குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௩௦
Qur'an Surah Ibrahim Verse 30
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَجَعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا لِّيُضِلُّوْا عَنْ سَبِيْلِهٖۗ قُلْ تَمَتَّعُوْا فَاِنَّ مَصِيْرَكُمْ اِلَى النَّارِ (ابراهيم : ١٤)
- wajaʿalū
- وَجَعَلُوا۟
- And they set up
- இன்னும் ஏற்படுத்தினர்
- lillahi
- لِلَّهِ
- to Allah
- அல்லாஹ்விற்கு
- andādan
- أَندَادًا
- equals
- இணைகளை
- liyuḍillū
- لِّيُضِلُّوا۟
- so that they mislead
- அவர்கள் வழிகெடுப்பதற்காக
- ʿan sabīlihi
- عَن سَبِيلِهِۦۗ
- from His Path
- அவனுடைய பாதையிலிருந்து
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- tamattaʿū
- تَمَتَّعُوا۟
- "Enjoy
- சுகமனுபவியுங்கள்
- fa-inna
- فَإِنَّ
- but indeed
- நிச்சயமாக
- maṣīrakum
- مَصِيرَكُمْ
- your destination
- உங்கள் மீட்சி
- ilā
- إِلَى
- (is) to
- பக்கம்
- l-nāri
- ٱلنَّارِ
- the Fire"
- நரகத்தின்
Transliteration:
Wa ja'aloo lillaahi andaadal liyudilloo 'an sabeelih; qul tamatta'oo fa innaa maseerakum ilan Naar(QS. ʾIbrāhīm:30)
English Sahih International:
And they have attributed to Allah equals to mislead [people] from His way. Say, "Enjoy yourselves, for indeed, your destination is the Fire." (QS. Ibrahim, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பி விடும் பொருட்டு (பல பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "(இவ்வுலகில் சிறிது காலம்) நீங்கள் சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். (முடிவில்) நிச்சயமாக நீங்கள் சேருமிடம் நரகம்தான். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௩௦)
Jan Trust Foundation
மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி, “இவ்வுலகில் சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்” என்று நீர் கூறிவிடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அல்லாஹ்விற்கு (பல) இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர் அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக. (நபியே!) கூறுவீராக! “(இவ்வுலகில்) நீங்கள் சுகமனுபவியுங்கள். நிச்சயமாக உங்கள் மீட்சி நரகத்தின் பக்கம்தான்.