Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௨

Qur'an Surah Ibrahim Verse 42

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ ەۗ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُۙ (ابراهيم : ١٤)

walā taḥsabanna
وَلَا تَحْسَبَنَّ
And (do) not think
எண்ணி விடாதீர்
l-laha
ٱللَّهَ
(that) Allah
அல்லாஹ்வை
ghāfilan
غَٰفِلًا
(is) unaware
கவனிக்காதவனாக
ʿammā yaʿmalu
عَمَّا يَعْمَلُ
of what do
செய்வதைப் பற்றி
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَۚ
the wrongdoers
அக்கிரமக்காரர்கள்
innamā
إِنَّمَا
Only
பிற்படுத்துவதெல்லாம்
yu-akhiruhum
يُؤَخِّرُهُمْ
He gives them respite
பிற்படுத்துவதெல்லாம் அவர்களை
liyawmin
لِيَوْمٍ
to a Day
ஒரு நாளுக்காக
tashkhaṣu
تَشْخَصُ
will stare
கூர்ந்து விழித்திடும்
fīhi
فِيهِ
in it
அதில்
l-abṣāru
ٱلْأَبْصَٰرُ
the eyes
பார்வைகள்

Transliteration:

Wa laa tahsabannal laaha ghaafilan 'ammaa ya'maluz zaalimoon; innamaa yu'akh khiruhum li Yawmin tashkhasu feehil absaar (QS. ʾIbrāhīm:42)

English Sahih International:

And never think that Allah is unaware of what the wrongdoers do. He only delays them [i.e., their account] for a Day when eyes will stare [in horror]. (QS. Ibrahim, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான்! (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௪௨)

Jan Trust Foundation

மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அக்கிரமக்காரர்கள் செய்வதைப் பற்றி கவனிக்காதவனாக அல்லாஹ்வை எண்ணி விடாதீர்! அவன் அவர்களை பிற்படுத்துவதெல்லாம், பார்வைகள் அதில் கூர்ந்து விழித்திடும் ஒரு நாளுக்காகத்தான்.