وَالَّذِيْنَ يَصِلُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖٓ اَنْ يُّوْصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُوْنَ سُوْۤءَ الْحِسَابِ ۗ ٢١
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- yaṣilūna
- يَصِلُونَ
- சேர்ப்பார்கள்
- mā amara
- مَآ أَمَرَ
- எதை/ஏவினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bihi an yūṣala
- بِهِۦٓ أَن يُوصَلَ
- அதை/சேர்க்கப்பட வேண்டும்
- wayakhshawna
- وَيَخْشَوْنَ
- இன்னும் அச்சம் கொள்வார்கள்
- rabbahum
- رَبَّهُمْ
- தங்கள் இறைவனை
- wayakhāfūna
- وَيَخَافُونَ
- இன்னும் பயப்படுவார்கள்
- sūa
- سُوٓءَ
- கடினமான
- l-ḥisābi
- ٱلْحِسَابِ
- விசாரணையை
மேலும், அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதைச் சேர்த்தும் வைப்பார்கள்; தங்கள் இறைவனுக்கு பயந்தும் நடப்பார்கள்; (மறுமையில்) கேட்கப்படும் கொடிய கேள்விகளைப் பற்றி (எந்நேரமும்) பயந்துகொண்டும் இருப்பார்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௧)Tafseer
وَالَّذِيْنَ صَبَرُوا ابْتِغَاۤءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً وَّيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ اُولٰۤىِٕكَ لَهُمْ عُقْبَى الدَّارِۙ ٢٢
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- ṣabarū
- صَبَرُوا۟
- பொறுத்தனர்
- ib'tighāa
- ٱبْتِغَآءَ
- நாடி
- wajhi
- وَجْهِ
- முகத்தை
- rabbihim
- رَبِّهِمْ
- தங்கள் இறைவனின்
- wa-aqāmū
- وَأَقَامُوا۟
- இன்னும் நிலைநிறுத்தினர்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- wa-anfaqū
- وَأَنفَقُوا۟
- இன்னும் தர்மம் புரிந்தனர்
- mimmā razaqnāhum
- مِمَّا رَزَقْنَٰهُمْ
- நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து
- sirran
- سِرًّا
- இரகசியமாக
- waʿalāniyatan
- وَعَلَانِيَةً
- இன்னும் வெளிப்படையாக
- wayadraūna
- وَيَدْرَءُونَ
- இன்னும் தடுப்பார்கள்
- bil-ḥasanati
- بِٱلْحَسَنَةِ
- நன்மையைக் கொண்டு
- l-sayi-ata
- ٱلسَّيِّئَةَ
- தீமையை
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- lahum
- لَهُمْ
- இவர்களுக்குத்தான்
- ʿuq'bā
- عُقْبَى
- முடிவு
- l-dāri
- ٱلدَّارِ
- மறுமை
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தைக் கோரி (எத்தகைய கஷ்டத்தையும்) பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள்; தொழுகையையும் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்கு அளித்தவற்றை ரகசியமாகவும் வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் (கைக்) கொண்டே தீமையைத் தவிர்த்து விடுவார்கள். இத்தகையவர்களுக்கு (மறுமையில்) நல்ல முடிவு உண்டு. (அதாவது நிலையான சுவனபதி கூலியாகக் கிடைக்கும்.) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௨)Tafseer
جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَاۤىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ وَالْمَلٰۤىِٕكَةُ يَدْخُلُوْنَ عَلَيْهِمْ مِّنْ كُلِّ بَابٍۚ ٢٣
- jannātu
- جَنَّٰتُ
- சொர்க்கங்கள்
- ʿadnin
- عَدْنٍ
- அத்ன்
- yadkhulūnahā
- يَدْخُلُونَهَا
- நுழைவார்கள்/அதில்
- waman
- وَمَن
- இன்னும் இன்னும் எவர்
- ṣalaḥa
- صَلَحَ
- நல்லவரானார்
- min ābāihim
- مِنْ ءَابَآئِهِمْ
- இவர்களுடைய மூதாதைகளில்
- wa-azwājihim
- وَأَزْوَٰجِهِمْ
- இன்னும் இவர்களுடைய மனைவிகளில்
- wadhurriyyātihim
- وَذُرِّيَّٰتِهِمْۖ
- இன்னும் இவர்களுடைய சந்ததிகளில்
- wal-malāikatu
- وَٱلْمَلَٰٓئِكَةُ
- இன்னும் வானவர்கள்
- yadkhulūna
- يَدْخُلُونَ
- நுழைவார்கள்
- ʿalayhim min
- عَلَيْهِم مِّن
- இவர்களிடம்/இருந்து
- kulli bābin
- كُلِّ بَابٍ
- ஒவ்வொரு/வாசல்
நிலையான சுவனபதிகளில் இவர்களும், நன்னடத்தையுடைய இவர்களுடைய தந்தைகளும், இவர்களுடைய மனைவிகளும், இவர்களின் சந்ததிகளும் நுழைந்து விடுவார்கள். ஒவ்வொரு வாசலிலிருந்தும் மலக்குகள் இவர்களிடம் வந்து, ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௩)Tafseer
سَلٰمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِۗ ٢٤
