Skip to content

ஸூரா ஸூரத்து இப்ராஹீம் - Page: 4

Ibrahim

(ʾIbrāhīm)

௩௧

قُلْ لِّعِبَادِيَ الَّذِيْنَ اٰمَنُوْا يُقِيْمُوا الصَّلٰوةَ وَيُنْفِقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً مِّنْ قَبْلِ اَنْ يَّأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيْهِ وَلَا خِلٰلٌ ٣١

qul
قُل
கூறுவீராக
liʿibādiya
لِّعِبَادِىَ
என் அடியார்களுக்கு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
yuqīmū
يُقِيمُوا۟
நிலை நிறுத்தட்டும்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wayunfiqū
وَيُنفِقُوا۟
இன்னும் தானம் செய்யட்டும்
mimmā razaqnāhum
مِمَّا رَزَقْنَٰهُمْ
நாம் வசதியளித்தவற்றில்/அவர்களுக்கு
sirran
سِرًّا
இரகசியமாக
waʿalāniyatan
وَعَلَانِيَةً
இன்னும் வெளிப்படையாக
min qabli
مِّن قَبْلِ
முன்னர்
an yatiya
أَن يَأْتِىَ
வருவதற்கு
yawmun
يَوْمٌ
ஒரு நாள்
لَّا
இல்லை
bayʿun
بَيْعٌ
கொடுக்கல் வாங்கல்
fīhi
فِيهِ
அதில்
walā
وَلَا
இல்லை
khilālun
خِلَٰلٌ
நட்பு
(நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தொழுகையைக் கடைபிடித்தொழுகவும். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தானம் செய்யவும். கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத நாள் வருவதற்கு முன்னதாகவே (இவ்வாறு செய்யவும்.) ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩௧)
Tafseer
௩௨

اَللّٰهُ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚوَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِى الْبَحْرِ بِاَمْرِهٖ ۚوَسَخَّرَ لَكُمُ الْاَنْهٰرَ ٣٢

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
wa-anzala
وَأَنزَلَ
இன்னும் இறக்கினான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
māan
مَآءً
மழையை
fa-akhraja
فَأَخْرَجَ
வெளிப்படுத்தினான்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
mina l-thamarāti
مِنَ ٱلثَّمَرَٰتِ
கனிகளில்
riz'qan lakum
رِزْقًا لَّكُمْۖ
உணவாக/உங்களுக்கு
wasakhara lakumu l-ful'ka
وَسَخَّرَ لَكُمُ ٱلْفُلْكَ
வசப்படுத்தினான்/உங்களுக்கு/கப்பலை
litajriya
لِتَجْرِىَ
அது செல்வதற்காக
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
கடலில்
bi-amrihi
بِأَمْرِهِۦۖ
அவனுடைய கட்டளையைக் கொண்டு
wasakhara
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-anhāra
ٱلْأَنْهَٰرَ
ஆறுகளை
அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக(ப் பற்பல) கனி வர்க்கங்களையும் வெளிப்படுத்துகின்றான். (நீங்கள் பயணம் செய்யும் பொருட்டுத்) தன் கட்டளையைக் கொண்டு கப்பலை உங்கள் இஷ்டப்படி கடலில் செல்ல வைக்கிறான். ஆறுகளையும், (கால்வாய்களையும்) உங்கள் விருப்பப்படி பாய வசதியளித்தான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩௨)
Tafseer
௩௩

وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَاۤىِٕبَيْنِۚ وَسَخَّرَ لَكُمُ الَّيْلَ وَالنَّهَارَ ۚ ٣٣

wasakhara
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-shamsa
ٱلشَّمْسَ
சூரியனை
wal-qamara
وَٱلْقَمَرَ
இன்னும் சந்திரனை
dāibayni
دَآئِبَيْنِۖ
தொடர்ந்து செயல்படக்கூடியதாக
wasakhara
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
al-layla wal-nahāra
ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
இரவை/இன்னும் பகலை
(தவறாது) ஒழுங்காக நடைபெற்று வருமாறு சூரியனையும் சந்திரனையும் உங்களுக்குப் பயனளிக்கக் கூடிய விதத்தில் (படைத்து) அமைத்தான். (மாறி மாறி) வரக்கூடிய இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩௩)
Tafseer
௩௪

وَاٰتٰىكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْتُمُوْهُۗ وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَاۗ اِنَّ الْاِنْسَانَ لَظَلُوْمٌ كَفَّارٌ ࣖ ٣٤

waātākum
وَءَاتَىٰكُم
தந்தான்/உங்களுக்கு
min kulli mā sa-altumūhu
مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُۚ
நீங்கள் கேட்டதிலிருந்தெல்லாம்/அவனிடம்
wa-in taʿuddū
وَإِن تَعُدُّوا۟
நீங்கள் கணக்கிட்டால்
niʿ'mata
نِعْمَتَ
அருளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
lā tuḥ'ṣūhā
لَا تُحْصُوهَآۗ
நீங்கள் எண்ண முடியாது/அதை
inna
إِنَّ
நிச்சயமாக
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதன்
laẓalūmun
لَظَلُومٌ
மகா அநியாயக்காரன்
kaffārun
كَفَّارٌ
மிக நன்றிகெட்டவன்
(இவையன்றி) நீங்கள் கேட்டவைகளை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே, அல்லாஹ்வுடைய அருட் கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதனை உங்களால் எண்ண முடியாது! (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறவனாகவும், மிக நன்றிகெட்டவனாகவும் இருக்கிறான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩௪)
Tafseer
௩௫

وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِيْ وَبَنِيَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ ۗ ٣٥

wa-idh qāla
وَإِذْ قَالَ
கூறியபோது
ib'rāhīmu
إِبْرَٰهِيمُ
இப்றாஹீம்
rabbi
رَبِّ
என் இறைவா
ij'ʿal
ٱجْعَلْ
ஆக்கு
hādhā l-balada
هَٰذَا ٱلْبَلَدَ
இந்த ஊரை
āminan
ءَامِنًا
அபயமளிப்பதாக
wa-uj'nub'nī
وَٱجْنُبْنِى
இன்னும் தூரமாக்கு/என்னை
wabaniyya
وَبَنِىَّ
இன்னும் என் பிள்ளைகளை
an naʿbuda
أَن نَّعْبُدَ
நாங்கள் வணங்குவதை
l-aṣnāma
ٱلْأَصْنَامَ
சிலைகளை
இப்ராஹீம் (தன் இறைவனை நோக்கிக்) கூறியதை (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (அவர்கள் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கி வைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக! ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩௫)
Tafseer
௩௬

رَبِّ اِنَّهُنَّ اَضْلَلْنَ كَثِيْرًا مِّنَ النَّاسِۚ فَمَنْ تَبِعَنِيْ فَاِنَّهٗ مِنِّيْۚ وَمَنْ عَصَانِيْ فَاِنَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ ٣٦

rabbi
رَبِّ
என் இறைவா
innahunna
إِنَّهُنَّ
நிச்சயமாக இவை
aḍlalna
أَضْلَلْنَ
வழி கெடுத்தன
kathīran
كَثِيرًا
பலரை
mina l-nāsi
مِّنَ ٱلنَّاسِۖ
மக்களில்
faman
فَمَن
ஆகவே, எவர்
tabiʿanī
تَبِعَنِى
பின்பற்றினார்/என்னை
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
minnī
مِنِّىۖ
என்னை சேர்ந்த
waman
وَمَنْ
இன்னும் எவர்
ʿaṣānī
عَصَانِى
மாறு செய்தார்/எனக்கு
fa-innaka
فَإِنَّكَ
நிச்சயமாக நீ
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
என் இறைவனே! நிச்சயமாக இச்சிலைகள் மனிதர்களில் பலரை வழி கெடுத்து விட்டன. (ஆகவே, எவன் சிலைகளை வணங்காது) என்னைப் பின்பற்றுகிறானோ அவன்தான் நிச்சயமாக என்னில் (என் சந்ததியில்) உள்ளவன்; எவன் எனக்கு மாறு செய்கிறானோ (அவன் என் சந்ததி இல்லை. எனினும், என் இறைவனே!) நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும், கிருபை செய்பவனுமாக இருக்கிறாய் (என்றும்) ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩௬)
Tafseer
௩௭

