குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௩௭
Qur'an Surah Ar-Ra'd Verse 37
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِيًّاۗ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَاۤءَهُمْ بَعْدَمَا جَاۤءَكَ مِنَ الْعِلْمِۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا وَاقٍ ࣖ (الرعد : ١٣)
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறுதான்
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- We have revealed it
- இதை இறக்கினோம்
- ḥuk'man
- حُكْمًا
- (to be) a judgment of authority
- சட்டமாக
- ʿarabiyyan
- عَرَبِيًّاۚ
- (in) Arabic
- அரபி மொழியில்
- wala-ini ittabaʿta
- وَلَئِنِ ٱتَّبَعْتَ
- And if you follow
- நீங்கள் பின்பற்றினால்
- ahwāahum
- أَهْوَآءَهُم
- their desires
- விருப்பங்களை அவர்களுடைய
- baʿdamā jāaka
- بَعْدَمَا جَآءَكَ
- after what came to you
- பின்னர் உமக்கு வந்தது
- mina l-ʿil'mi
- مِنَ ٱلْعِلْمِ
- of the knowledge
- கல்வி
- mā laka
- مَا لَكَ
- not for you
- இல்லை/உமக்கு
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- against Allah
- அல்லாஹ்விடமிருந்து
- min waliyyin
- مِن وَلِىٍّ
- any protector
- உதவியாளர் எவரும்
- walā wāqin
- وَلَا وَاقٍ
- and not defender
- பாதுகாவலர் இல்லை
Transliteration:
Wa kazaalika anzalnaahu hukman 'Arabiyyaa; wa la'init taba'ta ahwaaa 'ahum ba'da maa jaaa'aka minal 'ilmi maa laka minal laahi minw waliyinw wa laa waaq(QS. ar-Raʿd:37)
English Sahih International:
And thus We have revealed it as an Arabic legislation. And if you should follow their inclinations after what has come to you of knowledge, you would not have against Allah any ally or any protector. (QS. Ar-Ra'd, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
(நபியே! நீங்கள் நன்கறிந்து கொள்ளும் பொருட்டு) நாம் இதன் சட்டதிட்டங்களை அரபி (மொழி)யில் இவ்வாறு (விவரித்து) இறக்கி வைத்தோம். ஆகவே, (வஹீயின் மூலம்) உங்களுக்கு (திருக்குர்ஆன்) ஞானம் கிடைத்ததற்குப் பின்னரும் நீங்கள் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ் விடத்தில் (உங்களை) பாதுகாத்துக் கொள்ளவோ, உங்களுக்கு உதவி செய்யவோ ஒருவரும் இருக்ககமாட்டார். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௩௭)
Jan Trust Foundation
(நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) இவ்வாறுதான் நாம் இ(ந்த மார்க்கத்)தை (தெளிவான) சட்டமாக அரபி மொழியில் இறக்கினோம். உமக்கு கல்வி வந்ததற்குப் பின்னர் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து உமக்கு உதவியாளரும் பாதுகாவலரும் எவரும் இல்லை.