الۤمّۤرٰۗ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِۗ وَالَّذِيْٓ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ ١
- alif-lam-meem-ra
- الٓمٓرۚ
- அலிஃப்;லாம்;மீம்;றா
- til'ka
- تِلْكَ
- இவை
- āyātu
- ءَايَٰتُ
- வசனங்கள்
- l-kitābi
- ٱلْكِتَٰبِۗ
- வேதத்தின்
- wa-alladhī
- وَٱلَّذِىٓ
- எது
- unzila
- أُنزِلَ
- இறக்கப்பட்டது
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- min
- مِن
- இருந்து
- rabbika
- رَّبِّكَ
- உம் இறைவன்
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- உண்மைதான்
- walākinna
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- akthara
- أَكْثَرَ
- அதிகமானவர்(கள்)
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களில்
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அலிஃப்; லாம்; மீம்; றா. இவை இவ்வேதத்தின் சில வசனங்களாகும். (நபியே!) உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்படும் இது முற்றிலும் உண்மையானது. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) நம்புவதில்லை. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧)Tafseer
اَللّٰهُ الَّذِيْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَۗ كُلٌّ يَّجْرِيْ لِاَجَلٍ مُّسَمًّىۗ يُدَبِّرُ الْاَمْرَ يُفَصِّلُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ بِلِقَاۤءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ ٢
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhī
- ٱلَّذِى
- எத்தகையவன்
- rafaʿa
- رَفَعَ
- உயர்த்தினான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களை
- bighayri
- بِغَيْرِ
- இன்றி
- ʿamadin
- عَمَدٍ
- தூண்கள்
- tarawnahā
- تَرَوْنَهَاۖ
- காண்கிறீர்கள்/அதை
- thumma
- ثُمَّ
- பிறகு
- is'tawā
- ٱسْتَوَىٰ
- உயர்ந்து விட்டான்
- ʿalā
- عَلَى
- மேல்
- l-ʿarshi
- ٱلْعَرْشِۖ
- அர்ஷ்
- wasakhara
- وَسَخَّرَ
- இன்னும் வசப்படுத்தினான்
- l-shamsa
- ٱلشَّمْسَ
- சூரியனை
- wal-qamara
- وَٱلْقَمَرَۖ
- இன்னும் சந்திரனை
- kullun
- كُلٌّ
- எல்லாம்
- yajrī
- يَجْرِى
- ஓடுகின்றன
- li-ajalin
- لِأَجَلٍ
- ஒரு தவணையின் பக்கம்
- musamman
- مُّسَمًّىۚ
- குறிப்பிடப்பட்டது
- yudabbiru
- يُدَبِّرُ
- திட்டமிடுகிறான்
- l-amra
- ٱلْأَمْرَ
- காரியத்தை
- yufaṣṣilu
- يُفَصِّلُ
- விவரிக்கிறான்
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- வசனங்களை
- laʿallakum
- لَعَلَّكُم
- ழுமீலிs ஸசீவீÓனீ
- biliqāi
- بِلِقَآءِ
- சந்திப்பை
- rabbikum
- رَبِّكُمْ
- உங்கள் இறைவன்
- tūqinūna
- تُوقِنُونَ
- உறுதி கொள்கிறீர்கள்
வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அதனை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். அன்றி, அர்ஷின் மீது அவன் (தன் மகிமைக்கு தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத் திற்குள் வைத்திருக்கின்றான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட கால திட்டப்படி நடந்து வருகிறது. (அவற்றில் நடைபெறும்) சலக காரியங்களையும் அவனே திட்டமிடுகின்றான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (தன்னுடைய) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரித்து அறிவிக்கிறான். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨)Tafseer
وَهُوَ الَّذِيْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِيْهَا رَوَاسِيَ وَاَنْهٰرًا ۗوَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِيْهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغْشِى الَّيْلَ النَّهَارَۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ ٣
