِّن صَلْصَٰلٍ
‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது
min
مِّنْ
இருந்து
ḥama-in
حَمَإٍ
களிமண்
masnūnin
مَّسْنُونٍ
பிசுபிசுப்பானது
(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நிச்சயமாக நான், மனிதனை (காய்ந்தால்) சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைக்கப் போகிறேன்" என்று கூறிய சமயத்தில், ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨௮)
Tafseer
௨௯

فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِيْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ ٢٩

fa-idhā sawwaytuhu
فَإِذَا سَوَّيْتُهُۥ
நான் செம்மை செய்துவிட்டால்/அவரை
wanafakhtu
وَنَفَخْتُ
இன்னும் ஊதினேன்
fīhi
فِيهِ
அவரில்
min rūḥī
مِن رُّوحِى
என் உயிரிலிருந்து
faqaʿū
فَقَعُوا۟
விழுங்கள்
lahu
لَهُۥ
அவருக்கு முன்
sājidīna
سَٰجِدِينَ
சிரம்பணிந்தவர்களாக
"நான் மனிதனை உருவாக்கி அதில் என் (படைப்புக்கு வேண்டிய) உயிரைப் புகுத்தினால் அவருக்கு (மரியாதை செலுத்த) நீங்கள் சிரம் பணியுங்கள்" (என்று கட்டளையிட்டான்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨௯)
Tafseer
௩௦

فَسَجَدَ الْمَلٰۤىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ ٣٠

fasajada
فَسَجَدَ
சிரம் பணிந்தார்(கள்)
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
kulluhum
كُلُّهُمْ
அவர்கள் எல்லோரும்
ajmaʿūna
أَجْمَعُونَ
அனைவரும்
அவ்வாறே மலக்குகள் அனைவரும் (அவருக்கு மரியாதை செலுத்த) சிரம் பணிந்தார்கள்; ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௩௦)
Tafseer