குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௫
Qur'an Surah Ar-Ra'd Verse 5
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَاِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرَابًا ءَاِنَّا لَفِيْ خَلْقٍ جَدِيْدٍ ەۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْۚ وَاُولٰۤىِٕكَ الْاَغْلٰلُ فِيْٓ اَعْنَاقِهِمْۚ وَاُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ (الرعد : ١٣)
- wa-in taʿjab
- وَإِن تَعْجَبْ
- And if you (are) astonished
- நீர்ஆச்சரியப்பட்டால்
- faʿajabun
- فَعَجَبٌ
- then astonishing
- ஆச்சரியமானதே
- qawluhum
- قَوْلُهُمْ
- (is) their saying
- அவர்களுடைய கூற்று
- a-idhā kunnā
- أَءِذَا كُنَّا
- "When we are
- நாங்கள் ஆகிவிட்டால்?
- turāban
- تُرَٰبًا
- dust
- மண்ணாக
- a-innā
- أَءِنَّا
- will we
- ?/நிச்சயமாக நாம்
- lafī khalqin
- لَفِى خَلْقٍ
- (be) indeed in a creation
- படைப்பில்
- jadīdin
- جَدِيدٍۗ
- new?"
- புதியது
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- இவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- (are) the ones who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved
- நிராகரித்தனர்
- birabbihim
- بِرَبِّهِمْۖ
- in their Lord
- தங்கள் இறைவனை
- wa-ulāika
- وَأُو۟لَٰٓئِكَ
- and those
- இன்னும் இவர்கள்
- l-aghlālu
- ٱلْأَغْلَٰلُ
- the iron chains
- அரிகண்டங்கள்
- fī aʿnāqihim
- فِىٓ أَعْنَاقِهِمْۖ
- (will be) in their necks
- இவர்களுடைய கழுத்துகளில்
- wa-ulāika
- وَأُو۟لَٰٓئِكَ
- those
- இன்னும் இவர்கள்
- aṣḥābu l-nāri
- أَصْحَٰبُ ٱلنَّارِۖ
- (are the) companions (of) the Fire
- நரகவாசிகள்
- hum fīhā
- هُمْ فِيهَا
- they in it
- அதில் இவர்கள்
- khālidūna
- خَٰلِدُونَ
- (will) abide forever
- நிரந்தரமானவர்கள்
Transliteration:
Wa in ta'jab fa'ajabun qawluhm 'a-izaa kunna turaaban 'a-inna lafee khalqin jadeed; ulaaa 'ikal lazeena kafaroo bi Rabbihim wa ulaaa'ikal aghlaalu feee a'naaqihim wa ulaa'ika Ashaabun Naari hum feehaa khaalidoon(QS. ar-Raʿd:5)
English Sahih International:
And if you are astonished, [O Muhammad] – then astonishing is their saying, "When we are dust, will we indeed be [brought] into a new creation?" Those are the ones who have disbelieved in their Lord, and those will have shackles upon their necks, and those are the companions of the Fire; they will abide therein eternally. (QS. Ar-Ra'd, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
(நபியே! இந்நிராகரிப்பவர்கள் உங்களைப் பொய்யாக்குவது பற்றி) நீங்கள் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதனை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) "நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?" என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவனையே நிராகரிக்கின்றனர். (ஆகவே மறுமையில்) இவர்களுடைய கழுத்தில் விலங்கிடப்படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௫)
Jan Trust Foundation
(அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?” என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே! இணைவைப்பாளர்கள் சிலைகளை வணங்குவதைப் பற்றி) நீர் ஆச்சரியப்பட்டால், “நாம் (இறந்து மண்ணோடு) மண்ணாக ஆகிவிட்டால், (அதற்கு பின்னர்) புதிய படைப்பில் நிச்சயமாக நாம் உருவாக்கப்படுவோமா?” என்ற அவர்களுடைய கூற்றும் (அதிகம்) ஆச்சரியமானதே! இவர்கள்தான் தங்கள் இறைவனை நிராகரித்தவர்கள். இவர்களுடைய கழுத்துகளில்தான் அரிகண்டங்கள் இருக்கும். இவர்கள்தான் நரகவாசிகள்! அதில் இவர்கள் நிரந்தரமானவர்கள்.