குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௬
Qur'an Surah Ibrahim Verse 46
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَدْ مَكَرُوْا مَكْرَهُمْ وَعِنْدَ اللّٰهِ مَكْرُهُمْۗ وَاِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُوْلَ مِنْهُ الْجِبَالُ (ابراهيم : ١٤)
- waqad
- وَقَدْ
- And indeed
- திட்டமாக
- makarū
- مَكَرُوا۟
- they planned
- சூழ்ச்சி செய்தனர்
- makrahum
- مَكْرَهُمْ
- their plan
- தங்கள் சூழ்ச்சியை
- waʿinda l-lahi
- وَعِندَ ٱللَّهِ
- but with Allah
- அல்லாஹ்விடம்
- makruhum
- مَكْرُهُمْ
- (was) their plan
- அவர்களுடைய சூழ்ச்சி
- wa-in kāna
- وَإِن كَانَ
- even if was
- இருந்தாலும்
- makruhum
- مَكْرُهُمْ
- their plan
- சூழ்ச்சி அவர்களுடைய
- litazūla
- لِتَزُولَ
- that should be moved
- பெயர்த்துவிடும்படி
- min'hu
- مِنْهُ
- by it
- அதனால்
- l-jibālu
- ٱلْجِبَالُ
- the mountains
- மலைகள்
Transliteration:
Wa qad makaroo makrahum wa 'indal laahi makruhum wa in kaana makruhum litazoola minhul jibaal(QS. ʾIbrāhīm:46)
English Sahih International:
And they had planned their plan, but with Allah is [recorded] their plan, even if their plan had been [sufficient] to do away with the mountains. (QS. Ibrahim, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை இறைவன் முன்பாகவே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகளோ மலைகளையும் பெயர்த்து விடக்கூடியவைகளாக இருக்கின்றன! (ஆயினும், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றும் பலிக்கப் போவதில்லை!) (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௪௬)
Jan Trust Foundation
எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டமாக அவர்கள் தங்கள் சூழ்ச்சியை செய்(து முடித்)தனர். அல்லாஹ்விடம் அவர்களுடைய சூழ்ச்சி (அறியப்பட்ட ஒன்றுதான். அது புதியதல்ல). அவர்களுடைய சூழ்ச்சி அதனால் மலைகள் பெயர்த்துவிடும்படி இருந்தாலும் சரியே! (அல்லாஹ்வின் வல்லமைக்கு முன் அது ஒன்றுமே இல்லை.)