Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௨௪

Qur'an Surah Ar-Ra'd Verse 24

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَلٰمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِۗ (الرعد : ١٣)

salāmun
سَلَٰمٌ
(Saying) Peace
ஈடேற்றம் உண்டாகுக
ʿalaykum
عَلَيْكُم
(be) upon you
உங்களுக்கு
bimā ṣabartum
بِمَا صَبَرْتُمْۚ
for what you patiently endured
நீங்கள் பொறுமையாக இருந்த காரணத்தால்
faniʿ'ma
فَنِعْمَ
And excellent
மிக்க நல்லதாயிற்று
ʿuq'bā
عُقْبَى
(is) the final attainment
இறுதி
l-dāri
ٱلدَّارِ
(of) the Home"
வீடு

Transliteration:

Salaamun 'alaikum bimaa sabartum; fani'ma 'uqbad daar (QS. ar-Raʿd:24)

English Sahih International:

"Peace [i.e., security] be upon you for what you patiently endured. And excellent is the final home." (QS. Ar-Ra'd, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(இவர்களை நோக்கி) "நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (உங்களுடைய இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்று கூறுவார்கள்.) (ஸூரத்துர் ரஃது, வசனம் ௨௪)

Jan Trust Foundation

“நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நீங்கள் பொறுமையாக இருந்த காரணத்தால் உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக! (உங்களுக்கு அமைந்த இந்த சொர்க்கலோக) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று”(என்று கூறுவார்கள்).