Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௩௯

Qur'an Surah Ibrahim Verse 39

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ وَهَبَ لِيْ عَلَى الْكِبَرِ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَۗ اِنَّ رَبِّيْ لَسَمِيْعُ الدُّعَاۤءِ (ابراهيم : ١٤)

al-ḥamdu
ٱلْحَمْدُ
All the Praise
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
(is) for Allah
அல்லாஹ்விற்கே
alladhī
ٱلَّذِى
the One Who
எத்தகையவன்
wahaba
وَهَبَ
has granted
வழங்கினான்
لِى
me
எனக்கு
ʿalā l-kibari
عَلَى ٱلْكِبَرِ
in the old age
வயோதிகத்தில்
is'māʿīla
إِسْمَٰعِيلَ
Ismail
இஸ்மாயீலை
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَۚ
and Ishaq
இன்னும் இஸ்ஹாக்கை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbī
رَبِّى
my Lord
என் இறைவன்
lasamīʿu
لَسَمِيعُ
(is) All-Hearer
நன்கு செவியுறுபவன்
l-duʿāi
ٱلدُّعَآءِ
(of) the prayer
பிரார்த்தனையை

Transliteration:

Alhamdu lillaahil lazee wahaba lee 'alal kibari Ismaa'eela wa Ishaaq; inna Rabbee lasamee'ud du'aaa (QS. ʾIbrāhīm:39)

English Sahih International:

Praise to Allah, who has granted to me in old age Ishmael and Isaac. Indeed, my Lord is the Hearer of supplication. (QS. Ibrahim, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியது; அவன்தான் இவ்வயோதிக(கால)த்தில் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவனாக இருக்கிறான். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௩௯)

Jan Trust Foundation

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன் ஆவான்.