குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௮
Qur'an Surah Yusuf Verse 88
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا دَخَلُوْا عَلَيْهِ قَالُوْا يٰٓاَيُّهَا الْعَزِيْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰىةٍ فَاَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَاۗ اِنَّ اللّٰهَ يَجْزِى الْمُتَصَدِّقِيْنَ (يوسف : ١٢)
- falammā
- فَلَمَّا
- So when
- போது
- dakhalū
- دَخَلُوا۟
- they entered
- அவர்கள் நுழைந்தனர்
- ʿalayhi
- عَلَيْهِ
- upon him
- அவரிடம்
- qālū
- قَالُوا۟
- they said
- கூறினர்
- yāayyuhā l-ʿazīzu
- يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ
- "O Aziz! "O Aziz!
- ஓ அதிபரே!
- massanā
- مَسَّنَا
- Has touched us
- ஏற்பட்டது/எங்களுக்கு
- wa-ahlanā
- وَأَهْلَنَا
- and our family
- இன்னும் குடும்பத்திற்கும்/ எங்கள்
- l-ḍuru
- ٱلضُّرُّ
- the adversity
- வறுமை, கொடுமை
- waji'nā
- وَجِئْنَا
- and we have come
- நாங்கள் வந்தோம்
- bibiḍāʿatin
- بِبِضَٰعَةٍ
- with goods
- ஒரு பொருளைக் கொண்டு
- muz'jātin
- مُّزْجَىٰةٍ
- (of) little value
- அற்பமானது
- fa-awfi
- فَأَوْفِ
- but pay (in) full
- ஆகவே முழு மைப்படுத்துவீராக
- lanā
- لَنَا
- to us
- எங்களுக்கு
- l-kayla
- ٱلْكَيْلَ
- the measure
- அளவையை
- wataṣaddaq
- وَتَصَدَّقْ
- and be charitable
- இன்னும் தானம் புரிவீராக
- ʿalaynā
- عَلَيْنَآۖ
- to us
- எங்கள் மீது
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- yajzī
- يَجْزِى
- rewards
- கூலியளிப்பான்
- l-mutaṣadiqīna
- ٱلْمُتَصَدِّقِينَ
- the charitable"
- தர்மசாலிகளுக்கு
Transliteration:
Falammaa dakhaloo 'alaihi qaaloo yaaa ayyuhal 'Azeezu massanaa wa ahlanad durru wa ji'naa bibidaa 'timmuzjaatin fa awfi lanal kaila wa tasaddaq 'alainaa innal laaha yajzil mutasaddiqeen(QS. Yūsuf:88)
English Sahih International:
So when they entered upon him [i.e., Joseph], they said, "O Azeez, adversity has touched us and our family, and we have come with goods poor in quality, but give us full measure and be charitable to us. Indeed, Allah rewards the charitable." (QS. Yusuf, Ayah ௮௮)
Abdul Hameed Baqavi:
பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி ("மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸை! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதனைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்குப் பிரதிபலன் அளிப்பான்" என்று கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௮௮)
Jan Trust Foundation
அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அவரிடம் (யூஸுஃபிடம்) நுழைந்து, “அதிபரே! எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வறுமை ஏற்பட்டது. ஓர் அற்பப் பொருளை (கிரயமாக இங்கே) நாங்கள் கொண்டு வந்தோம். (அதை ஏற்று) எங்களுக்கு அளவையை முழுமைப்படுத்துவீராக! எங்கள் மீது தானம் புரிவீராக! நிச்சயமாக அல்லாஹ் தர்மசாலிகளுக்கு (நற்)கூலியளிப்பான்”என்று கூறினர்.