குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௫
Qur'an Surah Ibrahim Verse 45
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّسَكَنْتُمْ فِيْ مَسٰكِنِ الَّذِيْنَ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْاَمْثَالَ (ابراهيم : ١٤)
- wasakantum
- وَسَكَنتُمْ
- And you dwelt
- இன்னும் வசித்தீர்கள்
- fī masākini
- فِى مَسَٰكِنِ
- in the dwellings
- வசிப்பிடங்களில்
- alladhīna
- ٱلَّذِينَ
- (of) those who
- எவர்கள்
- ẓalamū
- ظَلَمُوٓا۟
- wronged
- தீங்கிழைத்தனர்
- anfusahum
- أَنفُسَهُمْ
- themselves
- தமக்குத்தாமே
- watabayyana
- وَتَبَيَّنَ
- and it had become clear
- இன்னும் தெளிவானது
- lakum kayfa
- لَكُمْ كَيْفَ
- to you how
- உங்களுக்கு/எப்படி
- faʿalnā
- فَعَلْنَا
- We dealt
- நாம் செய்தோம்
- bihim
- بِهِمْ
- with them
- அவர்களுக்கு
- waḍarabnā
- وَضَرَبْنَا
- and We put forth
- இன்னும் விவரித்தோம்
- lakumu
- لَكُمُ
- for you
- உங்களுக்கு
- l-amthāla
- ٱلْأَمْثَالَ
- the examples"
- உதாரணங்களை
Transliteration:
Wa sakantum fee masaakinil lazeena zalamooo anfusahum wa tabaiyana lakum kaifa fa'alnaa bihim wa darabnaa lakumul amsaal(QS. ʾIbrāhīm:45)
English Sahih International:
And you lived among the dwellings of those who wronged themselves, and it had become clear to you how We dealt with them. And We presented for you [many] examples." (QS. Ibrahim, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
அன்றி "தமக்குத்தாமே தீங்கிழைத்து(க் கொண்டு அழிந்து போனவர்கள்) வசித்திருந்த இடத்தில் நீங்களும் வசித்திருக்க வில்லையா? (என்றும்), நாம் அவர்களை என்ன செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கவில்லையா? (இதனைப் பற்றி) உங்களுக்குப் பல உதாரணங்களையும் நாம் எடுத்துக் கூற வில்லையா" (என்றும் பதில் கூறுவான்.) (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௪௫)
Jan Trust Foundation
அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்கு தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“தமக்குத்தாமே தீங்கிழைத்தவர்களுடைய வசிப்பிடங்களில் (நீங்களும்) வசித்தீர்கள் (அல்லவா)? நாம் அவர்களுக்கு எப்படி செய்தோம் என்பது உங்களுக்கு தெளிவாக இருந்தது. உங்களுக்கு உதாரணங்களை விவரித்தோம்.”