Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௭

Qur'an Surah Ar-Ra'd Verse 7

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖۗ اِنَّمَآ اَنْتَ مُنْذِرٌ وَّلِكُلِّ قَوْمٍ هَادٍ ࣖ (الرعد : ١٣)

wayaqūlu
وَيَقُولُ
And say
கூறுகிறார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தவர்கள்
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
"Why not has been sent down
இறக்கப்பட வேண்டாமா?
ʿalayhi
عَلَيْهِ
to him
இவர் மீது
āyatun
ءَايَةٌ
a sign
ஓர் அத்தாட்சி
min
مِّن
from
இருந்து
rabbihi
رَّبِّهِۦٓۗ
his Lord?"
இவருடையஇறைவன்
innamā anta
إِنَّمَآ أَنتَ
Only you
நீரெல்லாம்
mundhirun
مُنذِرٌۖ
(are) a warner
ஓர் எச்சரிப்பாளர்
walikulli qawmin
وَلِكُلِّ قَوْمٍ
and for every people
எல்லா மக்களுக்கும்
hādin
هَادٍ
(is) a guide
தலைவர்/வழிகாட்டி

Transliteration:

Wa yaqoolul lazeena kafaroo law laaa unzila 'alaihi Aayatum mir Rabbih; innamaaa anta munzirunw wa likulli qawmin haad (QS. ar-Raʿd:7)

English Sahih International:

And those who disbelieved say, "Why has a sign not been sent down to him from his Lord?" You are only a warner, and for every people is a guide. (QS. Ar-Ra'd, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

"(நபியே!) இந்நிராகரிப்பவர்கள் (உங்களைப் பற்றி) இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சி அருளப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (நபியே!) நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே அன்றி வேறில்லை; (ஆகவே, அவர்கள் விரும்பியவாறெல்லாம் செய்யவேண்டுவது உங்களது கடமை அன்று. இவ்வாறே) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (ஒரு) வழிகாட்டி வந்திருக்கிறார். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௭)

Jan Trust Foundation

இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் “அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(நபியே!) நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி) “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்(கள்). (நபியே!) நீர் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். எல்லா மக்களுக்கும் (அவர்களை வழி நடத்துகின்ற ஒரு) தலைவர் உண்டு.