Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௩௭

Qur'an Surah Ibrahim Verse 37

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبَّنَآ اِنِّيْٓ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِيْ بِوَادٍ غَيْرِ ذِيْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوا الصَّلٰوةَ فَاجْعَلْ اَفْـِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِيْٓ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ (ابراهيم : ١٤)

rabbanā
رَّبَّنَآ
Our Lord!
எங்கள் இறைவா
innī
إِنِّىٓ
Indeed, I
நிச்சயமாக நான்
askantu
أَسْكَنتُ
[I] have settled
வசிக்க வைத்தேன்
min dhurriyyatī
مِن ذُرِّيَّتِى
(some) of my offsprings
என் சந்ததிகளில் சில
biwādin
بِوَادٍ
in a valley
ஒரு பள்ளத்தாக்கில்
ghayri dhī zarʿin
غَيْرِ ذِى زَرْعٍ
not with cultivation
விவசாயமற்றது
ʿinda
عِندَ
near
அருகில்
baytika
بَيْتِكَ
Your Sacred House
உன் வீட்டின்
l-muḥarami
ٱلْمُحَرَّمِ
Your Sacred House
புனிதமாக்கப்பட்டது
rabbanā
رَبَّنَا
our Lord!
எங்கள் இறைவா
liyuqīmū
لِيُقِيمُوا۟
That they may establish
அவர்கள் நிலைநிறுத்துவதற்காக
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayers
அவர்கள் தொழுகையை
fa-ij'ʿal
فَٱجْعَلْ
So make
ஆகவே ஆக்கு
afidatan
أَفْـِٔدَةً
hearts
உள்ளங்களை
mina l-nāsi
مِّنَ ٱلنَّاسِ
of the men
மக்களிலிருந்து
tahwī
تَهْوِىٓ
incline
ஆசைப்படக்கூடியதாக
ilayhim
إِلَيْهِمْ
towards them
அவர்கள் பக்கம்
wa-ur'zuq'hum
وَٱرْزُقْهُم
and provide them
இன்னும் உணவளி/அவர்களுக்கு
mina l-thamarāti
مِّنَ ٱلثَّمَرَٰتِ
with the fruits
கனிகளிலிருந்து
laʿallahum yashkurūna
لَعَلَّهُمْ يَشْكُرُونَ
so that they may be grateful
அவர்கள் நன்றி செலுத்துவதற்காக

Transliteration:

Rabbanaaa inneee askantu min zurriyyatee biwaadin ghairi zee zar'in 'inda Baitikal Muharrami Rabbanaa liyuqeemus Salaata faj'al af'idatam minan naasi tahweee ilaihim warzuqhum minas samaraati la'allahum yashkuroon (QS. ʾIbrāhīm:37)

English Sahih International:

Our Lord, I have settled some of my descendants in an uncultivated valley near Your sacred House, our Lord, that they may establish prayer. So make hearts among the people incline toward them and provide for them from the fruits that they might be grateful. (QS. Ibrahim, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாயமற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்.) மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நோக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௩௭)

Jan Trust Foundation

“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை புனிதமாக்கப்பட்ட உன் வீட்டின் அருகில், விவசாயமற்ற ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்காக வசிக்க வைத்தேன் எங்கள் இறைவா! ஆகவே, மக்களிலிருந்து (சிலருடைய) உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு! அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளி!