குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯௬
Qur'an Surah Yusuf Verse 96
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّآ اَنْ جَاۤءَ الْبَشِيْرُ اَلْقٰىهُ عَلٰى وَجْهِهٖ فَارْتَدَّ بَصِيْرًاۗ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْۙ اِنِّيْٓ اَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ (يوسف : ١٢)
- falammā
- فَلَمَّآ
- Then when
- போது
- an jāa
- أَن جَآءَ
- [that] arrived
- வந்தார்
- l-bashīru
- ٱلْبَشِيرُ
- the bearer of glad tidings
- நற்செய்தியாளர்
- alqāhu
- أَلْقَىٰهُ
- he cast it
- போட்டார்/அதை
- ʿalā wajhihi
- عَلَىٰ وَجْهِهِۦ
- over his face
- அவருடைய முகத்தில்
- fa-ir'tadda
- فَٱرْتَدَّ
- then returned (his) sight
- அவர் திரும்பினார்
- baṣīran
- بَصِيرًاۖ
- then returned (his) sight
- பார்வையுடையவராக
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- alam aqul
- أَلَمْ أَقُل
- "Did not I say
- நான் கூறவில்லையா?
- lakum
- لَّكُمْ
- to you
- உங்களுக்கு
- innī
- إِنِّىٓ
- indeed, I
- நிச்சயமாக நான்
- aʿlamu
- أَعْلَمُ
- [I] know
- அறிவேன்
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- from Allah
- அல்லாஹ்விடம்
- mā lā taʿlamūna
- مَا لَا تَعْلَمُونَ
- what not you know?"
- நீங்கள் அறியாதவற்றை
Transliteration:
Falammaaa an jaaa'albasheeru alqaahu 'alaa wajhihee fartadda baseeran qaala alam aqul lakum inneee a'lamu minal laahi maa laa ta'lamoon(QS. Yūsuf:96)
English Sahih International:
And when the bearer of good tidings arrived, he cast it over his face, and he returned [once again] seeing. He said, "Did I not tell you that I know from Allah that which you do not know?" (QS. Yusuf, Ayah ௯௬)
Abdul Hameed Baqavi:
அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன்) பார்வையை அடைந்து "(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று கேட்டார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௯௬)
Jan Trust Foundation
பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நற்செய்தியாளர் வந்தபோது, அதை அவருடைய முகத்தில் போட்டார். அவர் பார்வையுடையவராக திரும்பினார். “நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நிச்சயமாக நான் அறிவேன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கூறினார்.