Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯௪

Qur'an Surah Yusuf Verse 94

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا فَصَلَتِ الْعِيْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّيْ لَاَجِدُ رِيْحَ يُوْسُفَ لَوْلَآ اَنْ تُفَنِّدُوْنِ (يوسف : ١٢)

walammā faṣalati
وَلَمَّا فَصَلَتِ
And when departed
பிரிந்த போது
l-ʿīru
ٱلْعِيرُ
the caravan
பயணக் கூட்டம்
qāla
قَالَ
their father said
கூறினார்
abūhum
أَبُوهُمْ
their father said
அவர்களின் தந்தை
innī
إِنِّى
"Indeed, I
நிச்சயமாக நான்
la-ajidu
لَأَجِدُ
[I] find
உறுதியாக பெறுகிறேன்
rīḥa
رِيحَ
(the) smell
வாடையை
yūsufa
يُوسُفَۖ
(of) Yusuf
யூஸுஃபுடைய
lawlā an tufannidūni
لَوْلَآ أَن تُفَنِّدُونِ
if not that you think me weakened in mind"
நீங்கள் அறிவீனனாக்காமல் இருக்கவேண்டுமே/என்னை

Transliteration:

Wa lammaa fasalatil 'eeru qaala aboohum innee la ajidu reeha Yoosufa law laaa an tufannidoon (QS. Yūsuf:94)

English Sahih International:

And when the caravan departed [from Egypt], their father said, "Indeed, I find the smell of Joseph [and would say that he was alive] if you did not think me weakened in mind." (QS. Yusuf, Ayah ௯௪)

Abdul Hameed Baqavi:

அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை ("இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக் காரனென்று எண்ணாமலிருக்க வேண்டுமே!" என்றார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௯௪)

Jan Trust Foundation

(அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!” என்றார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்களின்) பயணக் கூட்டம் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை (“இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் பெறுகிறேன்; என்னை நீங்கள் அறிவீனனாக்காமல் (பழிக்காமல்) இருக்கவேண்டுமே!” என்று கூறினார்.