رَبَّنَآ اِنِّيْٓ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِيْ بِوَادٍ غَيْرِ ذِيْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوا الصَّلٰوةَ فَاجْعَلْ اَفْـِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِيْٓ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ ٣٧

rabbanā
رَّبَّنَآ
எங்கள் இறைவா
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
askantu
أَسْكَنتُ
வசிக்க வைத்தேன்
min dhurriyyatī
مِن ذُرِّيَّتِى
என் சந்ததிகளில் சில
biwādin
بِوَادٍ
ஒரு பள்ளத்தாக்கில்
ghayri dhī zarʿin
غَيْرِ ذِى زَرْعٍ
விவசாயமற்றது
ʿinda
عِندَ
அருகில்
baytika
بَيْتِكَ
உன் வீட்டின்
l-muḥarami
ٱلْمُحَرَّمِ
புனிதமாக்கப்பட்டது
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
liyuqīmū
لِيُقِيمُوا۟
அவர்கள் நிலைநிறுத்துவதற்காக
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
அவர்கள் தொழுகையை
fa-ij'ʿal
فَٱجْعَلْ
ஆகவே ஆக்கு
afidatan
أَفْـِٔدَةً
உள்ளங்களை
mina l-nāsi
مِّنَ ٱلنَّاسِ
மக்களிலிருந்து
tahwī
تَهْوِىٓ
ஆசைப்படக்கூடியதாக
ilayhim
إِلَيْهِمْ
அவர்கள் பக்கம்
wa-ur'zuq'hum
وَٱرْزُقْهُم
இன்னும் உணவளி/அவர்களுக்கு
mina l-thamarāti
مِّنَ ٱلثَّمَرَٰتِ
கனிகளிலிருந்து
laʿallahum yashkurūna
لَعَلَّهُمْ يَشْكُرُونَ
அவர்கள் நன்றி செலுத்துவதற்காக
எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாயமற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்.) மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நோக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩௭)
Tafseer
௩௮

رَبَّنَآ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِيْ وَمَا نُعْلِنُۗ وَمَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْ شَيْءٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَاۤءِ ٣٨

rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
taʿlamu
تَعْلَمُ
அறிவாய்
مَا
எதை
nukh'fī
نُخْفِى
நாங்கள் மறைப்போம்
wamā
وَمَا
எதை
nuʿ'linu
نُعْلِنُۗ
வெளிப்படுத்துவோம்
wamā yakhfā
وَمَا يَخْفَىٰ
மறையாது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
min shayin
مِن شَىْءٍ
எதுவும்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walā fī l-samāi
وَلَا فِى ٱلسَّمَآءِ
இன்னும் வானத்தில்
எங்கள் இறைவனே! நாங்கள் (உள்ளங்களில்) மறைத்துக்கொள்வதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். வானத்திலோ பூமியிலோ உள்ளவற்றில் யாதொன்றும் அல்லாஹ்வாகிய உனக்கு மறைந்ததல்ல. ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩௮)
Tafseer
௩௯

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ وَهَبَ لِيْ عَلَى الْكِبَرِ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَۗ اِنَّ رَبِّيْ لَسَمِيْعُ الدُّعَاۤءِ ٣٩

al-ḥamdu
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
wahaba
وَهَبَ
வழங்கினான்
لِى
எனக்கு
ʿalā l-kibari
عَلَى ٱلْكِبَرِ
வயோதிகத்தில்
is'māʿīla
إِسْمَٰعِيلَ
இஸ்மாயீலை
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَۚ
இன்னும் இஸ்ஹாக்கை
inna
إِنَّ
நிச்சயமாக
rabbī
رَبِّى
என் இறைவன்
lasamīʿu
لَسَمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-duʿāi
ٱلدُّعَآءِ
பிரார்த்தனையை
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியது; அவன்தான் இவ்வயோதிக(கால)த்தில் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவனாக இருக்கிறான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௩௯)
Tafseer
௪௦

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِيْۖ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاۤءِ ٤٠

rabbi
رَبِّ
என் இறைவா
ij'ʿalnī
ٱجْعَلْنِى
ஆக்கு/என்னை
muqīma
مُقِيمَ
நிலைநிறுத்துபவனாக
l-ṣalati
ٱلصَّلَوٰةِ
தொழுகையை
wamin dhurriyyatī
وَمِن ذُرِّيَّتِىۚ
இன்னும் என் சந்ததிகளிலிருந்து
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
wataqabbal
وَتَقَبَّلْ
இன்னும் ஏற்றுக் கொள்
duʿāi
دُعَآءِ
என் பிரார்த்தனையை
என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக! ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௪௦)
Tafseer