Skip to content

ஸூரா ஸூரத்து இப்ராஹீம் - Page: 2

Ibrahim

(ʾIbrāhīm)

௧௧

قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ اِنْ نَّحْنُ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلٰكِنَّ اللّٰهَ يَمُنُّ عَلٰى مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖۗ وَمَا كَانَ لَنَآ اَنْ نَّأْتِيَكُمْ بِسُلْطٰنٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۗوَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ١١

qālat
قَالَتْ
கூறினா(ர்க)ள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
rusuluhum
رُسُلُهُمْ
தூதர்கள்/ அவர்களுடைய
in naḥnu
إِن نَّحْنُ
இல்லை/நாங்கள்
illā
إِلَّا
தவிர
basharun
بَشَرٌ
மனிதர்களே
mith'lukum
مِّثْلُكُمْ
உங்களைப் போன்ற
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yamunnu
يَمُنُّ
அருள் புரிகிறான்
ʿalā
عَلَىٰ
மீது
man yashāu
مَن يَشَآءُ
எவர்/நாடுவான்
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦۖ
தன் அடியார்களில்
wamā kāna lanā
وَمَا كَانَ لَنَآ
முடியாது/எங்களுக்கு
an natiyakum
أَن نَّأْتِيَكُم
நாம் வருவது/உங்களிடம்
bisul'ṭānin illā
بِسُلْطَٰنٍ إِلَّا
ஓர் ஆதாரத்தைக் கொண்டு/தவிர
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டே
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
waʿalā l-lahi
وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீதே
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கட்டும்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
அதற்கு அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம். எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி (உங்கள் விருப்பப்படி) யாதொரு ஆதாரமும் நாம் உங்களிடம் கொண்டு வருவதற்கில்லை" (என்று கூறி நம்பிக்கையாளர்களை நோக்கி,) "நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வையே நம்பவும்" என்றும், ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧௧)
Tafseer
௧௨

وَمَا لَنَآ اَلَّا نَتَوَكَّلَ عَلَى اللّٰهِ وَقَدْ هَدٰىنَا سُبُلَنَاۗ وَلَنَصْبِرَنَّ عَلٰى مَآ اٰذَيْتُمُوْنَاۗ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ࣖ ١٢

wamā lanā
وَمَا لَنَآ
எங்களுக்கென்ன?
allā natawakkala
أَلَّا نَتَوَكَّلَ
நாங்கள் நம்பிக்கை வைக்காதிருக்க
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
waqad hadānā
وَقَدْ هَدَىٰنَا
நேர்வழிபடுத்தினான்/எங்களை
subulanā
سُبُلَنَاۚ
எங்கள் பாதைகளில்
walanaṣbiranna
وَلَنَصْبِرَنَّ
நிச்சயமாக பொறுப்போம்
ʿalā mā ādhaytumūnā
عَلَىٰ مَآ ءَاذَيْتُمُونَاۚ
நீங்கள் துன்புறுத்துவதில் எங்களை
waʿalā l-lahi
وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ் மீதே
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
ஆகவே நம்பிக்கை வைக்கட்டும்
l-mutawakilūna
ٱلْمُتَوَكِّلُونَ
நம்பிக்கை வைப்பவர்கள்
"நாங்கள் அல்லாஹ்வை நம்பாதிருக்க எங்களுக்கென்ன (தடை நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் எங்களுக்கு நேரான வழியை அறிவித்தான். (நிராகரிப்பவர்களே!) நீங்கள் எங்களுக்கு இழைக்கும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு உறுதியாக இருப்போம். ஆகவே, நம்புபவர்கள் அனைவரும் அல்லாஹ்வையே நம்பவும்" என்றும் கூறினார்கள். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧௨)
Tafseer
௧௩

