குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௩௬
Qur'an Surah Ar-Ra'd Verse 36
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَفْرَحُوْنَ بِمَآ اُنْزِلَ اِلَيْكَ وَمِنَ الْاَحْزَابِ مَنْ يُّنْكِرُ بَعْضَهٗ ۗ قُلْ اِنَّمَآ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَآ اُشْرِكَ بِهٖ ۗاِلَيْهِ اَدْعُوْا وَاِلَيْهِ مَاٰبِ (الرعد : ١٣)
- wa-alladhīna ātaynāhumu
- وَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
- And those (to) whom We have given them
- எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- the Book
- வேதத்தை
- yafraḥūna
- يَفْرَحُونَ
- rejoice
- மகிழ்வார்கள்
- bimā unzila ilayka
- بِمَآ أُنزِلَ إِلَيْكَۖ
- at what has been revealed to you
- இறக்கப்பட்டதைக் கொண்டு/உமக்கு
- wamina l-aḥzābi
- وَمِنَ ٱلْأَحْزَابِ
- but among the groups
- இன்னும் கூட்டங்களில்
- man yunkiru
- مَن يُنكِرُ
- (those) who deny
- எவர் மறுப்பார்
- baʿḍahu
- بَعْضَهُۥۚ
- a part of it
- அதில் சிலவற்றை
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- innamā umir'tu
- إِنَّمَآ أُمِرْتُ
- "Only I have been commanded
- நான் கட்டளையிடப்பட்டதெல்லாம்
- an aʿbuda
- أَنْ أَعْبُدَ
- that I worship
- நான் வணங்குவதற்கு
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- walā ush'rika bihi
- وَلَآ أُشْرِكَ بِهِۦٓۚ
- and not I associate partners with Him
- நான் இணைவைக்காமல் இருக்க/அவனுக்கு
- ilayhi
- إِلَيْهِ
- To Him
- அவன் பக்கமே
- adʿū
- أَدْعُوا۟
- I call
- அழைக்கிறேன்
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- and to Him
- இன்னும் அவன் பக்கமே
- maābi
- مَـَٔابِ
- (is) my return"
- என் திரும்புதல்
Transliteration:
Wallazeena aatainaa humul Kitaaba yafrahoona bimaa unzila ilaika wa minal Ahzaabi mai yunkiru ba'dah; qul innamaa umirtu an a'budal laaha wa laaa ushrika bih; ilaihi ad'oo wa ilaihi maab(QS. ar-Raʿd:36)
English Sahih International:
And [the believers among] those to whom We have given the [previous] Scripture rejoice at what has been revealed to you, [O Muhammad], but among the [opposing] factions are those who deny part of it [i.e., the Quran]. Say, "I have only been commanded to worship Allah and not associate [anything] with Him. To Him I invite, and to Him is my return." (QS. Ar-Ra'd, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
(நபியே! முன்னர்) நாம் எவர்களுக்கு வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி சந்தோஷப்படுவார்கள். எனினும், இ(வ்வேதத்)தில் சிலவற்றை நிராகரிப்பவர்களும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் (அவர்களை நோக்கி,) "அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணை வைக்காது, அவன் ஒருவனையே நான் வணங்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. (உங்களை) நான் அவனிடமே அழைக்கின்றேன்; நானும் அவனிடமே செல்வேன்" என்று கூறுங்கள். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௩௬)
Jan Trust Foundation
எவர்களுக்கு நாம் (முன்னர்) வேதத்தை அளித்தோமோ, அவர்கள் (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்; எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் இருக்கிறார்கள். (அவர்களை நோக்கி|)நான் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்டதைக் கொண்டு மகிழ்வார்கள். இ(வ்வேதத்)தில் சிலவற்றை மறுப்பவர்களும் (உமக்கு எதிரான) கூட்டங்களில் உண்டு. “நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் அல்லாஹ்வை நான் வணங்குவதற்கும் அவனுக்கு நான் இணைவைக்காமல் இருக்கவும்தான்; அவன் பக்கமே அழைக்கிறேன்; அவன் பக்கமே என் திரும்புதல் இருக்கிறது”என்று கூறுவீராக!