Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௪

Qur'an Surah Ibrahim Verse 44

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيْهِمُ الْعَذَابُۙ فَيَقُوْلُ الَّذِيْنَ ظَلَمُوْا رَبَّنَآ اَخِّرْنَآ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَۗ اَوَلَمْ تَكُوْنُوْٓا اَقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَا لَكُمْ مِّنْ زَوَالٍۙ (ابراهيم : ١٤)

wa-andhiri
وَأَنذِرِ
And warn
எச்சரிப்பீராக
l-nāsa
ٱلنَّاسَ
the mankind
மக்களை
yawma
يَوْمَ
(of) a Day
நாள்
yatīhimu
يَأْتِيهِمُ
(when) will come to them
அவர்களுக்கு வரும்
l-ʿadhābu
ٱلْعَذَابُ
the punishment
வேதனை
fayaqūlu
فَيَقُولُ
then will say
கூறுவர்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
did wrong
அநியாயம் செய்தனர்
rabbanā
رَبَّنَآ
"Our Lord!
எங்கள் இறைவா
akhir'nā
أَخِّرْنَآ
Respite us
எங்களை பிற்படுத்து
ilā
إِلَىٰٓ
for
வரை
ajalin
أَجَلٍ
a term
ஒரு தவனை
qarībin
قَرِيبٍ
short
சமீபமானது
nujib
نُّجِبْ
we will answer
பதிலளிப்போம்
daʿwataka
دَعْوَتَكَ
Your call
உன் அழைப்புக்கு
wanattabiʿi
وَنَتَّبِعِ
and we will follow
இன்னும் பின்பற்றுவோம்
l-rusula
ٱلرُّسُلَۗ
the Messengers"
தூதர்களை
awalam takūnū
أَوَلَمْ تَكُونُوٓا۟
"Had not you
நீங்கள் இருக்கவில்லையா?
aqsamtum
أَقْسَمْتُم
sworn
சத்தியம் செய்தீர்கள்
min qablu
مِّن قَبْلُ
before before
இதற்கு முன்னர்
mā lakum
مَا لَكُم
not for you
உங்களுக்கு இல்லை
min zawālin
مِّن زَوَالٍ
any end?
அழிவே

Transliteration:

Wa anzirin naasa Yawma yaateehimul 'azaabu fa yaqoolul lazeena zalamoo Rabbanaaa akhkhirnaaa ilaaa ajalin qareebin nujib da'wataka wa nattabi 'ir Rusul; awalam takoonooo aqsamtum min qablu maa lakum min zawaal (QS. ʾIbrāhīm:44)

English Sahih International:

And, [O Muhammad], warn the people of a Day when the punishment will come to them and those who did wrong will say, "Our Lord, delay us for a short term; we will answer Your call and follow the messengers." [But it will be said], "Had you not sworn, before, that for you there would be no cessation? (QS. Ibrahim, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) இத்தகைய வேதனை நாள் வருவதைப் பற்றி நீங்கள் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். வரம்பு மீறியவர்கள் (அந்நாளில் தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு சொற்பத் தவணையளி! நாங்கள் உன் அழைப்புக்கு (இனி) செவி கொடுத்து, (உன்) தூதரைப் பின்பற்றி நடப்போம்" என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) "இதற்கு முன்னர் நீங்கள் உங்களு(டைய இவ்வுலக வாழ்க்கை)க்கு அழிவே இல்லை என்று சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?" (என்று கேட்பான்.) (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௪௪)

Jan Trust Foundation

எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா?” (என்றும்)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) மக்களை, அவர்களுக்கு வேதனை வரும் ஒரு நாளைப் பற்றி எச்சரிப்பீராக! அநியாயக்காரர்கள் கூறுவர்: “எங்கள் இறைவா! சமீபமான ஒரு தவணை வரை எங்களை (இன்னும்) பிற்படுத்து! உன் அழைப்புக்கு பதிலளிப்போம்; தூதர்களைப் பின்பற்றுவோம்.” (இறைவன் கூறுவான்:) “உங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்திருக்கவில்லையா?”