குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௩௧
Qur'an Surah Ar-Ra'd Verse 31
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُيِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰىۗ بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِيْعًاۗ اَفَلَمْ يَا۟يْـَٔسِ الَّذِيْنَ اٰمَنُوْٓا اَنْ لَّوْ يَشَاۤءُ اللّٰهُ لَهَدَى النَّاسَ جَمِيْعًاۗ وَلَا يَزَالُ الَّذِيْنَ كَفَرُوْا تُصِيْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِيْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰى يَأْتِيَ وَعْدُ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ ࣖ (الرعد : ١٣)
- walaw anna qur'ānan
- وَلَوْ أَنَّ قُرْءَانًا
- And if that was any Quran
- வேதம்/இருந்தால்
- suyyirat
- سُيِّرَتْ
- could be moved
- நகர்த்தப்பட்டது
- bihi
- بِهِ
- by it
- அதைக் கொண்டு
- l-jibālu
- ٱلْجِبَالُ
- the mountains
- மலைகள்
- aw quṭṭiʿat
- أَوْ قُطِّعَتْ
- or could be cloven asunder
- அல்லது/துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால்
- bihi
- بِهِ
- by it
- அதைக் கொண்டு
- l-arḍu
- ٱلْأَرْضُ
- the earth
- பூமி
- aw kullima
- أَوْ كُلِّمَ
- or could be made to speak
- அல்லது/பேச வைக்கப்பட்டிருந்தால்...
- bihi
- بِهِ
- by it
- அதைக் கொண்டு
- l-mawtā
- ٱلْمَوْتَىٰۗ
- the dead
- மரணித்தவர்கள்
- bal lillahi
- بَل لِّلَّهِ
- Nay with Allah
- மாறாக/அல்லாஹ்வுக்குரியனவே
- l-amru
- ٱلْأَمْرُ
- (is) the command
- அதிகாரம்
- jamīʿan
- جَمِيعًاۗ
- all
- அனைத்தும்
- afalam yāy'asi
- أَفَلَمْ يَا۟يْـَٔسِ
- Then do not know
- அறியவில்லையா?
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوٓا۟
- believe
- நம்பிக்கை கொண்டனர்
- an law yashāu
- أَن لَّوْ يَشَآءُ
- that if had willed
- நாடினால்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- lahadā
- لَهَدَى
- surely, He would have guided
- நேர்வழி படுத்தியிருப்பான்
- l-nāsa
- ٱلنَّاسَ
- all?
- மக்களை
- jamīʿan
- جَمِيعًاۗ
- all of the mankind?
- அனைவரை
- walā yazālu
- وَلَا يَزَالُ
- And not will cease
- தொடர்ந்து இருக்கும்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve
- நிராகரித்தனர்
- tuṣībuhum
- تُصِيبُهُم
- to strike them
- அடையும்/அவர்களை
- bimā
- بِمَا
- for what
- காரணமாக
- ṣanaʿū
- صَنَعُوا۟
- they did
- செய்தனர்
- qāriʿatun
- قَارِعَةٌ
- a disaster
- ஒரு திடுக்கம்
- aw
- أَوْ
- or
- அல்லது
- taḥullu
- تَحُلُّ
- it settles
- நீர் இறங்குவீர்
- qarīban
- قَرِيبًا
- close
- அருகாமையில்
- min dārihim
- مِّن دَارِهِمْ
- from their homes
- அவர்களின் ஊருக்கு
- ḥattā
- حَتَّىٰ
- until
- இறுதியாக
- yatiya
- يَأْتِىَ
- comes
- வரும்
- waʿdu
- وَعْدُ
- (the) promise
- வாக்குறுதி
- l-lahi
- ٱللَّهِۚ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- lā yukh'lifu
- لَا يُخْلِفُ
- (will) not fail
- மாற்ற மாட்டான்
- l-mīʿāda
- ٱلْمِيعَادَ
- (in) the Promise
- வாக்குறுதியை
Transliteration:
Wa law anna Quraanan suyyirat bihil jibaalu aw qutti'at bihil ardu aw kullima bihil mawtaa; bal lillaahil amru jamee'aa; afalam yai'asil lazeena aamanooo al law yashaaa 'ullaahu lahadan naasa jamee'aa; wa laa yazaalul lazeena kafaroo tuseebuhum bimaa sana'oo qaari'atun aw tahullu qareebam min daarihim hatta yaatiya wa'dul laah; innal laaha laa yukhliful mee'aad(QS. ar-Raʿd:31)
English Sahih International:
And if there was any Quran [i.e., recitation] by which the mountains would be removed or the earth would be broken apart or the dead would be made to speak, [it would be this Quran], but to Allah belongs the affair entirely. Then have those who believed not accepted that had Allah willed, He would have guided the people, all of them? And those who disbelieve do not cease to be struck, for what they have done, by calamity – or it will descend near their home – until there comes the promise of Allah. Indeed, Allah does not fail in [His] promise. (QS. Ar-Ra'd, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! நாம் இவர்களுக்கு இதனையன்றி வேறு) யாதொரு குர்ஆனை அருள் செய்து, அதைக் கொண்டு மலைகள் நகரும் படியாகவோ அல்லது பூமியைத் துண்டு துண்டாகவோ அல்லது மரணித்தவர்களைப் பேசும்படியாகவோ செய்தபோதிலும், (நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.) எனினும், எல்லா காரியங்களும் அல்லாஹ்வுக்குரியனவே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மனிதர்கள் அனைவரையுமே நேரான வழியில் நடத்தி விடுவான் என்பதைப் பற்றி நம்பிக்கையாளர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லையா? நிராகரிப்பவர்களை அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக (அவர்கள் திடுக்கிடக்கூடிய) யாதேனுமோர் சம்பவம் அவர்களை வந்தடைந்து கொண்டேயிருக்கும். அல்லது அவர்களின் வீட்டிற்குச் சமீபத்திலேயே (அத்தகைய சம்பவங்கள்) சம்பவித்துக் கொண்டே இருந்து ("நீங்கள் வெற்றி கொள்வீர்கள்" என்று உங்களுக்குக் கூறப்பட்ட) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடய வாக்குறுதியில் தவறுவதில்லை. (ஸூரத்துர் ரஃது, வசனம் ௩௧)
Jan Trust Foundation
நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசும்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசுவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன; ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள் வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே! முன்னர் இறக்கப்பட்ட) ஒரு வேதம், அதைக் கொண்டு மலைகள் நகர்த்தப்பட்டிருந்தால் அல்லது அதைக் கொண்டு பூமி துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால் அல்லது அதைக் கொண்டு மரணித்தவர்கள் பேசவைக்கப்பட்டிருந்தால்... (உங்களுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தைக் கொண்டும் அப்படி செய்யப்பட்டிருக்கும்.) மாறாக, அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மக்கள் அனைவரையும் நேர்வழிபடுத்தியிருப்பான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா? (மக்காவைச் சேர்ந்த இந்)நிராகரித்தவர்கள் செய்ததின் காரணமாக அவர்களை ஒரு திடுக்கம் அடைந்து கொண்டே இருக்கும். அல்லது அவர்களின் ஊருக்கு அருகாமையில் நீர் (உம்படையுடன்) இறங்குவீர். இறுதியாக, அல்லாஹ்வின் வாக்குறுதி வரும். (விரைவில் அவர்களை நீர் வெற்றி கொள்வீர்.) நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதியை மாற்றமாட்டான்.