Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௨௫

Qur'an Surah Ar-Ra'd Verse 25

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ ۢ بَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖٓ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِۙ اُولٰۤىِٕكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْۤءُ الدَّارِ (الرعد : ١٣)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
இன்னும் எவர்கள்
yanquḍūna
يَنقُضُونَ
break
முறிக்கிறார்கள்
ʿahda
عَهْدَ
the covenant
வாக்குறுதியை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
min baʿdi
مِنۢ بَعْدِ
from after
பின்னர்
mīthāqihi
مِيثَٰقِهِۦ
contracting it
அது உறுதியான
wayaqṭaʿūna
وَيَقْطَعُونَ
and sever
இன்னும் துண்டிக்கிறார்கள்
مَآ
what
எதை
amara
أَمَرَ
(has been) commanded
ஏவினான்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்
bihi
بِهِۦٓ
for it
அதை
an yūṣala
أَن يُوصَلَ
to be joined
சேர்க்கப்படும்
wayuf'sidūna
وَيُفْسِدُونَ
and spread corruption
இன்னும் விஷமம் செய்வார்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۙ
in the earth
பூமியில்
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
இவர்கள்
lahumu l-laʿnatu
لَهُمُ ٱللَّعْنَةُ
for them (is) the curse
இவர்களுக்கு/சாபம்
walahum
وَلَهُمْ
and for them
இன்னும் இவர்களுக்கு
sūu
سُوٓءُ
(is) an evil
மிகக் கெட்டது
l-dāri
ٱلدَّارِ
home
வீடு

Transliteration:

Wallazeena yanqudoona 'Ahdal laahi mim ba'di meesaaqihee wa yaqta'oona maaa amaral laahu biheee ai yoosala wa yufsidoona fil ardi ulaaa'ika lahumul la'natu wa lahum sooo'ud daar (QS. ar-Raʿd:25)

English Sahih International:

But those who break the covenant of Allah after contracting it and sever that which Allah has ordered to be joined and spread corruption on earth – for them is the curse, and they will have the worst home. (QS. Ar-Ra'd, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

எவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை அதனை உறுதிப்படுத்திய பின்னரும் முறித்து விடுகிறார்களோ அவர் களுக்கும், எவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி ஏவியதைப் பிரித்து விடுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டு அலைகிறார்களோ அவர்களுக்கும் (இறைவனுடைய) சாபம்தான் கிடைக்கும். அன்றி, அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் (தயார்படுத்தப்பட்டு) இருக்கிறது. (ஸூரத்துர் ரஃது, வசனம் ௨௫)

Jan Trust Foundation

எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ; இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ; பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ - அத்தகையோருக்குச் சாபந்தான்; அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் வாக்குறுதியை அது உறுதியான பின்னர் முறிப்பவர்கள், சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவிய (சொந்த பந்தத்)தை துண்டிப்பவர்கள், பூமியில் விஷமம் (-கொலை, கொள்ளை, கலகம்) செய்பவர்கள் ஆகிய இவர்கள் இவர்களுக்கு சாபம்தான். இன்னும் இவர்களுக்கு (நரகலோகத்தில்) மிகக் கெட்ட வீடு உண்டு.