குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௨௭
Qur'an Surah Ar-Ra'd Verse 27
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖۗ قُلْ اِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْٓ اِلَيْهِ مَنْ اَنَابَۖ (الرعد : ١٣)
- wayaqūlu
- وَيَقُولُ
- And say
- கூறுகிறார்(கள்)
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieved
- எவர்கள்/நிராகரித்தனர்
- lawlā unzila
- لَوْلَآ أُنزِلَ
- "Why has not been sent down
- இறக்கப்பட வேண்டாமா?
- ʿalayhi
- عَلَيْهِ
- upon him
- இவர் மீது
- āyatun
- ءَايَةٌ
- a Sign
- ஓர் அத்தாட்சி
- min rabbihi
- مِّن رَّبِّهِۦۗ
- from his Lord?"
- இவருடைய இறைவனிடமிருந்து
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- "Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- yuḍillu
- يُضِلُّ
- lets go astray
- வழிகெடுக்கிறான்
- man yashāu
- مَن يَشَآءُ
- whom He wills
- தான் நாடுகின்றவர்களை
- wayahdī
- وَيَهْدِىٓ
- and guides
- இன்னும் நேர்வழி செலுத்துகிறான்
- ilayhi
- إِلَيْهِ
- to Himself
- தன் பக்கம்
- man anāba
- مَنْ أَنَابَ
- whoever turns back
- எவர்/திரும்பினார்
Transliteration:
Wa yaqoolul lazeena kafaroo law laaa unzila 'alaihi Aayatum mir Rabbih; qul innal laaha yudillu mai yashaa'u wa yahdeee ilaihi man anaab(QS. ar-Raʿd:27)
English Sahih International:
And those who disbelieved say, "Why has a sign not been sent down to him from his Lord?" Say, [O Muhammad], "Indeed, Allah leaves astray whom He wills and guides to Himself whoever turns back [to Him] – (QS. Ar-Ra'd, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இந்நிராகரிப்பவர்கள், (நம் தூதராகிய உங்களைக் குறிப்பிட்டு) "இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பியவாறு) ஏதேனுமோர் அத்தாட்சி அருளப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் (தண்டிக்க) நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். முற்றிலும் அவனையே நோக்கி நிற்பவர்களைத்தான் நேரான வழியில் செலுத்துகிறான். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௨௭)
Jan Trust Foundation
“இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்| “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்று
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரித்தவர்கள், “இவர் (-இத்தூதர்) மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறான். தன் பக்கம் திரும்பியவர்களை நேர்வழி செலுத்துகிறான்.