Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯௩

Qur'an Surah Yusuf Verse 93

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْهَبُوْا بِقَمِيْصِيْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰى وَجْهِ اَبِيْ يَأْتِ بَصِيْرًا ۚوَأْتُوْنِيْ بِاَهْلِكُمْ اَجْمَعِيْنَ ࣖ (يوسف : ١٢)

idh'habū
ٱذْهَبُوا۟
Go
செல்லுங்கள்
biqamīṣī hādhā
بِقَمِيصِى هَٰذَا
with this shirt of mine with this shirt of mine
எனது சட்டையைக் கொண்டு/இந்த
fa-alqūhu
فَأَلْقُوهُ
and cast it
போடுங்கள்/அதை
ʿalā wajhi
عَلَىٰ وَجْهِ
over (the) face
முகத்தில்
abī
أَبِى
(of) my father
என் தந்தையின்
yati
يَأْتِ
he will regain sight
அவர் வருவார்
baṣīran
بَصِيرًا
he will regain sight
பார்வையுடையவராக
watūnī
وَأْتُونِى
And bring to me
வாருங்கள்/என்னிடம்
bi-ahlikum
بِأَهْلِكُمْ
your family
உங்கள் குடும்பத்தினரைக் கொண்டு
ajmaʿīna
أَجْمَعِينَ
all together"
அனைவரையும்

Transliteration:

Izhaboo biqameesee haazaa fa alqoohu 'alaa wajhi abee yaati baseeranw waatoonee bi ahlikum ajma'een (QS. Yūsuf:93)

English Sahih International:

Take this, my shirt, and cast it over the face of my father; he will become seeing. And bring me your family, all together." (QS. Yusuf, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

"நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று கூறி அனுப்பினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௯௩)

Jan Trust Foundation

“என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நீங்கள் எனது இந்த சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் அதைப் போடுங்கள். அவர் பார்வையுடையவராக வருவார். நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்.”