Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௬

Qur'an Surah Ar-Ra'd Verse 6

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَسْتَعْجِلُوْنَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلٰتُۗ وَاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلٰى ظُلْمِهِمْۚ وَاِنَّ رَبَّكَ لَشَدِيْدُ الْعِقَابِ (الرعد : ١٣)

wayastaʿjilūnaka
وَيَسْتَعْجِلُونَكَ
And they ask you to hasten
அவசரமாகத் தேடுகின்றனர்/உம்மிடம்
bil-sayi-ati
بِٱلسَّيِّئَةِ
the evil
கெட்டதை
qabla
قَبْلَ
before
முன்னர்
l-ḥasanati
ٱلْحَسَنَةِ
the good
நல்லதிற்கு
waqad khalat
وَقَدْ خَلَتْ
and verily has occurred
சென்றுள்ளன
min qablihimu
مِن قَبْلِهِمُ
from before them
அவர்களுக்கு முன்னர்
l-mathulātu
ٱلْمَثُلَٰتُۗ
[the] similar punishments
தண்டனைகள்
wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
your Lord
உம் இறைவன்
ladhū maghfiratin
لَذُو مَغْفِرَةٍ
(is) full (of) forgiveness
மன்னிப்பவன்
lilnnāsi
لِّلنَّاسِ
for mankind
மக்களை
ʿalā ẓul'mihim
عَلَىٰ ظُلْمِهِمْۖ
for their wrongdoing
அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும்
wa-inna
وَإِنَّ
and indeed
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
your Lord
உம் இறைவன்
lashadīdu
لَشَدِيدُ
(is) severe
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
(in) the penalty
தண்டனை

Transliteration:

Wa yasta'jiloonaka bis saiyi'ati qablal hasanati wa qad khalat min qablihimul masulaat; wa inna Rabbaka lazoo maghfiratil linnaasi 'alaa zulmihim wa inna Rabbaka lashadeedul 'iqaab (QS. ar-Raʿd:6)

English Sahih International:

They impatiently urge you to bring about evil before good, while there has already occurred before them similar punishments [to what they demand]. And indeed, your Lord is the possessor of forgiveness for the people despite their wrongdoing, and indeed, your Lord is severe in penalty. (QS. Ar-Ra'd, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக் கொள்ள இவர்கள் உங்களிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் இவர்களுக்கு முன்னரும் நிச்சயமாக நிகழ்ந்தே இருக்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்தபோதிலும், நிச்சயமாக உங்கள் இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையானவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௬)

Jan Trust Foundation

(நபியே!) நன்மை (வருவதற்கு) முன்னர், தீமையைக் கொண்டு (வருமாறு) உம்மை இவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்; நிச்சயமாக இவர்களுக்கு முன்னரும் (வேதனை மிக்க தண்டனைகள் வழங்கப்பட்ட உதாரணமான) நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கின்றன; நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களை அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்; மேலும், உம் இறைவன் நிச்சயமாக வேதனை செய்வதிலும் கடுமையானவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உம்மிடம் நல்லதிற்கு முன்னர் கெட்டதை அவசரமாகத் தேடுகின்றனர். தண்டனைகள் இவர்களுக்கு முன்னர் (பலருக்கு) சென்றுள்ளன. நிச்சயமாக உம் இறைவன் (திருந்திவிடுகிற) மக்களை மன்னிப்பவன்தான், அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும். (திருந்தாத பாவிகளுக்கு) நிச்சயமாக உம் இறைவன் தண்டனை (வழங்குவதில்) கடுமையானவன்.