- salāmun
- سَلَٰمٌ
- ஈடேற்றம் உண்டாகுக
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்களுக்கு
- bimā ṣabartum
- بِمَا صَبَرْتُمْۚ
- நீங்கள் பொறுமையாக இருந்த காரணத்தால்
- faniʿ'ma
- فَنِعْمَ
- மிக்க நல்லதாயிற்று
- ʿuq'bā
- عُقْبَى
- இறுதி
- l-dāri
- ٱلدَّارِ
- வீடு
(இவர்களை நோக்கி) "நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! (உங்களுடைய இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்று கூறுவார்கள்.) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௪)Tafseer
وَالَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ ۢ بَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖٓ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِۙ اُولٰۤىِٕكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْۤءُ الدَّارِ ٢٥
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- yanquḍūna
- يَنقُضُونَ
- முறிக்கிறார்கள்
- ʿahda
- عَهْدَ
- வாக்குறுதியை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- mīthāqihi
- مِيثَٰقِهِۦ
- அது உறுதியான
- wayaqṭaʿūna
- وَيَقْطَعُونَ
- இன்னும் துண்டிக்கிறார்கள்
- mā
- مَآ
- எதை
- amara
- أَمَرَ
- ஏவினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bihi
- بِهِۦٓ
- அதை
- an yūṣala
- أَن يُوصَلَ
- சேர்க்கப்படும்
- wayuf'sidūna
- وَيُفْسِدُونَ
- இன்னும் விஷமம் செய்வார்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِۙ
- பூமியில்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- lahumu l-laʿnatu
- لَهُمُ ٱللَّعْنَةُ
- இவர்களுக்கு/சாபம்
- walahum
- وَلَهُمْ
- இன்னும் இவர்களுக்கு
- sūu
- سُوٓءُ
- மிகக் கெட்டது
- l-dāri
- ٱلدَّارِ
- வீடு
எவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை அதனை உறுதிப்படுத்திய பின்னரும் முறித்து விடுகிறார்களோ அவர் களுக்கும், எவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி ஏவியதைப் பிரித்து விடுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டு அலைகிறார்களோ அவர்களுக்கும் (இறைவனுடைய) சாபம்தான் கிடைக்கும். அன்றி, அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் (தயார்படுத்தப்பட்டு) இருக்கிறது. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௫)Tafseer
اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ وَيَقْدِرُ ۗوَفَرِحُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَاۗ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ ࣖ ٢٦
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- yabsuṭu
- يَبْسُطُ
- விரிவுபடுத்துகிறான்
- l-riz'qa
- ٱلرِّزْقَ
- வாழ்க்கை வசதியை
- liman
- لِمَن
- எவருக்கு
- yashāu
- يَشَآءُ
- நாடுகின்றான்
- wayaqdiru
- وَيَقْدِرُۚ
- இன்னும் சுருக்குகிறான்
- wafariḥū
- وَفَرِحُوا۟
- இன்னும் மகிழ்கின்றனர்
- bil-ḥayati
- بِٱلْحَيَوٰةِ
- வாழ்வைக் கொண்டு
- l-dun'yā wamā
- ٱلدُّنْيَا وَمَا
- உலகம்/இல்லை
- l-ḥayatu l-dun'yā
- ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا
- உலக வாழ்க்கை
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- illā matāʿun
- إِلَّا مَتَٰعٌ
- தவிர/ஒரு சுகம்
அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் கொடுக்கிறான். எனினும், (நிராகரிப்பவர்கள்) இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே சந்தோஷமடைகின்றனர். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்) மிக்க அற்பமேயன்றி வேறில்லை. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௬)Tafseer
وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖۗ قُلْ اِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْٓ اِلَيْهِ مَنْ اَنَابَۖ ٢٧
- wayaqūlu
- وَيَقُولُ
- கூறுகிறார்(கள்)
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- எவர்கள்/நிராகரித்தனர்
- lawlā unzila
- لَوْلَآ أُنزِلَ
- இறக்கப்பட வேண்டாமா?
