Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹிஜ்ர் - Word by Word

Al-Hijr

(al-Ḥijr)

bismillaahirrahmaanirrahiim

الۤرٰ ۗتِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِيْنٍ ۔ ١

alif-lam-ra
الٓرۚ
அலிஃப்; லாம்; றா
til'ka
تِلْكَ
இவை
āyātu
ءَايَٰتُ
வசனங்கள்
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதங்களின்
waqur'ānin
وَقُرْءَانٍ
இன்னும் குர்ஆனின்
mubīnin
مُّبِينٍ
தெளிவான(து)
அலிஃப்; லாம்; றா. (நபியே!) இது தெளிவான குர்ஆன் என்னும் (இவ்) வேதத்தில் உள்ள சில வசனங்களாகும். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧)
Tafseer

رُبَمَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِيْنَ ٢

rubamā yawaddu
رُّبَمَا يَوَدُّ
பெரிதும் விரும்புவார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
law kānū
لَوْ كَانُوا۟
தாங்கள் இருந்திருக்க வேண்டுமே!
mus'limīna
مُسْلِمِينَ
முஸ்லிம்களாக
தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே? என்று நிராகரிப்பவர்கள் (மறுமையில்) பெரிதும் விரும்புவர். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௨)
Tafseer

ذَرْهُمْ يَأْكُلُوْا وَيَتَمَتَّعُوْا وَيُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ يَعْلَمُوْنَ ٣

dharhum
ذَرْهُمْ
விடுவீராக/அவர்களை
yakulū
يَأْكُلُوا۟
அவர்கள் புசிக்கட்டும்
wayatamattaʿū
وَيَتَمَتَّعُوا۟
இன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்
wayul'hihimu
وَيُلْهِهِمُ
இன்னும் மறக்கடிக்கட்டும்/அவர்களை
l-amalu
ٱلْأَمَلُۖ
ஆசை
fasawfa yaʿlamūna
فَسَوْفَ يَعْلَمُونَ
(பின்னர்) அறிவார்கள்
(நபியே!) அவர்கள் (நன்கு) புசித்துக்கொண்டும், (தங்கள் இஷ்டப்படி) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க (தற்சமயம்) நீங்கள் அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களுடைய (வீண்) நம்பிக்கைகள் (மறுமையை அவர்களுக்கு) மறக்கடித்து விட்டன. இதன் (பலனை) பின்னர் அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௩)
Tafseer

وَمَآ اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ ٤

wamā ahlaknā
وَمَآ أَهْلَكْنَا
நாம் அழிக்கவில்லை
min qaryatin
مِن قَرْيَةٍ
எவ்வூரையும்
illā walahā
إِلَّا وَلَهَا
தவிர/அதற்கு
kitābun maʿlūmun
كِتَابٌ مَّعْلُومٌ
தவணை/குறிப்பிட்ட
(பாவத்தில் மூழ்கிய) எவ்வூராரையும் அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணையிலன்றி நாம் அவர்களை அழித்துவிடவில்லை. ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௪)
Tafseer

مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَأْخِرُوْنَ ٥

mā tasbiqu
مَّا تَسْبِقُ
முந்த மாட்டா(ர்க)ள்
min ummatin
مِنْ أُمَّةٍ
எந்த சமுதாயமும்
ajalahā
أَجَلَهَا
தங்கள் தவணையை
wamā yastakhirūna
وَمَا يَسْتَـْٔخِرُونَ
இன்னும் பிந்தமாட்டார்கள்
ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௫)
Tafseer

وَقَالُوْا يٰٓاَيُّهَا الَّذِيْ نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌ ۗ ٦

waqālū
وَقَالُوا۟
கூறுகின்றனர்
yāayyuhā
يَٰٓأَيُّهَا
ஓ!
alladhī
ٱلَّذِى
எவர்
nuzzila
نُزِّلَ
இறக்கப்பட்டது
ʿalayhi
عَلَيْهِ
அவர்மீது
l-dhik'ru
ٱلذِّكْرُ
அறிவுரை
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
lamajnūnun
لَمَجْنُونٌ
பைத்தியக்காரர்தான்
(நமது நபியாகிய உங்களை நோக்கி) "வேதம் அருளப்பட்டதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாகப் பைத்தியக் காரர்தான்" என்று கூறுகின்றனர். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௬)
Tafseer

لَوْمَا تَأْتِيْنَا بِالْمَلٰۤىِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ ٧

law mā tatīnā
لَّوْ مَا تَأْتِينَا
நீர்வரலாமே/நம்மிடம்
bil-malāikati
بِٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களைக் கொண்டு
in kunta
إِن كُنتَ
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்
(அன்றி) "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் (உங்களுக்குச் சாட்சியாக) நீங்கள் மலக்குகளை அழைத்துக்கொண்டு வர வேண்டாமா? (என்றும் கூறுகின்றனர்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௭)
Tafseer

مَا نُنَزِّلُ الْمَلٰۤىِٕكَةَ اِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوْٓا اِذًا مُّنْظَرِيْنَ ٨

mā nunazzilu
مَا نُنَزِّلُ
இறக்கமாட்டோம்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
illā bil-ḥaqi
إِلَّا بِٱلْحَقِّ
தவிர/சத்தியத்தைக் கொண்டே
wamā kānū
وَمَا كَانُوٓا۟
இருக்கமாட்டார்கள்
idhan
إِذًا
அப்போது
munẓarīna
مُّنظَرِينَ
அவகாசமளிக்கப்படுபவர்களாக
(நபியே!) நாம் மலக்குகளை இறக்கி வைப்பதெல்லாம் எவருடைய காரியத்தையும் அழிப்பதைக் கொண்டு முடித்துவிடக் கருதினால்தான். அச்சமயம் அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படுவதில்லை. (உடனே அழிக்கப்பட்டுவிடுவர்.) ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௮)
Tafseer

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ٩

innā naḥnu
إِنَّا نَحْنُ
நிச்சயமாக நாம்தான்
nazzalnā
نَزَّلْنَا
இறக்கினோம்
l-dhik'ra
ٱلذِّكْرَ
அறிவுரையை
wa-innā
وَإِنَّا
இன்னும் நிச்சயமாக நாம்
lahu
لَهُۥ
அதை
laḥāfiẓūna
لَحَٰفِظُونَ
பாதுகாப்பவர்கள்
நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உங்கள்மீது) இறக்கி வைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனை பாதுகாத்துக் கொள்வோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௯)
Tafseer
௧௦

وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِيْ شِيَعِ الْاَوَّلِيْنَ ١٠

walaqad arsalnā
وَلَقَدْ أَرْسَلْنَا
திட்டமாக அனுப்பினோம்
min qablika
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
fī shiyaʿi
فِى شِيَعِ
பிரிவுகளில்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களின்
(நபியே!) உங்களுக்கு முன்னர் சென்றுபோன கூட்டங்களுக்கும் நிச்சயமாக நாம் தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். ([௧௫] ஸூரத்துல் ஹிஜ்ர்: ௧௦)
Tafseer