குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௧௭
Qur'an Surah Ibrahim Verse 17
ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَّتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْغُهٗ وَيَأْتِيْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَيِّتٍۗ وَمِنْ وَّرَاۤىِٕهٖ عَذَابٌ غَلِيْظٌ (ابراهيم : ١٤)
- yatajarraʿuhu
- يَتَجَرَّعُهُۥ
- He will sip it
- அள்ளிக் குடிப்பான்/அதை
- walā yakādu yusīghuhu
- وَلَا يَكَادُ يُسِيغُهُۥ
- but not he will be near (to) swallowing it
- இலகுவாக குடித்து விடமாட்டான்/அதை
- wayatīhi
- وَيَأْتِيهِ
- And will come to him
- வரும்/அவனுக்கு
- l-mawtu
- ٱلْمَوْتُ
- the death
- மரணம்
- min kulli makānin
- مِن كُلِّ مَكَانٍ
- from every side
- ஒவ்வொரு இடத்திலிருந்தும்
- wamā huwa
- وَمَا هُوَ
- but not he
- இல்லை/அவன்
- bimayyitin
- بِمَيِّتٍۖ
- will die
- இறந்து விடுபவனாக
- wamin warāihi
- وَمِن وَرَآئِهِۦ
- And ahead of him And ahead of him
- அவனுக்குப்பின்னால்
- ʿadhābun
- عَذَابٌ
- (is) a punishment
- வேதனை
- ghalīẓun
- غَلِيظٌ
- harsh
- கடினமானது
Transliteration:
Yatajarra'uhoo wa laa yakaadu yuseeghuhoo wa yaateehil mawtu min kulli makaaninw wa maa huwa bimaiyitinw wa minw waraaa'ihee 'azaabun ghaleez(QS. ʾIbrāhīm:17)
English Sahih International:
He will gulp it but will hardly [be able to] swallow it. And death will come to him from everywhere, but he is not to die. And before him is a massive punishment. (QS. Ibrahim, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
அதனை அவர்கள் (மிகக் கஷ்டத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவார்கள். எனினும், அது அவர்களுடைய தொண்டைகளில் இறங்காது; (விக்கிக்கொள்ளும்.) ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணமே அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்; எனினும், அவர்கள் இறந்துவிட மாட்டார்கள். இதற்குப் பின் கடினமான வேதனையையும் அவர்கள் சந்திக்க நேரிடும். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௧௭)
Jan Trust Foundation
அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது; ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதை அவன் (அள்ளி) அள்ளிக் குடிப்பான். அதை இலகுவாக குடித்து விடமாட்டான். ஒவ்வொரு இடத்திலிருந்தும் மரணம் (வேதனை) அவனுக்கு வரும். (அந்த வேதனையில்) அவன் இறந்து விடுபவனாக இல்லை. அவனுக்குப் பின்னால் (இன்னும் கடினமான) வேதனை (காத்திருக்கிறது).