Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௩௯

Qur'an Surah Ar-Ra'd Verse 39

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَمْحُوا اللّٰهُ مَا يَشَاۤءُ وَيُثْبِتُ ۚوَعِنْدَهٗٓ اُمُّ الْكِتٰبِ (الرعد : ١٣)

yamḥū
يَمْحُوا۟
(Is) eliminated
அழிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
mā yashāu
مَا يَشَآءُ
what He wills
அவன் நாடியதை
wayuth'bitu
وَيُثْبِتُۖ
and confirms
தரிபடுத்துகிறான்
waʿindahu
وَعِندَهُۥٓ
and with Him
இன்னும் அவனிடம்தான்
ummu
أُمُّ
(is) the Mother (of) the Book
தாய்
l-kitābi
ٱلْكِتَٰبِ
(is) the Mother (of) the Book
புத்தகம்

Transliteration:

Yamhul laahu maa yashaaa'u wa yusbitu wa 'indahooo ummul Kitaab (QS. ar-Raʿd:39)

English Sahih International:

Allah eliminates what He wills or confirms, and with Him is the Mother of the Book. (QS. Ar-Ra'd, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

எனினும், அவன் (அதில்) நாடியதை அழித்து விடுவான்; (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான். (அனைத்திற்கும்) அசல் பதிவு அவனிடத்தில் இருக்கிறது. (அதன்படி எல்லா காரியங்களும் தவறாது நடைபெறும்.) (ஸூரத்துர் ரஃது, வசனம் ௩௯)

Jan Trust Foundation

(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அதில்) அவன் நாடியதை (தவணை வந்தவுடன் நிகழ்த்தி முடித்து) அழிக்கிறான்; (அவன் நாடியதை தவணை வரை) தரிபடுத்துகிறான். அவனிடம் தான் தாய் புத்தகம் இருக்கிறது.