Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௪௦

Qur'an Surah Ar-Ra'd Verse 40

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ مَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِيْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّيَنَّكَ فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ وَعَلَيْنَا الْحِسَابُ (الرعد : ١٣)

wa-in mā nuriyannaka
وَإِن مَّا نُرِيَنَّكَ
And whether (what) We show you
நிச்சயமாக நாம் காண்பித்தால்/உமக்கு
baʿḍa alladhī
بَعْضَ ٱلَّذِى
a part (of) what
சிலதை/எது
naʿiduhum
نَعِدُهُمْ
We have promised them
நாம் வாக்களிக்கிறோம் அவர்களுக்கு
aw natawaffayannaka
أَوْ نَتَوَفَّيَنَّكَ
or We cause you to die
அல்லது/கைப்பற்றிக் கொள்வோம்/உம்மை
fa-innamā
فَإِنَّمَا
so only
ஆகவே, எல்லாம்
ʿalayka
عَلَيْكَ
on you
உம்மீது
l-balāghu
ٱلْبَلَٰغُ
(is) the conveyance
எடுத்துரைப்பதுதான்
waʿalaynā
وَعَلَيْنَا
and on Us
நம்மீதுதான்
l-ḥisābu
ٱلْحِسَابُ
(is) the reckoning
விசாரணை

Transliteration:

Wa im maa nurriyannaka ba'dal lazee na'iduhum aw nata waffayannaka fa innamaa 'alaikal balaaghu wa 'alainal hisaab (QS. ar-Raʿd:40)

English Sahih International:

And whether We show you part of what We promise them or take you in death, upon you is only the [duty of] notification, and upon Us is the account. (QS. Ar-Ra'd, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்களுக்கு (வருமென) நாம் வாக்களித்த (தண்டனைகளில்) சிலவற்றை (நீங்கள் உயிருடன் இருக்கும்போதே) உங்களுடைய கண்ணால் நீங்கள் காணும்படி செய்தாலும் அல்லது (அது வருவதற்கு முன்னர்) நாம் உங்களைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்!) உங்களுடைய கடமையெல்லாம் தூதை சேர்ப்பிப்பது தான்! (அவர்களிடம் அதன்) கணக்கை வாங்குவது நம் கடமையாகும். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௪௦)

Jan Trust Foundation

(நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம் வாழ் நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும்படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்); உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை உமக்கு நிச்சயமாக நாம் காண்பித்தால் (அது நமது நாட்டப்படியே நடந்தது) அல்லது (அதற்கு முன்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொள்வோம். ஆகவே, உம்மீது (சுமத்தப்பட்ட கடமை) எல்லாம் எடுத்துரைப்பதுதான்! நம்மீதுதான் விசாரணை இருக்கிறது. (பாவிகளை நம் நாட்டப்படிதான் நாம் தண்டிப்போம். உமது விருப்பப்படியோ அவர்களின் விருப்பப்படியோ இல்லை.)