குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௩௦
Qur'an Surah Ar-Ra'd Verse 30
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِيْٓ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَآ اُمَمٌ لِّتَتْلُوَا۟ عَلَيْهِمُ الَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ وَهُمْ يَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِۗ قُلْ هُوَ رَبِّيْ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ مَتَابِ (الرعد : ١٣)
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறே
- arsalnāka
- أَرْسَلْنَٰكَ
- We have sent you
- அனுப்பினோம்/உம்மை
- fī ummatin
- فِىٓ أُمَّةٍ
- to a nation
- ஒரு சமுதாயத்திடம்
- qad khalat
- قَدْ خَلَتْ
- verily have passed away
- சென்றிருக்கின்றன
- min qablihā
- مِن قَبْلِهَآ
- from before it
- இவர்களுக்கு முன்னரும்
- umamun
- أُمَمٌ
- nations
- பல சமுதாயங்கள்
- litatluwā
- لِّتَتْلُوَا۟
- so that you might recite
- நீர் ஓதுவதற்காக
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- to them
- இவர்கள் முன்
- alladhī awḥaynā
- ٱلَّذِىٓ أَوْحَيْنَآ
- what We revealed
- எது/நாம் வஹீ அறிவித்தோம்
- ilayka
- إِلَيْكَ
- to you
- உமக்கு
- wahum
- وَهُمْ
- while they
- இவர்களோ
- yakfurūna
- يَكْفُرُونَ
- disbelieve
- நிராகரிக்கின்றனர்
- bil-raḥmāni
- بِٱلرَّحْمَٰنِۚ
- in the Most Gracious
- ரஹ்மானை
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- huwa
- هُوَ
- "He
- அவன்தான்
- rabbī
- رَبِّى
- (is) my Lord
- என் இறைவன்
- lā
- لَآ
- (there is) no
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- god
- வணக்கத்திற்குரியவன்
- illā
- إِلَّا
- except
- தவிர
- huwa
- هُوَ
- Him
- அவனை
- ʿalayhi
- عَلَيْهِ
- Upon Him
- அவன் மீது
- tawakkaltu
- تَوَكَّلْتُ
- I put my trust
- நம்பிக்கை வைத்தேன்
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- and to Him
- இன்னும் அவனிடமே
- matābi
- مَتَابِ
- (is) my return"
- என் பாவ மீட்சி
Transliteration:
Kazaalika arsalnaaka feee ummatin qad khalat min qablihaaa umamul litatluwa 'alaihimul lazeee awhainaaa ilaika wa hum yakfuroona bir Rahmaaan; qul Huwa Rabbee laaa ilaaha illaa Huwa Rabbee laaa ilaaha illaa Huwa 'alaihi tawakkaltu wa ilaihi mataab(QS. ar-Raʿd:30)
English Sahih International:
Thus have We sent you to a community before which [other] communities have passed on so you might recite to them that which We revealed to you, while they disbelieve in the Most Merciful. Say, "He is my Lord; there is no deity except Him. Upon Him I rely, and to Him is my return." (QS. Ar-Ra'd, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
(நபியே! இதற்கு முன்னர் நாம் தூதர்கள் பலரை அனுப்பிய) இவ்வாறே உங்களையும் நாம் (நம்முடைய தூதராக) ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம். இவர்களுக்கு முன்னரும் (இவர்களில்) பல வகுப்பினர் சென்றிருக்கின்றனர். (நீண்ட காலமாக அவர்களிடம் யாதொரு தூதரும் வரவில்லை.) ஆகவே, நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பவற்றை இவர்களுக்கு நீங்கள் ஓதிக் காண்பித்து வாருங்கள். எனினும், இவர்களோ (உங்களை நிராகரிப்பது மட்டுமல்ல; தங்கள் மீது பல அருள்கள் புரிந்திருக்கும் அளவற்ற அருளாளனாகிய) ரஹ்மானையுமே நிராகரிக்கின்றனர். நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "அவன்தான் என்னுடைய இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவரு மில்லை. அவனையே நான் நம்புகிறேன்; அவனிடமே நான் மீளுவேன்." (ஸூரத்துர் ரஃது, வசனம் ௩௦)
Jan Trust Foundation
(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்| “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது” என்று நீர் கூறுவீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே! முன்பு தூதர்களை அனுப்பிய) இவ்வாறே, உம்மை (நம் தூதராக) ஒரு சமுதாயத்திடம் அனுப்பினோம். இவர்களுக்கு முன்னரும் பல சமதாயங்கள் சென்றிருக்கின்றன. நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை இவர்கள் முன் நீர் ஓதுவதற்காக (அவர்களிடம் உம்மை அனுப்பினோம்). இவர்களோ ரஹ்மானை (பேரருளாளன் அல்லாஹ்வை) நிராகரிக்கின்றனர். கூறுவீராக! “அவன்தான் என் இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் மீது நம்பிக்கை வைத்தேன். இன்னும் அவனிடமே என் பாவ மீட்சி இருக்கிறது.”