- ʿalayhi
- عَلَيْهِ
- இவர் மீது
- āyatun
- ءَايَةٌ
- ஓர் அத்தாட்சி
- min rabbihi
- مِّن رَّبِّهِۦۗ
- இவருடைய இறைவனிடமிருந்து
- qul
- قُلْ
- கூறுவீராக
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yuḍillu
- يُضِلُّ
- வழிகெடுக்கிறான்
- man yashāu
- مَن يَشَآءُ
- தான் நாடுகின்றவர்களை
- wayahdī
- وَيَهْدِىٓ
- இன்னும் நேர்வழி செலுத்துகிறான்
- ilayhi
- إِلَيْهِ
- தன் பக்கம்
- man anāba
- مَنْ أَنَابَ
- எவர்/திரும்பினார்
(நபியே!) இந்நிராகரிப்பவர்கள், (நம் தூதராகிய உங்களைக் குறிப்பிட்டு) "இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பியவாறு) ஏதேனுமோர் அத்தாட்சி அருளப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் (தண்டிக்க) நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். முற்றிலும் அவனையே நோக்கி நிற்பவர்களைத்தான் நேரான வழியில் செலுத்துகிறான். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௭)Tafseer
الَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَىِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ ۗ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَىِٕنُّ الْقُلُوْبُ ۗ ٢٨
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- wataṭma-innu
- وَتَطْمَئِنُّ
- இன்னும் நிம்மதியடைகின்றன
- qulūbuhum
- قُلُوبُهُم
- உள்ளங்கள்/அவர்களுடைய
- bidhik'ri
- بِذِكْرِ
- நினைவால்
- l-lahi
- ٱللَّهِۗ
- அல்லாஹ்வின்
- alā
- أَلَا
- அறிந்துகொள்ளுங்கள்!
- bidhik'ri
- بِذِكْرِ
- நினைவைக் கொண்டே
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- taṭma-innu
- تَطْمَئِنُّ
- நிம்மதியடைகின்றன
- l-qulūbu
- ٱلْقُلُوبُ
- உள்ளங்கள்
மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௮)Tafseer
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰى لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ ٢٩
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டு
- waʿamilū
- وَعَمِلُوا۟
- செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நற்செயல்களை
- ṭūbā
- طُوبَىٰ
- நற்பாக்கியம்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- waḥus'nu
- وَحُسْنُ
- அழகிய
- maābin
- مَـَٔابٍ
- மீளுமிடம்
எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨௯)Tafseer
كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِيْٓ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَآ اُمَمٌ لِّتَتْلُوَا۟ عَلَيْهِمُ الَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ وَهُمْ يَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِۗ قُلْ هُوَ رَبِّيْ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ مَتَابِ ٣٠
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறே
- arsalnāka
- أَرْسَلْنَٰكَ
- அனுப்பினோம்/உம்மை
- fī ummatin
- فِىٓ أُمَّةٍ
- ஒரு சமுதாயத்திடம்
- qad khalat
- قَدْ خَلَتْ
- சென்றிருக்கின்றன
- min qablihā
- مِن قَبْلِهَآ
- இவர்களுக்கு முன்னரும்
- umamun
- أُمَمٌ
- பல சமுதாயங்கள்
- litatluwā
- لِّتَتْلُوَا۟
- நீர் ஓதுவதற்காக
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- இவர்கள் முன்
- alladhī awḥaynā
- ٱلَّذِىٓ أَوْحَيْنَآ
- எது/நாம் வஹீ அறிவித்தோம்
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- wahum
- وَهُمْ
- இவர்களோ
- yakfurūna
- يَكْفُرُونَ
- நிராகரிக்கின்றனர்
- bil-raḥmāni
- بِٱلرَّحْمَٰنِۚ
- ரஹ்மானை
- qul
- قُلْ
- கூறுவீராக
- huwa
- هُوَ
- அவன்தான்
- rabbī
- رَبِّى
- என் இறைவன்
- lā
- لَآ
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- வணக்கத்திற்குரியவன்
- illā
- إِلَّا
- தவிர
- huwa
- هُوَ
- அவனை
- ʿalayhi
- عَلَيْهِ
- அவன் மீது
- tawakkaltu
- تَوَكَّلْتُ
- நம்பிக்கை வைத்தேன்
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- இன்னும் அவனிடமே
- matābi
- مَتَابِ
- என் பாவ மீட்சி
(நபியே! இதற்கு முன்னர் நாம் தூதர்கள் பலரை அனுப்பிய) இவ்வாறே உங்களையும் நாம் (நம்முடைய தூதராக) ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம். இவர்களுக்கு முன்னரும் (இவர்களில்) பல வகுப்பினர் சென்றிருக்கின்றனர். (நீண்ட காலமாக அவர்களிடம் யாதொரு தூதரும் வரவில்லை.) ஆகவே, நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பவற்றை இவர்களுக்கு நீங்கள் ஓதிக் காண்பித்து வாருங்கள். எனினும், இவர்களோ (உங்களை நிராகரிப்பது மட்டுமல்ல; தங்கள் மீது பல அருள்கள் புரிந்திருக்கும் அளவற்ற அருளாளனாகிய) ரஹ்மானையுமே நிராகரிக்கின்றனர். நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "அவன்தான் என்னுடைய இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவரு மில்லை. அவனையே நான் நம்புகிறேன்; அவனிடமே நான் மீளுவேன்." ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩௦)Tafseer