Skip to content

ஸூரா ஸூரத்து இப்ராஹீம் - Page: 5

Ibrahim

(ʾIbrāhīm)

௪௧

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ ࣖ ٤١

rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
igh'fir lī
ٱغْفِرْ لِى
மன்னிப்பளி/எனக்கு
waliwālidayya
وَلِوَٰلِدَىَّ
இன்னும் என் தாய் தந்தைக்கு
walil'mu'minīna
وَلِلْمُؤْمِنِينَ
இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு
yawma yaqūmu
يَوْمَ يَقُومُ
நாளில்/நிறைவேறும்
l-ḥisābu
ٱلْحِسَابُ
விசாரணை
எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!" (என்று பிரார்த்தித்தார்.) ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪௧)
Tafseer
௪௨

وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ ەۗ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُۙ ٤٢

walā taḥsabanna
وَلَا تَحْسَبَنَّ
எண்ணி விடாதீர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ghāfilan
غَٰفِلًا
கவனிக்காதவனாக
ʿammā yaʿmalu
عَمَّا يَعْمَلُ
செய்வதைப் பற்றி
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَۚ
அக்கிரமக்காரர்கள்
innamā
إِنَّمَا
பிற்படுத்துவதெல்லாம்
yu-akhiruhum
يُؤَخِّرُهُمْ
பிற்படுத்துவதெல்லாம் அவர்களை
liyawmin
لِيَوْمٍ
ஒரு நாளுக்காக
tashkhaṣu
تَشْخَصُ
கூர்ந்து விழித்திடும்
fīhi
فِيهِ
அதில்
l-abṣāru
ٱلْأَبْصَٰرُ
பார்வைகள்
(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான்! ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪௨)
Tafseer
௪௩

مُهْطِعِيْنَ مُقْنِعِيْ رُءُوْسِهِمْ لَا يَرْتَدُّ اِلَيْهِمْ طَرْفُهُمْ ۚوَاَفْـِٕدَتُهُمْ هَوَاۤءٌ ۗ ٤٣

muh'ṭiʿīna
مُهْطِعِينَ
விரைந்தவர்களாக
muq'niʿī
مُقْنِعِى
உயர்த்தியவர்களாக
ruūsihim
رُءُوسِهِمْ
தங்கள் தலைகளை
lā yartaddu
لَا يَرْتَدُّ
திரும்பாது
ilayhim
إِلَيْهِمْ
அவர்களிடம்
ṭarfuhum
طَرْفُهُمْۖ
அவர்களின் பார்வை
wa-afidatuhum
وَأَفْـِٔدَتُهُمْ
அவர்களுடைய உள்ளங்கள்
hawāon
هَوَآءٌ
வெற்றிடமாக
(அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪௩)
Tafseer
௪௪

وَاَنْذِرِ النَّاسَ يَوْمَ يَأْتِيْهِمُ الْعَذَابُۙ فَيَقُوْلُ الَّذِيْنَ ظَلَمُوْا رَبَّنَآ اَخِّرْنَآ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَۗ اَوَلَمْ تَكُوْنُوْٓا اَقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَا لَكُمْ مِّنْ زَوَالٍۙ ٤٤

wa-andhiri
وَأَنذِرِ
எச்சரிப்பீராக
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
yawma
يَوْمَ
நாள்
yatīhimu
يَأْتِيهِمُ
அவர்களுக்கு வரும்
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
fayaqūlu
فَيَقُولُ
கூறுவர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
அநியாயம் செய்தனர்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
akhir'nā
أَخِّرْنَآ
எங்களை பிற்படுத்து
ilā
إِلَىٰٓ
வரை
ajalin
أَجَلٍ
ஒரு தவனை
qarībin
قَرِيبٍ
சமீபமானது
nujib
نُّجِبْ
பதிலளிப்போம்
daʿwataka
دَعْوَتَكَ
உன் அழைப்புக்கு
wanattabiʿi
وَنَتَّبِعِ
இன்னும் பின்பற்றுவோம்
l-rusula
ٱلرُّسُلَۗ
தூதர்களை
awalam takūnū
أَوَلَمْ تَكُونُوٓا۟
நீங்கள் இருக்கவில்லையா?
aqsamtum
أَقْسَمْتُم
சத்தியம் செய்தீர்கள்
min qablu
مِّن قَبْلُ
இதற்கு முன்னர்
mā lakum
مَا لَكُم
உங்களுக்கு இல்லை
min zawālin
مِّن زَوَالٍ
அழிவே
ஆகவே, (நபியே!) இத்தகைய வேதனை நாள் வருவதைப் பற்றி நீங்கள் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். வரம்பு மீறியவர்கள் (அந்நாளில் தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு சொற்பத் தவணையளி! நாங்கள் உன் அழைப்புக்கு (இனி) செவி கொடுத்து, (உன்) தூதரைப் பின்பற்றி நடப்போம்" என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) "இதற்கு முன்னர் நீங்கள் உங்களு(டைய இவ்வுலக வாழ்க்கை)க்கு அழிவே இல்லை என்று சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?" (என்று கேட்பான்.) ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪௪)
Tafseer
௪௫

