குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௪௩
Qur'an Surah Ar-Ra'd Verse 43
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا ۗ قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًاۢ بَيْنِيْ وَبَيْنَكُمْۙ وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ ࣖ (الرعد : ١٣)
- wayaqūlu
- وَيَقُولُ
- And say
- கூறுகிறார்(கள்)
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve
- நிராகரித்தனர்
- lasta
- لَسْتَ
- "You are not
- நீர் இல்லை
- mur'salan
- مُرْسَلًاۚ
- a Messenger"
- தூதராக
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- kafā
- كَفَىٰ
- "Sufficient
- போதுமாகி விட்டான்
- bil-lahi
- بِٱللَّهِ
- (is) Allah
- அல்லாஹ்
- shahīdan
- شَهِيدًۢا
- (as) a Witness
- சாட்சியால்
- baynī
- بَيْنِى
- between me
- எனக்கு மத்தியில்
- wabaynakum
- وَبَيْنَكُمْ
- and between you
- இன்னும் உங்களுக்கு மத்தியில்
- waman
- وَمَنْ
- and whoever
- இன்னும் எவர்
- ʿindahu
- عِندَهُۥ
- [he] has
- அவரிடம்
- ʿil'mu
- عِلْمُ
- knowledge
- ஞானம்
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- (of) the Book"
- வேதத்தின்
Transliteration:
Wa yaqoolul lazeena kafaroo lasta mursalaa; qul kafaa billaahi shaheedam bainee wa bainakum wa man 'indahoo 'ilmul Kitaab(QS. ar-Raʿd:43)
English Sahih International:
And those who have disbelieved say, "You are not a messenger." Say, [O Muhammad], "Sufficient is Allah as Witness between me and you, and [the witness of] whoever has knowledge of the Scripture." (QS. Ar-Ra'd, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) "நீங்கள் (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர் அல்ல" என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். அதற்கு (அவர்களை நோக்கி, "இதைப் பற்றி) எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வும், வேதத்தை உடையவர்களும் போதுமான சாட்சிகளாவர்" என்று கூறுங்கள். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௪௩)
Jan Trust Foundation
(நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்” என்று நீர் கூறிவிடுவீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) “நீர் தூதராக இல்லை” என்று நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். “எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அல்லாஹ்வும், வேதத்தின் ஞானம் எவரிடம் உள்ளதோ அவரும் சாட்சியால் போதுமாகி விட்டனர்” என்று கூறுவீராக!பேரன்பாளன் பேரருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...