- wahuwa
- وَهُوَ
- அவன்
- alladhī
- ٱلَّذِى
- எத்தகையவன்
- madda
- مَدَّ
- விரித்தான்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- wajaʿala
- وَجَعَلَ
- இன்னும் அமைத்தான்
- fīhā
- فِيهَا
- அதில்
- rawāsiya
- رَوَٰسِىَ
- மலைகளை
- wa-anhāran
- وَأَنْهَٰرًاۖ
- இன்னும் ஆறுகளை
- wamin kulli
- وَمِن كُلِّ
- இருந்து/எல்லாம்
- l-thamarāti
- ٱلثَّمَرَٰتِ
- கனிகள்
- jaʿala
- جَعَلَ
- ஆக்கினான்
- fīhā zawjayni
- فِيهَا زَوْجَيْنِ
- அவற்றில்/ஜோடிகளை
- ith'nayni
- ٱثْنَيْنِۖ
- இரண்டு
- yugh'shī
- يُغْشِى
- மூடுகின்றான்
- al-layla
- ٱلَّيْلَ
- இரவால்
- l-nahāra
- ٱلنَّهَارَۚ
- பகலை
- inna fī dhālika
- إِنَّ فِى ذَٰلِكَ
- நிச்சயமாக/இதில்
- laāyātin
- لَءَايَٰتٍ
- அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yatafakkarūna
- يَتَفَكَّرُونَ
- சிந்திக்கின்றார்கள்
அவன்தான் பூமியை விரித்து, அதில் உறுதியான (பெரிய பெரிய) மலைகளையும் (நீண்ட) ஆறுகளையும் அமைத்தான். ஒவ்வொரு கனிவர்க்கத்(தின் மரங்களையும் ஆண் பெண் கொண்ட ஜ)தை ஜதைகளாக்கினான். இரவைக் கொண்டு பகலை மூடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩)Tafseer
وَفِى الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِيْلٌ صِنْوَانٌ وَّغَيْرُ صِنْوَانٍ يُّسْقٰى بِمَاۤءٍ وَّاحِدٍۙ وَّنُفَضِّلُ بَعْضَهَا عَلٰى بَعْضٍ فِى الْاُكُلِۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ ٤
- wafī l-arḍi
- وَفِى ٱلْأَرْضِ
- பூமியில்
- qiṭaʿun
- قِطَعٌ
- பகுதிகள்
- mutajāwirātun
- مُّتَجَٰوِرَٰتٌ
- ஒன்றுக்கொன்று நெருக்கமான
- wajannātun
- وَجَنَّٰتٌ
- இன்னும் தோட்டங்கள்
- min aʿnābin
- مِّنْ أَعْنَٰبٍ
- திராட்சைகளின்
- wazarʿun
- وَزَرْعٌ
- இன்னும் விவசாயம்
- wanakhīlun
- وَنَخِيلٌ
- இன்னும் பேரீச்ச மரங்கள்
- ṣin'wānun
- صِنْوَانٌ
- கிளைகள் நிறைந்தது
- waghayru
- وَغَيْرُ
- அற்றது
- ṣin'wānin
- صِنْوَانٍ
- கிளைகள்
- yus'qā
- يُسْقَىٰ
- புகட்டப்படுகிறது
- bimāin
- بِمَآءٍ
- நீரைக் கொண்டு
- wāḥidin
- وَٰحِدٍ
- ஒரே
- wanufaḍḍilu
- وَنُفَضِّلُ
- இன்னும் மேன்மையாக்கு கின்றோம்
- baʿḍahā
- بَعْضَهَا
- அவற்றில் சிலவற்றை
- ʿalā
- عَلَىٰ
- விட
- baʿḍin
- بَعْضٍ
- சிலவற்றை
- fī l-ukuli
- فِى ٱلْأُكُلِۚ
- சுவையில்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில்
- laāyātin
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- liqawmin
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- yaʿqilūna
- يَعْقِلُونَ
- சிந்தித்து புரிவார்கள்
பூமியில் பல தொகுதிகளை சேர்ந்தாற்போல் அமைத்து (அதில்) திராட்சை, தானியப்பயிர் நிலங்களையும், பேரீச்சந் தோப்புகளையும் ஆக்கினான்; கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான மரங்களையும் (உற்பத்தி செய்கிறான். இவை அனைத்திற்கும்) ஒரேவித நீர் புகட்டப்பட்டபோதிலும், சிலவற்றைவிட சிலவற்றை சுவையில் நாம் மேன்மையாக்கி வைத்தோம். இதில், அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௪)Tafseer
۞ وَاِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرَابًا ءَاِنَّا لَفِيْ خَلْقٍ جَدِيْدٍ ەۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْۚ وَاُولٰۤىِٕكَ الْاَغْلٰلُ فِيْٓ اَعْنَاقِهِمْۚ وَاُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٥
- wa-in taʿjab
- وَإِن تَعْجَبْ
- நீர்ஆச்சரியப்பட்டால்
- faʿajabun
- فَعَجَبٌ
- ஆச்சரியமானதே
- qawluhum
- قَوْلُهُمْ
- அவர்களுடைய கூற்று
- a-idhā kunnā
- أَءِذَا كُنَّا
- நாங்கள் ஆகிவிட்டால்?