وَّسَكَنْتُمْ فِيْ مَسٰكِنِ الَّذِيْنَ ظَلَمُوْٓا اَنْفُسَهُمْ وَتَبَيَّنَ لَكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْاَمْثَالَ ٤٥

wasakantum
وَسَكَنتُمْ
இன்னும் வசித்தீர்கள்
fī masākini
فِى مَسَٰكِنِ
வசிப்பிடங்களில்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ẓalamū
ظَلَمُوٓا۟
தீங்கிழைத்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
தமக்குத்தாமே
watabayyana
وَتَبَيَّنَ
இன்னும் தெளிவானது
lakum kayfa
لَكُمْ كَيْفَ
உங்களுக்கு/எப்படி
faʿalnā
فَعَلْنَا
நாம் செய்தோம்
bihim
بِهِمْ
அவர்களுக்கு
waḍarabnā
وَضَرَبْنَا
இன்னும் விவரித்தோம்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-amthāla
ٱلْأَمْثَالَ
உதாரணங்களை
அன்றி "தமக்குத்தாமே தீங்கிழைத்து(க் கொண்டு அழிந்து போனவர்கள்) வசித்திருந்த இடத்தில் நீங்களும் வசித்திருக்க வில்லையா? (என்றும்), நாம் அவர்களை என்ன செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கவில்லையா? (இதனைப் பற்றி) உங்களுக்குப் பல உதாரணங்களையும் நாம் எடுத்துக் கூற வில்லையா" (என்றும் பதில் கூறுவான்.) ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪௫)
Tafseer
௪௬

وَقَدْ مَكَرُوْا مَكْرَهُمْ وَعِنْدَ اللّٰهِ مَكْرُهُمْۗ وَاِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُوْلَ مِنْهُ الْجِبَالُ ٤٦

waqad
وَقَدْ
திட்டமாக
makarū
مَكَرُوا۟
சூழ்ச்சி செய்தனர்
makrahum
مَكْرَهُمْ
தங்கள் சூழ்ச்சியை
waʿinda l-lahi
وَعِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
makruhum
مَكْرُهُمْ
அவர்களுடைய சூழ்ச்சி
wa-in kāna
وَإِن كَانَ
இருந்தாலும்
makruhum
مَكْرُهُمْ
சூழ்ச்சி அவர்களுடைய
litazūla
لِتَزُولَ
பெயர்த்துவிடும்படி
min'hu
مِنْهُ
அதனால்
l-jibālu
ٱلْجِبَالُ
மலைகள்
எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை இறைவன் முன்பாகவே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகளோ மலைகளையும் பெயர்த்து விடக்கூடியவைகளாக இருக்கின்றன! (ஆயினும், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றும் பலிக்கப் போவதில்லை!) ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪௬)
Tafseer
௪௭

فَلَا تَحْسَبَنَّ اللّٰهَ مُخْلِفَ وَعْدِهٖ رُسُلَهٗ ۗاِنَّ اللّٰهَ عَزِيْزٌ ذُو انْتِقَامٍۗ ٤٧

falā taḥsabanna
فَلَا تَحْسَبَنَّ
நிச்சயமாகஎண்ணாதீர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mukh'lifa
مُخْلِفَ
மீறுபவனாக
waʿdihi
وَعْدِهِۦ
தனது வாக்கை
rusulahu
رُسُلَهُۥٓۗ
தனது தூதர்களுக்கு
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
dhū intiqāmin
ذُو ٱنتِقَامٍ
பழிவாங்குபவன்
அல்லாஹ் தன்னுடைய தூதருக்களித்த வாக்குறுதியில் அவன் தவறி விடுவான் என்று (நபியே!) நீங்கள் ஒருகாலும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (அவர்கள் அனைவரையும்) மிகைத்தவனும் பழிவாங்குபவனாகவும் இருக்கிறான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪௭)
Tafseer
௪௮

يَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَيْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ٤٨

yawma
يَوْمَ
நாளில்
tubaddalu l-arḍu
تُبَدَّلُ ٱلْأَرْضُ
மாற்றப்படும்/பூமி
ghayra l-arḍi
غَيْرَ ٱلْأَرْضِ
வேறு பூமியாக
wal-samāwātu
وَٱلسَّمَٰوَٰتُۖ
இன்னும் வானங்கள்
wabarazū
وَبَرَزُوا۟
இன்னும் வெளிப்படுவர்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
l-wāḥidi
ٱلْوَٰحِدِ
ஒருவன்
l-qahāri
ٱلْقَهَّارِ
அடக்கி ஆளுபவன்
(நபியே! ஒரு நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்:) அந்நாளில் இந்தப் பூமியை மாற்றி வேறுவித பூமியாக அமைக்கப் பட்டுவிடும்; வானங்களும் அவ்வாறே. (ஒவ்வொருவரும் தத்தம் இடத்திலிருந்து) வெளிப்பட்டு அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் சந்நிதியில் கூடி விடுவார்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪௮)
Tafseer
௪௯

وَتَرَى الْمُجْرِمِيْنَ يَوْمَىِٕذٍ مُّقَرَّنِيْنَ فِى الْاَصْفَادِۚ ٤٩

watarā
وَتَرَى
இன்னும் காண்பீர்
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளை
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
muqarranīna
مُّقَرَّنِينَ
பிணைக்கப்பட்டவர்களாக
fī l-aṣfādi
فِى ٱلْأَصْفَادِ
விலங்குகளில்
அன்றி, குற்றவாளிகள் அனைவரும், அந்நாளில் விலங்கிடப்பட்டிருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪௯)
Tafseer
௫௦

سَرَابِيْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰى وُجُوْهَهُمُ النَّارُۙ ٥٠

sarābīluhum
سَرَابِيلُهُم
சட்டைகள்/அவர்களுடைய
min qaṭirānin
مِّن قَطِرَانٍ
தாரினால்
wataghshā
وَتَغْشَىٰ
இன்னும் சூழும்
wujūhahumu
وُجُوهَهُمُ
அவர்களுடைய முகங்கள்
l-nāru
ٱلنَّارُ
நெருப்பு
அவர்களுடைய சட்டைகள் தாரால் செய்யப்பட்டிருக்கும். அவர்களுடைய முகத்தை நெருப்பு பொசுக்கும். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௫௦)
Tafseer