Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௯௦

Qur'an Surah Yusuf Verse 90

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا ءَاِنَّكَ لَاَنْتَ يُوْسُفُۗ قَالَ اَنَا۠ يُوْسُفُ وَهٰذَآ اَخِيْ قَدْ مَنَّ اللّٰهُ عَلَيْنَاۗ اِنَّهٗ مَنْ يَّتَّقِ وَيَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ (يوسف : ١٢)

qālū
قَالُوٓا۟
They said
கூறினர்
a-innaka
أَءِنَّكَ
"Are you indeed
?/நிச்சயமாக நீர்
la-anta
لَأَنتَ
[surely you]
நீர்தான்
yūsufu
يُوسُفُۖ
Yusuf?"
யூஸுஃப்
qāla
قَالَ
He said
கூறினார்
anā
أَنَا۠
"I am
நான்
yūsufu
يُوسُفُ
Yusuf
யூஸுஃப்
wahādhā
وَهَٰذَآ
and this
இன்னும் இவர்
akhī
أَخِىۖ
(is) my brother
என் சகோதரர்
qad
قَدْ
Indeed
திட்டமாக
manna
مَنَّ
Allah has been gracious
அருள் புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
Allah has been gracious
அல்லாஹ்
ʿalaynā
عَلَيْنَآۖ
to us
எங்கள் மீது
innahu
إِنَّهُۥ
Indeed, he
நிச்சயமாக செய்தி
man yattaqi
مَن يَتَّقِ
who fears Allah
எவர் அஞ்சுவார்
wayaṣbir
وَيَصْبِرْ
and (is) patient
இன்னும் பொறுப்பார்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
then indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
lā yuḍīʿu
لَا يُضِيعُ
(does) not let go waste
வீணாக்க மாட்டான்
ajra
أَجْرَ
(the) reward
கூலியை
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
(of) the good-doers"
நல்லறம் புரிபவர்கள்

Transliteration:

Qaaloo 'a innaka la anta Yoosufu qaala ana Yoosufu wa haazaaa akhee qad mannal laahu 'alainaa innahoo mai yattaqi wa yasbir fa innal laaha laa yudee'u ajral muhsineen (QS. Yūsuf:90)

English Sahih International:

They said, "Are you indeed Joseph?" He said, "I am Joseph, and this is my brother. Allah has certainly favored us. Indeed, he who fears Allah and is patient, then indeed, Allah does not allow to be lost the reward of those who do good." (QS. Yusuf, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் (திடுக்கிட்டு) "மெய்யாகவே நீங்கள் யூஸுஃபாக இருப்பீரோ?" என்று கேட்டார்கள். அதற்கவர் "நான்தான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, கஷ்டங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவரின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை" என்று கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௯௦)

Jan Trust Foundation

(அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக நீர்தான் யூஸுஃபா?” என்று கூறினர். “நான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது அருள்புரிந்தான். நிச்சயமாக எவர் (அல்லாஹ்வை) அஞ்சி, (சோதனையில்) பொறு(த்திரு)ப்பாரோ,நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான்”என்று கூறினார்.