- turāban
- تُرَٰبًا
- மண்ணாக
- a-innā
- أَءِنَّا
- ?/நிச்சயமாக நாம்
- lafī khalqin
- لَفِى خَلْقٍ
- படைப்பில்
- jadīdin
- جَدِيدٍۗ
- புதியது
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- birabbihim
- بِرَبِّهِمْۖ
- தங்கள் இறைவனை
- wa-ulāika
- وَأُو۟لَٰٓئِكَ
- இன்னும் இவர்கள்
- l-aghlālu
- ٱلْأَغْلَٰلُ
- அரிகண்டங்கள்
- fī aʿnāqihim
- فِىٓ أَعْنَاقِهِمْۖ
- இவர்களுடைய கழுத்துகளில்
- wa-ulāika
- وَأُو۟لَٰٓئِكَ
- இன்னும் இவர்கள்
- aṣḥābu l-nāri
- أَصْحَٰبُ ٱلنَّارِۖ
- நரகவாசிகள்
- hum fīhā
- هُمْ فِيهَا
- அதில் இவர்கள்
- khālidūna
- خَٰلِدُونَ
- நிரந்தரமானவர்கள்
(நபியே! இந்நிராகரிப்பவர்கள் உங்களைப் பொய்யாக்குவது பற்றி) நீங்கள் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதனை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) "நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?" என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவனையே நிராகரிக்கின்றனர். (ஆகவே மறுமையில்) இவர்களுடைய கழுத்தில் விலங்கிடப்படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௫)Tafseer
وَيَسْتَعْجِلُوْنَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلٰتُۗ وَاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلٰى ظُلْمِهِمْۚ وَاِنَّ رَبَّكَ لَشَدِيْدُ الْعِقَابِ ٦
- wayastaʿjilūnaka
- وَيَسْتَعْجِلُونَكَ
- அவசரமாகத் தேடுகின்றனர்/உம்மிடம்
- bil-sayi-ati
- بِٱلسَّيِّئَةِ
- கெட்டதை
- qabla
- قَبْلَ
- முன்னர்
- l-ḥasanati
- ٱلْحَسَنَةِ
- நல்லதிற்கு
- waqad khalat
- وَقَدْ خَلَتْ
- சென்றுள்ளன
- min qablihimu
- مِن قَبْلِهِمُ
- அவர்களுக்கு முன்னர்
- l-mathulātu
- ٱلْمَثُلَٰتُۗ
- தண்டனைகள்
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- உம் இறைவன்
- ladhū maghfiratin
- لَذُو مَغْفِرَةٍ
- மன்னிப்பவன்
- lilnnāsi
- لِّلنَّاسِ
- மக்களை
- ʿalā ẓul'mihim
- عَلَىٰ ظُلْمِهِمْۖ
- அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும்
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- உம் இறைவன்
- lashadīdu
- لَشَدِيدُ
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- தண்டனை
(நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக் கொள்ள இவர்கள் உங்களிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் இவர்களுக்கு முன்னரும் நிச்சயமாக நிகழ்ந்தே இருக்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்தபோதிலும், நிச்சயமாக உங்கள் இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையானவனாகவும் இருக்கின்றான். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௬)Tafseer
وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖۗ اِنَّمَآ اَنْتَ مُنْذِرٌ وَّلِكُلِّ قَوْمٍ هَادٍ ࣖ ٧
- wayaqūlu
- وَيَقُولُ
- கூறுகிறார்(கள்)
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தவர்கள்
- lawlā unzila
- لَوْلَآ أُنزِلَ
- இறக்கப்பட வேண்டாமா?
