குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௧௫
Qur'an Surah Ar-Ra'd Verse 15
ஸூரத்துர் ரஃது [௧௩]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِلّٰهِ يَسْجُدُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۩ (الرعد : ١٣)
- walillahi
- وَلِلَّهِ
- And to Allah
- அல்லாஹ்வுக்கு
- yasjudu
- يَسْجُدُ
- prostrates
- சிரம் பணிகின்றனர்
- man fī l-samāwāti
- مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
- whoever (is) in the heavens
- எவர்/வானங்களில்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- இன்னும் பூமியில்
- ṭawʿan
- طَوْعًا
- willingly
- ஆசையாக
- wakarhan
- وَكَرْهًا
- or unwillingly
- இன்னும் நிர்பந்தமாக
- waẓilāluhum
- وَظِلَٰلُهُم
- and (so do) their shadows
- அவர்களின் நிழல்களும்
- bil-ghuduwi
- بِٱلْغُدُوِّ
- in the mornings
- காலையில்
- wal-āṣāli
- وَٱلْءَاصَالِ۩
- and in the afternoons
- இன்னும் மாலைகளில்
Transliteration:
Wa lillaahi yasjudu man fis samaawaati wal ardi taw 'anw wa karhanw wa zilaaluhum bilghuduwwi wal aasaal(QS. ar-Raʿd:15)
English Sahih International:
And to Allah prostrates whoever is within the heavens and the earth, willingly or by compulsion, and their shadows [as well] in the mornings and the afternoons. (QS. Ar-Ra'd, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வழிபட்டே தீரும். காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்களும் (அவனுடைய கட்டளைக்கு வழிப்பட்டே முன் பின் செல்கின்றன). (ஸூரத்துர் ரஃது, வசனம் ௧௫)
Jan Trust Foundation
வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் ஆசையாகவும், நிர்பந்தமாகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிகின்றனர்; காலை(களில்) இன்னும் மாலைகளில் அவர்களின் நிழல்களும் (அவனுக்கே சிரம் பணிகின்றன).