குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௨௮
Qur'an Surah Ar-Ra'd Verse 28
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَىِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ ۗ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَىِٕنُّ الْقُلُوْبُ ۗ (الرعد : ١٣)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believed
- நம்பிக்கை கொண்டனர்
- wataṭma-innu
- وَتَطْمَئِنُّ
- and find satisfaction
- இன்னும் நிம்மதியடைகின்றன
- qulūbuhum
- قُلُوبُهُم
- their hearts
- உள்ளங்கள்/அவர்களுடைய
- bidhik'ri
- بِذِكْرِ
- in the remembrance
- நினைவால்
- l-lahi
- ٱللَّهِۗ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- alā
- أَلَا
- No doubt
- அறிந்துகொள்ளுங்கள்!
- bidhik'ri
- بِذِكْرِ
- in the remembrance
- நினைவைக் கொண்டே
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- taṭma-innu
- تَطْمَئِنُّ
- find satisfaction
- நிம்மதியடைகின்றன
- l-qulūbu
- ٱلْقُلُوبُ
- the hearts"
- உள்ளங்கள்
Transliteration:
Allazeena aamanoo wa tatma'innu quloobuhum bizikril laah; alaa bizikril laahi tatma'innul quloob(QS. ar-Raʿd:28)
English Sahih International:
Those who have believed and whose hearts are assured by the remembrance of Allah. Unquestionably, by the remembrance of Allah hearts are assured." (QS. Ar-Ra'd, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௨௮)
Jan Trust Foundation
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்; அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. அல்லாஹ்வின் நினைவைக் கொண்டே உள்ளங்கள் நிம்மதியடைகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.