குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௩௬
Qur'an Surah Ibrahim Verse 36
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبِّ اِنَّهُنَّ اَضْلَلْنَ كَثِيْرًا مِّنَ النَّاسِۚ فَمَنْ تَبِعَنِيْ فَاِنَّهٗ مِنِّيْۚ وَمَنْ عَصَانِيْ فَاِنَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ (ابراهيم : ١٤)
- rabbi
- رَبِّ
- My Lord!
- என் இறைவா
- innahunna
- إِنَّهُنَّ
- Indeed they
- நிச்சயமாக இவை
- aḍlalna
- أَضْلَلْنَ
- have led astray
- வழி கெடுத்தன
- kathīran
- كَثِيرًا
- many
- பலரை
- mina l-nāsi
- مِّنَ ٱلنَّاسِۖ
- among the mankind
- மக்களில்
- faman
- فَمَن
- So whoever
- ஆகவே, எவர்
- tabiʿanī
- تَبِعَنِى
- follows me
- பின்பற்றினார்/என்னை
- fa-innahu
- فَإِنَّهُۥ
- then indeed he
- நிச்சயமாக அவர்
- minnī
- مِنِّىۖ
- (is) of me
- என்னை சேர்ந்த
- waman
- وَمَنْ
- and whoever
- இன்னும் எவர்
- ʿaṣānī
- عَصَانِى
- disobeys me
- மாறு செய்தார்/எனக்கு
- fa-innaka
- فَإِنَّكَ
- then indeed You
- நிச்சயமாக நீ
- ghafūrun
- غَفُورٌ
- (are) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- பெரும் கருணையாளன்
Transliteration:
Rabbi innahunna adlalna kaseeram minan naasi faman tabi'anee fa innahoo minnee wa man 'asaanee fa innaka Ghafoorur Raheem(QS. ʾIbrāhīm:36)
English Sahih International:
My Lord, indeed they have led astray many among the people. So whoever follows me – then he is of me; and whoever disobeys me – indeed, You are [yet] Forgiving and Merciful. (QS. Ibrahim, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
என் இறைவனே! நிச்சயமாக இச்சிலைகள் மனிதர்களில் பலரை வழி கெடுத்து விட்டன. (ஆகவே, எவன் சிலைகளை வணங்காது) என்னைப் பின்பற்றுகிறானோ அவன்தான் நிச்சயமாக என்னில் (என் சந்ததியில்) உள்ளவன்; எவன் எனக்கு மாறு செய்கிறானோ (அவன் என் சந்ததி இல்லை. எனினும், என் இறைவனே!) நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும், கிருபை செய்பவனுமாக இருக்கிறாய் (என்றும்) (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௩௬)
Jan Trust Foundation
(“என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன; எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை; என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என் இறைவா! நிச்சயமாக இவை மக்களில் பலரை வழி கெடுத்தன. ஆகவே, எவர் என்னைப் பின்பற்றினாரோ நிச்சயமாக அவர் என்னை சேர்ந்தவர்; எவர் எனக்கு மாறு செய்தாரோ... நிச்சயமாக நீ மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்;