Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௮

Qur'an Surah Ibrahim Verse 48

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَيْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ (ابراهيم : ١٤)

yawma
يَوْمَ
(On the) Day
நாளில்
tubaddalu l-arḍu
تُبَدَّلُ ٱلْأَرْضُ
will be changed the earth
மாற்றப்படும்/பூமி
ghayra l-arḍi
غَيْرَ ٱلْأَرْضِ
(to) other (than) the earth
வேறு பூமியாக
wal-samāwātu
وَٱلسَّمَٰوَٰتُۖ
and the heavens
இன்னும் வானங்கள்
wabarazū
وَبَرَزُوا۟
and they will come forth
இன்னும் வெளிப்படுவர்
lillahi
لِلَّهِ
before Allah
அல்லாஹ்விற்கு
l-wāḥidi
ٱلْوَٰحِدِ
the One
ஒருவன்
l-qahāri
ٱلْقَهَّارِ
the Irresistible
அடக்கி ஆளுபவன்

Transliteration:

Yawma tubaddalul ardu ghairal ardi wassamaawaatu wa barazoo lillaahil Waahidil Qahhaar (QS. ʾIbrāhīm:48)

English Sahih International:

[It will be] on the Day the earth will be replaced by another earth, and the heavens [as well], and they [i.e., all creatures] will come out before Allah, the One, the Prevailing. (QS. Ibrahim, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

(நபியே! ஒரு நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்:) அந்நாளில் இந்தப் பூமியை மாற்றி வேறுவித பூமியாக அமைக்கப் பட்டுவிடும்; வானங்களும் அவ்வாறே. (ஒவ்வொருவரும் தத்தம் இடத்திலிருந்து) வெளிப்பட்டு அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் சந்நிதியில் கூடி விடுவார்கள். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௪௮)

Jan Trust Foundation

இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமி வேறு பூமியாகவும் வானங்களும் (அவ்வாறே) மாற்றப்பட்டு, ஒரே ஒருவனான அடக்கி ஆளுபவனான அல்லாஹ்விற்கு (முன்) அவர்கள் வெளிப்படும் நாளில்...