Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௩௫

Qur'an Surah Ibrahim Verse 35

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِيْ وَبَنِيَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ ۗ (ابراهيم : ١٤)

wa-idh qāla
وَإِذْ قَالَ
And when said
கூறியபோது
ib'rāhīmu
إِبْرَٰهِيمُ
Ibrahim
இப்றாஹீம்
rabbi
رَبِّ
"My Lord!
என் இறைவா
ij'ʿal
ٱجْعَلْ
Make
ஆக்கு
hādhā l-balada
هَٰذَا ٱلْبَلَدَ
this city
இந்த ஊரை
āminan
ءَامِنًا
safe
அபயமளிப்பதாக
wa-uj'nub'nī
وَٱجْنُبْنِى
and keep me away
இன்னும் தூரமாக்கு/என்னை
wabaniyya
وَبَنِىَّ
and my sons
இன்னும் என் பிள்ளைகளை
an naʿbuda
أَن نَّعْبُدَ
that we worship
நாங்கள் வணங்குவதை
l-aṣnāma
ٱلْأَصْنَامَ
the idols
சிலைகளை

Transliteration:

Wa iz qaala Ibraaheemu Rabbij 'al haazal balada aaminanw wajnubnee wa baniyya an na'budal asnaam (QS. ʾIbrāhīm:35)

English Sahih International:

And [mention, O Muhammad], when Abraham said, "My Lord, make this city [i.e., Makkah] secure and keep me and my sons away from worshipping idols. (QS. Ibrahim, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

இப்ராஹீம் (தன் இறைவனை நோக்கிக்) கூறியதை (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (அவர்கள் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கி வைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக! (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௩௫)

Jan Trust Foundation

நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இப்றாஹீம் கூறியபோது, “என் இறைவா! இவ்வூரை அபயமளிப்பதாக ஆக்கு! என்னையும் என் பிள்ளைகளையும் நாங்கள் சிலைகளை வணங்குவதை விட்டு தூரமாக்கு!