Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௨

Qur'an Surah Ar-Ra'd Verse 2

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ الَّذِيْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَۗ كُلٌّ يَّجْرِيْ لِاَجَلٍ مُّسَمًّىۗ يُدَبِّرُ الْاَمْرَ يُفَصِّلُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ بِلِقَاۤءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ (الرعد : ١٣)

al-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
(is) the One Who
எத்தகையவன்
rafaʿa
رَفَعَ
raised
உயர்த்தினான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களை
bighayri
بِغَيْرِ
without
இன்றி
ʿamadin
عَمَدٍ
pillars
தூண்கள்
tarawnahā
تَرَوْنَهَاۖ
that you see
காண்கிறீர்கள்/அதை
thumma
ثُمَّ
then
பிறகு
is'tawā
ٱسْتَوَىٰ
He established
உயர்ந்து விட்டான்
ʿalā
عَلَى
on
மேல்
l-ʿarshi
ٱلْعَرْشِۖ
the Throne
அர்ஷ்
wasakhara
وَسَخَّرَ
and subjected
இன்னும் வசப்படுத்தினான்
l-shamsa
ٱلشَّمْسَ
the sun
சூரியனை
wal-qamara
وَٱلْقَمَرَۖ
and the moon
இன்னும் சந்திரனை
kullun
كُلٌّ
each
எல்லாம்
yajrī
يَجْرِى
running
ஓடுகின்றன
li-ajalin
لِأَجَلٍ
for a term
ஒரு தவணையின் பக்கம்
musamman
مُّسَمًّىۚ
appointed
குறிப்பிடப்பட்டது
yudabbiru
يُدَبِّرُ
He arranges
திட்டமிடுகிறான்
l-amra
ٱلْأَمْرَ
the matter;
காரியத்தை
yufaṣṣilu
يُفَصِّلُ
He details
விவரிக்கிறான்
l-āyāti
ٱلْءَايَٰتِ
the Signs
வசனங்களை
laʿallakum
لَعَلَّكُم
so that you may
ழுமீலிs ஸசீவீÓனீ
biliqāi
بِلِقَآءِ
in the meeting
சந்திப்பை
rabbikum
رَبِّكُمْ
(with) your Lord
உங்கள் இறைவன்
tūqinūna
تُوقِنُونَ
believe with certainty
உறுதி கொள்கிறீர்கள்

Transliteration:

Allaahul lazee raf'as samaawaati bighairi 'amadin tarawnahaa summas tawaa 'alal 'Arshi wa sakhkharash shamsa walqamara kulluny yajree li ajalim musammaa; yudabbirul amra yufassilil Aayaati la'allakum biliqaaa'i Rabbikum tooqinoon (QS. ar-Raʿd:2)

English Sahih International:

It is Allah who erected the heavens without pillars that you [can] see; then He established Himself above the Throne and made subject the sun and the moon, each running [its course] for a specified term. He arranges [each] matter; He details the signs that you may, of the meeting with your Lord, be certain. (QS. Ar-Ra'd, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அதனை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். அன்றி, அர்ஷின் மீது அவன் (தன் மகிமைக்கு தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத் திற்குள் வைத்திருக்கின்றான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட கால திட்டப்படி நடந்து வருகிறது. (அவற்றில் நடைபெறும்) சலக காரியங்களையும் அவனே திட்டமிடுகின்றான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (தன்னுடைய) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரித்து அறிவிக்கிறான். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௨)

Jan Trust Foundation

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்தான், வானங்களை தூண்கள் இன்றி உயர்த்தியவன்! அதை நீங்கள் காண்கிறீர்கள். பிறகு அர்ஷின் மேல் உயர்ந்து விட்டான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிடப்பட்ட ஒரு தவணையின் பக்கம் ஓடுகின்றன. காரியத்தை திட்டமிடுகிறான். நீங்கள் உங்கள் இறைவனின் சந்திப்பை உறுதி கொள்ள வேண்டும் என்பதற்காக (தன்) வசனங்களை (உங்களுக்கு) விவரிக்கிறான்.