குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௨௭
Qur'an Surah Ibrahim Verse 27
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يُثَبِّتُ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِۚ وَيُضِلُّ اللّٰهُ الظّٰلِمِيْنَۗ وَيَفْعَلُ اللّٰهُ مَا يَشَاۤءُ ࣖ (ابراهيم : ١٤)
- yuthabbitu
- يُثَبِّتُ
- Allah keeps firm
- உறுதிப்படுத்துகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah keeps firm
- அல்லாஹ்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்களை
- āmanū
- ءَامَنُوا۟
- believe
- நம்பிக்கை கொண்டார்கள்
- bil-qawli
- بِٱلْقَوْلِ
- with the firm word
- சொல்லைக் கொண்டு
- l-thābiti
- ٱلثَّابِتِ
- with the firm word
- உறுதியானது
- fī l-ḥayati
- فِى ٱلْحَيَوٰةِ
- in the life
- வாழ்வில்
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- (of) the world
- உலக(ம்)
- wafī l-ākhirati
- وَفِى ٱلْءَاخِرَةِۖ
- and in the Hereafter
- இன்னும் மறுமையில்
- wayuḍillu
- وَيُضِلُّ
- And Allah lets go astray
- வழிகெடுக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- And Allah lets go astray
- அல்லாஹ்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَۚ
- the wrongdoers
- அநியாயக்காரர்கள்
- wayafʿalu
- وَيَفْعَلُ
- And Allah does
- இன்னும் செய்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- And Allah does
- அல்லாஹ்
- mā yashāu
- مَا يَشَآءُ
- what He wills
- தான் நாடுவதை
Transliteration:
Yusabbitul laahul lazeena aamanoo bilqawlis saabiti fil hayaatid dunyaa wa fil Aakhirati wa yudillul laahuz zaalimeen; wa yaf'alul laahu maa yashaaa'(QS. ʾIbrāhīm:27)
English Sahih International:
Allah keeps firm those who believe, with the firm word, in worldly life and in the Hereafter. And Allah sends astray the wrongdoers. And Allah does what He wills. (QS. Ibrahim, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் ("கலிமா தையிப்" என்னும்) உறுதிமிக்க இந்த வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்துகிறான். அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அல்லாஹ் விட்டு விடுகிறான்; அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (அதனைத் தடை செய்ய எவராலும் முடியாது.) (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௨௭)
Jan Trust Foundation
எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கை கொண்டவர்களை உலக வாழ்விலும் மறுமையிலும், (லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப் படுத்துகிறான். அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகெடுக்கிறான்; அல்லாஹ் தான் நாடுவதைச் செய்கிறான்.