Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௪௨

Qur'an Surah Ar-Ra'd Verse 42

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَدْ مَكَرَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِيْعًا ۗيَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍۗ وَسَيَعْلَمُ الْكُفّٰرُ لِمَنْ عُقْبَى الدَّارِ (الرعد : ١٣)

waqad
وَقَدْ
And certainly
திட்டமாக
makara
مَكَرَ
plotted
சூழ்ச்சி செய்தனர்
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
those who (were) from before them
இவர்களுக்கு முன்னிருந்தவர்கள்
falillahi
فَلِلَّهِ
but for Allah
அல்லாஹ்விற்கே
l-makru
ٱلْمَكْرُ
(is) the plot
சூழ்ச்சி
jamīʿan
جَمِيعًاۖ
all
அனைத்தும்
yaʿlamu
يَعْلَمُ
He knows
அறிவான்
mā taksibu
مَا تَكْسِبُ
what earns
எதை/செய்கிறது
kullu
كُلُّ
every
ஒவ்வொரு
nafsin
نَفْسٍۗ
soul
ஆன்மா
wasayaʿlamu
وَسَيَعْلَمُ
and will know
அறிவார்(கள்)
l-kufāru
ٱلْكُفَّٰرُ
the disbelievers
நிராகரிப்பவர்கள்
liman
لِمَنْ
for whom
எவருக்கு
ʿuq'bā
عُقْبَى
(is) the final
முடிவு
l-dāri
ٱلدَّارِ
the home
மறுமை

Transliteration:

Wa qad makaral lazeena min qablihim falillaahil makru jamee'aa; ya'lamu maa taksibu kullu nafs; wa sa ya'lamul kuffaaru liman 'uqbad daar (QS. ar-Raʿd:42)

English Sahih International:

And those before them had plotted, but to Allah belongs the plan entirely. He knows what every soul earns, and the disbelievers will know for whom is the final home. (QS. Ar-Ra'd, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம் தூதர்களுக்கு விரோதமாக இவ்வாறே) பல சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், சூழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ் விடம் சிக்கிவிடும். (ஏனென்றால்,) ஒவ்வொரு ஆத்மாவும் செய்கின்ற (சூழ்ச்சிகள்) அனைத்தையும் அவன் (திட்டமாக) நன்கறிகின்றான். ஆகவே, எவர்களுடைய காரியம் நன்மையாக முடியும் என்பதை இந்நிராகரிப்பவர்கள் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௪௨)

Jan Trust Foundation

(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன; ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களுக்கு எதிராக) திட்டமாக சூழ்ச்சி செய்தனர். சூழ்ச்சி அனைத்தும் அல்லாஹ்விற்கே. (அவன் நாடியதே நடக்கும்.) ஒவ்வொரு ஆன்மாவும் செய்வதை அவன் அறிவான். ஆகவே, எவருக்கு மறுமையின் (நல்ல) முடிவு உண்டு என்பதை நிராகரிப்பவர்கள் (விரைவில்) அறிவார்கள்.