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَآ اَوْ لَتَعُوْدُنَّ فِيْ مِلَّتِنَاۗ فَاَوْحٰٓى اِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظّٰلِمِيْنَ ۗ ١٣

waqāla
وَقَالَ
கூறினார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
lirusulihim
لِرُسُلِهِمْ
தங்கள் தூதர்களிடம்
lanukh'rijannakum
لَنُخْرِجَنَّكُم
நிச்சயமாக வெளியேற்றுவோம்/உங்களை
min arḍinā
مِّنْ أَرْضِنَآ
எங்கள் பூமியிலிருந்து
aw
أَوْ
அல்லது
lataʿūdunna
لَتَعُودُنَّ
நீங்கள் நிச்சயமாக திரும்பிடவேண்டும்
fī millatinā
فِى مِلَّتِنَاۖ
எங்கள் மார்க்கத்தில்
fa-awḥā
فَأَوْحَىٰٓ
ஆகவே வஹீ அறிவித்தான்
ilayhim
إِلَيْهِمْ
அவர்களுக்கு
rabbuhum
رَبُّهُمْ
இறைவன்/அவர்களுடைய
lanuh'likanna
لَنُهْلِكَنَّ
நிச்சயமாக அழிப்போம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
தங்களிடம் வந்த (நம்முடைய) தூதர்களை நிராகரித்தவர்கள் அவர்களை நோக்கி, "நிச்சயமாக நீங்கள் நம்முடைய மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) "நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்" என்றும் ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧௩)
Tafseer
௧௪

وَلَنُسْكِنَنَّكُمُ الْاَرْضَ مِنْۢ بَعْدِهِمْ ۗذٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِيْ وَخَافَ وَعِيْدِ ١٤

walanus'kinannakumu
وَلَنُسْكِنَنَّكُمُ
நிச்சயமாக குடி அமர்த்துவோம்/உங்களை
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியில்
min
مِنۢ
பின்னர்
baʿdihim
بَعْدِهِمْۚ
பின்னர் அவர்களுக்கு
dhālika
ذَٰلِكَ
இது
liman
لِمَنْ
எவருக்கு
khāfa
خَافَ
பயந்தார்
maqāmī
مَقَامِى
என் முன்னால் நிற்பதை
wakhāfa
وَخَافَ
இன்னும் பயந்தார்
waʿīdi
وَعِيدِ
என் எச்சரிக்கையை
"உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்" என்றும் வஹீ மூலம் அறிவித்து "இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கின்றானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்" என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்., ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧௪)
Tafseer
௧௫

وَاسْتَفْتَحُوْا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيْدٍۙ ١٥

wa-is'taftaḥū
وَٱسْتَفْتَحُوا۟
ஆகவே வெற்றிபெற முயற்சித்தார்கள்
wakhāba
وَخَابَ
அழிந்தார்(கள்)
kullu
كُلُّ
எல்லோரும்
jabbārin
جَبَّارٍ
பிடிவாதக்காரர்(கள்)
ʿanīdin
عَنِيدٍ
வம்பர்(கள்)
ஆகவே, (நபிமார்கள்) அனைவரும் (அல்லாஹ்வின்) உதவியைக் கோரினார்கள். பிடிவாதக்கார வம்பர்கள் அனைவருமே ஏமாற்றமடைந்(து அழிந்)தனர். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧௫)
Tafseer
௧௬

مِّنْ وَّرَاۤىِٕهٖ جَهَنَّمُ وَيُسْقٰى مِنْ مَّاۤءٍ صَدِيْدٍۙ ١٦

min warāihi
مِّن وَرَآئِهِۦ
அவனுக்கு பின்புறத்தில்
jahannamu
جَهَنَّمُ
நரகம்
wayus'qā
وَيُسْقَىٰ
இன்னும் புகட்டப்படுவான்
min
مِن
இருந்து
māin
مَّآءٍ
நீர்
ṣadīdin
صَدِيدٍ
சீழ்
அவர்களுக்கு பின்புறம் நரகம்தான் இருக்கிறது. (அங்குதான் அவர்கள் செல்ல வேண்டும். நரகவாசிகளின் தேகத்திலிருந்து வடியும்) சீழ்தான் அவர்களுக்கு (நீராக)ப் புகட்டப்படும். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧௬)
Tafseer
௧௭

يَّتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْغُهٗ وَيَأْتِيْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَيِّتٍۗ وَمِنْ وَّرَاۤىِٕهٖ عَذَابٌ غَلِيْظٌ ١٧

yatajarraʿuhu
يَتَجَرَّعُهُۥ
அள்ளிக் குடிப்பான்/அதை
walā yakādu yusīghuhu
وَلَا يَكَادُ يُسِيغُهُۥ
இலகுவாக குடித்து விடமாட்டான்/அதை
wayatīhi
وَيَأْتِيهِ
வரும்/அவனுக்கு
l-mawtu
ٱلْمَوْتُ
மரணம்
min kulli makānin
مِن كُلِّ مَكَانٍ
ஒவ்வொரு இடத்திலிருந்தும்
wamā huwa
وَمَا هُوَ
இல்லை/அவன்
bimayyitin
بِمَيِّتٍۖ
இறந்து விடுபவனாக
wamin warāihi
وَمِن وَرَآئِهِۦ
அவனுக்குப்பின்னால்
ʿadhābun
عَذَابٌ
வேதனை
ghalīẓun
غَلِيظٌ
கடினமானது
அதனை அவர்கள் (மிகக் கஷ்டத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவார்கள். எனினும், அது அவர்களுடைய தொண்டைகளில் இறங்காது; (விக்கிக்கொள்ளும்.) ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணமே அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்; எனினும், அவர்கள் இறந்துவிட மாட்டார்கள். இதற்குப் பின் கடினமான வேதனையையும் அவர்கள் சந்திக்க நேரிடும். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧௭)
Tafseer
௧௮

مَثَلُ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ اَعْمَالُهُمْ كَرَمَادِ ِۨاشْتَدَّتْ بِهِ الرِّيْحُ فِيْ يَوْمٍ عَاصِفٍۗ لَا يَقْدِرُوْنَ مِمَّا كَسَبُوْا عَلٰى شَيْءٍ ۗذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِيْدُ ١٨

mathalu
مَّثَلُ
உதாரணம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
birabbihim
بِرَبِّهِمْۖ
தங்கள் இறைவனை
aʿmāluhum
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய செயல்கள்
karamādin
كَرَمَادٍ
சாம்பல்
ish'taddat
ٱشْتَدَّتْ
கடுமையாக அடித்துச் சென்றது
bihi
بِهِ
அதை
l-rīḥu
ٱلرِّيحُ
காற்று
fī yawmin
فِى يَوْمٍ
காலத்தில்
ʿāṣifin
عَاصِفٍۖ
புயல்
lā yaqdirūna
لَّا يَقْدِرُونَ
அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
mimmā kasabū
مِمَّا كَسَبُوا۟
அவர்கள் செய்ததில்
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍۚ
எதையும்
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
இதுதான்
l-ḍalālu
ٱلضَّلَٰلُ
வழிகேடு
l-baʿīdu
ٱلْبَعِيدُ
தூரமானது
எவர்கள் தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபாலிப்பவனை நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய செயல்களின் உதாரணம்: சாம்பலைப் போல் இருக்கிறது! புயல் காலத்தில் அடித்த கனமான காற்று அதனை அடித்துக்கொண்டு போய்விட்டது. தாங்கள் தேடிக் கொண்டதில் ஒன்றையும் அவர்கள் அடைய மாட்டார்கள். இது வெகு தூரமான வழிகேடாகும். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧௮)
Tafseer
௧௯

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّۗ اِنْ يَّشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيْدٍۙ ١٩

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
khalaqa
خَلَقَ
படைத்துள்ளான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
wal-arḍa
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
bil-ḥaqi
بِٱلْحَقِّۚ
உண்மையைக் கொண்டு
in yasha
إِن يَشَأْ
அவன் நாடினால்
yudh'hib'kum
يُذْهِبْكُمْ
போக்கி விடுவான்/உங்களை
wayati
وَيَأْتِ
இன்னும் வருவான்
bikhalqin
بِخَلْقٍ
படைப்பைக் கொண்டு
jadīdin
جَدِيدٍ
புதியது
நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் மிக்க மேலான அமைப்பில் படைத்திருக்கிறான் என்பதை (மனிதனே!) நீ கவனிக்கவில்லையா? அவன் விரும்பினால் உங்களைப் போக்கி விட்டு (உங்களைப் போன்ற) புதியதோர் படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௧௯)
Tafseer
௨௦

وَّمَا ذٰلِكَ عَلَى اللّٰهِ بِعَزِيْزٍ ٢٠

wamā dhālika
وَمَا ذَٰلِكَ
இல்லை/அது
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
biʿazīzin
بِعَزِيزٍ
சிரமமானதாக
அல்லாஹ்வுக்கு இது ஒரு சிரமமான காரியம் அல்ல. ([௧௪] ஸூரத்து இப்ராஹீம்: ௨௦)
Tafseer