- ʿalayhi
- عَلَيْهِ
- இவர் மீது
- āyatun
- ءَايَةٌ
- ஓர் அத்தாட்சி
- min
- مِّن
- இருந்து
- rabbihi
- رَّبِّهِۦٓۗ
- இவருடையஇறைவன்
- innamā anta
- إِنَّمَآ أَنتَ
- நீரெல்லாம்
- mundhirun
- مُنذِرٌۖ
- ஓர் எச்சரிப்பாளர்
- walikulli qawmin
- وَلِكُلِّ قَوْمٍ
- எல்லா மக்களுக்கும்
- hādin
- هَادٍ
- தலைவர்/வழிகாட்டி
"(நபியே!) இந்நிராகரிப்பவர்கள் (உங்களைப் பற்றி) இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சி அருளப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (நபியே!) நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே அன்றி வேறில்லை; (ஆகவே, அவர்கள் விரும்பியவாறெல்லாம் செய்யவேண்டுவது உங்களது கடமை அன்று. இவ்வாறே) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (ஒரு) வழிகாட்டி வந்திருக்கிறார். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௭)Tafseer
اَللّٰهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُنْثٰى وَمَا تَغِيْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ۗوَكُلُّ شَيْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ ٨
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- அறிகின்றான்
- mā
- مَا
- எதை
- taḥmilu
- تَحْمِلُ
- சுமக்கிறாள்
- kullu
- كُلُّ
- ஒவ்வொரு
- unthā
- أُنثَىٰ
- பெண்
- wamā taghīḍu
- وَمَا تَغِيضُ
- இன்னும் குறைவதை
- l-arḥāmu
- ٱلْأَرْحَامُ
- கர்ப்பப்பைகள்
- wamā tazdādu
- وَمَا تَزْدَادُۖ
- இன்னும் அதிகமாவதை
- wakullu shayin
- وَكُلُّ شَىْءٍ
- எல்லாம்
- ʿindahu
- عِندَهُۥ
- அவனிடம்
- bimiq'dārin
- بِمِقْدَارٍ
- ஓர் அளவில்
ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்ப(து ஆணா, பெண்ணா என்ப)தையும் அல்லாஹ் நன்கறிகிறான். கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் சமயம்) சுருங்குவதையும், (பிரசவிக்கும் பொழுது) அவை விரிவதையும் அவன் அறிகிறான். (கர்ப்பங்களிலுள்ள) ஒவ்வொன்றிலும் (அக்கர்ப்பங்களில் தங்கியிருக்க வேண்டிய காலம் ஆகியவை) அவனிடம் குறிப்பிடப்பட்டே இருக்கின்றன. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௮)Tafseer
عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ ٩
- ʿālimu l-ghaybi
- عَٰلِمُ ٱلْغَيْبِ
- அறிந்தவன்/மறைவை
- wal-shahādati
- وَٱلشَّهَٰدَةِ
- இன்னும் வெளிப்படையை
- l-kabīru
- ٱلْكَبِيرُ
- மிகப் பெரியவன்
- l-mutaʿāli
- ٱلْمُتَعَالِ
- மிக உயர்ந்தவன்
(இது மட்டுமா! மற்ற அனைத்தின்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௯)Tafseer
سَوَاۤءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍۢ بِالَّيْلِ وَسَارِبٌۢ بِالنَّهَارِ ١٠
- sawāon
- سَوَآءٌ
- சமமே
- minkum
- مِّنكُم
- உங்களில்
- man
- مَّنْ
- எவன்
- asarra
- أَسَرَّ
- ரகசியப்படுத்தினான்
- l-qawla waman
- ٱلْقَوْلَ وَمَن
- பேச்சை/இன்னும் எவன்
- jahara
- جَهَرَ
- பகிரங்கப்படுத்தினான்
- bihi
- بِهِۦ
- அதை
- waman huwa
- وَمَنْ هُوَ
- இன்னும் எவன்/அவன்
- mus'takhfin
- مُسْتَخْفٍۭ
- மறைத்து செய்பவனாக
- bi-al-layli
- بِٱلَّيْلِ
- இரவில்
- wasāribun
- وَسَارِبٌۢ
- இன்னும் வெளிப்படுபவன்
- bil-nahāri
- بِٱلنَّهَارِ
- பகலில்
உங்களில் எவரேனும் (தன்) வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அதனை பகிரங்கமாகக் கூறினாலும் அவருக்கு (இரண்டும்) சமமே! (அவ்வாறே உங்களில்) எவரும் இரவில் தான் செய்வதை மறைத்துக்கொண்டாலும் அல்லது பகலில் பகிரங்கமாகச் செய்தாலும் (அவருக்குச் சமமே! அனைவரின் செயலையும் அவன் நன்கறிவான்.) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧௦)Tafseer