Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௮

Qur'an Surah Ar-Ra'd Verse 8

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُنْثٰى وَمَا تَغِيْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ۗوَكُلُّ شَيْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ (الرعد : ١٣)

al-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிகின்றான்
مَا
what
எதை
taḥmilu
تَحْمِلُ
carries
சுமக்கிறாள்
kullu
كُلُّ
every
ஒவ்வொரு
unthā
أُنثَىٰ
female
பெண்
wamā taghīḍu
وَمَا تَغِيضُ
and what fall short
இன்னும் குறைவதை
l-arḥāmu
ٱلْأَرْحَامُ
the womb
கர்ப்பப்பைகள்
wamā tazdādu
وَمَا تَزْدَادُۖ
and what they exceed
இன்னும் அதிகமாவதை
wakullu shayin
وَكُلُّ شَىْءٍ
And every thing
எல்லாம்
ʿindahu
عِندَهُۥ
with Him
அவனிடம்
bimiq'dārin
بِمِقْدَارٍ
(is) in due proportion
ஓர் அளவில்

Transliteration:

Allaahu ya'lamu maa tahmilu kullu unsaa wa maa tagheedul arhaamu wa maa tazdaad, wa kullu shai'in 'indahoo bimiqdaar (QS. ar-Raʿd:8)

English Sahih International:

Allah knows what every female carries and what the wombs lose [prematurely] or exceed. And everything with Him is by due measure. (QS. Ar-Ra'd, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்ப(து ஆணா, பெண்ணா என்ப)தையும் அல்லாஹ் நன்கறிகிறான். கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் சமயம்) சுருங்குவதையும், (பிரசவிக்கும் பொழுது) அவை விரிவதையும் அவன் அறிகிறான். (கர்ப்பங்களிலுள்ள) ஒவ்வொன்றிலும் (அக்கர்ப்பங்களில் தங்கியிருக்க வேண்டிய காலம் ஆகியவை) அவனிடம் குறிப்பிடப்பட்டே இருக்கின்றன. (ஸூரத்துர் ரஃது, வசனம் ௮)

Jan Trust Foundation

ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒவ்வொரு பெண் (கர்ப்பத்தில்) சுமப்பதையும் கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் காலம்) குறைவதையும், அவை அதிகமாவதையும் அல்லாஹ் அறிகின்றான். எல்லாம் அவனிடம் (குறிக்கப்பட்ட) ஓர் அளவில் இருக்கின்றன.