Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௧௨

Qur'an Surah Ar-Ra'd Verse 12

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الَّذِيْ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَۚ (الرعد : ١٣)

huwa
هُوَ
He
அவன்
alladhī
ٱلَّذِى
(is) the One Who
எத்தகையவன்
yurīkumu
يُرِيكُمُ
shows you
காட்டுகின்றான்/உங்களுக்கு
l-barqa
ٱلْبَرْقَ
the lightning
மின்னலை
khawfan
خَوْفًا
a fear
பயமாக
waṭamaʿan
وَطَمَعًا
and a hope
இன்னும் ஆசையாக
wayunshi-u
وَيُنشِئُ
and brings up
இன்னும் கிளப்புகின்றான்
l-saḥāba
ٱلسَّحَابَ
the clouds
மேகங்களை
l-thiqāla
ٱلثِّقَالَ
the heavy
கனமானவை

Transliteration:

Huwal lazee yureekumul barqa khawfanw wa tama'anw wa yunshi'us sahaabas siqaal (QS. ar-Raʿd:12)

English Sahih International:

It is He who shows you lightning, [causing] fear and aspiration, and generates the heavy clouds. (QS. Ar-Ra'd, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(உங்களுக்கு) பயத்தையும் ஆதரவையும் தரக்கூடிய மின்னலை அவனே உங்கள் முன் பிரகாசிக்கச் செய்கிறான். (மழையைச் சுமந்த) பளுவான மேகங்களையும் அவனே கிளப்புகிறான். (ஸூரத்துர் ரஃது, வசனம் ௧௨)

Jan Trust Foundation

அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் உங்க(ளில் பயணிக)ளுக்கு மின்னலை பயமாகவும் (மற்றவர்களுக்கு) ஆசையாகவும் காட்டுகின்றான். (மழையைச் சுமந்த) கனமான மேகங்களை கிளப்புகின்றான்.