Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துர் ரஃது வசனம் ௧௦

Qur'an Surah Ar-Ra'd Verse 10

ஸூரத்துர் ரஃது [௧௩]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَوَاۤءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍۢ بِالَّيْلِ وَسَارِبٌۢ بِالنَّهَارِ (الرعد : ١٣)

sawāon
سَوَآءٌ
(It is) same (to Him)
சமமே
minkum
مِّنكُم
[of you]
உங்களில்
man
مَّنْ
(one) who
எவன்
asarra
أَسَرَّ
conceals
ரகசியப்படுத்தினான்
l-qawla waman
ٱلْقَوْلَ وَمَن
the speech or (one) who
பேச்சை/இன்னும் எவன்
jahara
جَهَرَ
publicizes
பகிரங்கப்படுத்தினான்
bihi
بِهِۦ
it
அதை
waman huwa
وَمَنْ هُوَ
and (one) who [he]
இன்னும் எவன்/அவன்
mus'takhfin
مُسْتَخْفٍۭ
(is) hidden
மறைத்து செய்பவனாக
bi-al-layli
بِٱلَّيْلِ
by night
இரவில்
wasāribun
وَسَارِبٌۢ
or goes freely
இன்னும் வெளிப்படுபவன்
bil-nahāri
بِٱلنَّهَارِ
by day
பகலில்

Transliteration:

Sawaaa'um minkum man asarral qawla wa man jahara bihee wa man huwa mustakhfim billaili wa saaribum binnahaar (QS. ar-Raʿd:10)

English Sahih International:

It is the same [to Him] concerning you whether one conceals [his] speech or publicizes it and whether one is hidden by night or conspicuous [among others] by day. (QS. Ar-Ra'd, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

உங்களில் எவரேனும் (தன்) வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அதனை பகிரங்கமாகக் கூறினாலும் அவருக்கு (இரண்டும்) சமமே! (அவ்வாறே உங்களில்) எவரும் இரவில் தான் செய்வதை மறைத்துக்கொண்டாலும் அல்லது பகலில் பகிரங்கமாகச் செய்தாலும் (அவருக்குச் சமமே! அனைவரின் செயலையும் அவன் நன்கறிவான்.) (ஸூரத்துர் ரஃது, வசனம் ௧௦)

Jan Trust Foundation

எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களில் (தன்) பேச்சை ரகசியப்படுத்தியவனும் அதை பகிரங்கப்படுத்தியவனும் இரவில் (தனது தீமைகளை) மறைத்து செய்து பகலில் (நல்லவனாக) வெளிப்படுபவனும் அ(ந்த இறை)வனுக்குச் சமமே!