குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௩
Qur'an Surah Ibrahim Verse 43
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مُهْطِعِيْنَ مُقْنِعِيْ رُءُوْسِهِمْ لَا يَرْتَدُّ اِلَيْهِمْ طَرْفُهُمْ ۚوَاَفْـِٕدَتُهُمْ هَوَاۤءٌ ۗ (ابراهيم : ١٤)
- muh'ṭiʿīna
- مُهْطِعِينَ
- Racing ahead
- விரைந்தவர்களாக
- muq'niʿī
- مُقْنِعِى
- raised up
- உயர்த்தியவர்களாக
- ruūsihim
- رُءُوسِهِمْ
- their heads
- தங்கள் தலைகளை
- lā yartaddu
- لَا يَرْتَدُّ
- not returning
- திரும்பாது
- ilayhim
- إِلَيْهِمْ
- towards them
- அவர்களிடம்
- ṭarfuhum
- طَرْفُهُمْۖ
- their gaze
- அவர்களின் பார்வை
- wa-afidatuhum
- وَأَفْـِٔدَتُهُمْ
- and their hearts
- அவர்களுடைய உள்ளங்கள்
- hawāon
- هَوَآءٌ
- (are) empty
- வெற்றிடமாக
Transliteration:
Muhti'eena muqni'ee ru'oosihim laa yartaddu ilaihim tarfuhum wa af'idatuhum hawaaa'(QS. ʾIbrāhīm:43)
English Sahih International:
Racing ahead, their heads raised up, their glance does not come back to them, and their hearts are void. (QS. Ibrahim, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
(அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௪௩)
Jan Trust Foundation
(அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அந்நாளில்) விரைந்தவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாக... (வருவர்.) அவர்களின் பார்வை அவர்களிடம் திரும்பாது; அவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) வெற்றிடமாக ஆகிவிடும்.