Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௩

Qur'an Surah Yusuf Verse 83

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًاۗ فَصَبْرٌ جَمِيْلٌ ۗعَسَى اللّٰهُ اَنْ يَّأْتِيَنِيْ بِهِمْ جَمِيْعًاۗ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ (يوسف : ١٢)

qāla
قَالَ
He said
கூறினார்
bal
بَلْ
"Nay
மாறாக
sawwalat
سَوَّلَتْ
have enticed
அலங்கரித்தன
lakum
لَكُمْ
you
உங்களுக்கு
anfusukum
أَنفُسُكُمْ
your souls
உங்கள் ஆன்மாக்கள்
amran
أَمْرًاۖ
something
ஒரு காரியத்தை
faṣabrun
فَصَبْرٌ
so patience
ஆகவே பொறுமை
jamīlun
جَمِيلٌۖ
(is) beautiful
அழகியது, நல்லது
ʿasā l-lahu
عَسَى ٱللَّهُ
Perhaps Allah
கூடும்/அல்லாஹ்
an yatiyanī
أَن يَأْتِيَنِى
will bring them to me will bring them to me
வருவான்/என்னிடம்
bihim
بِهِمْ
will bring them to me
அவர்களைக்கொண்டு
jamīʿan
جَمِيعًاۚ
all
அனைவரையும்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
Indeed, He He
நிச்சயமாக அவன்தான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
(is) the All-Knower
நன்கறிந்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
All-Wise"
மகா ஞானவான்

Transliteration:

Qaala bal sawwalat lakum anfusukum amran fasabrun jameelun 'asal laahu any yaa tiyanee bihim jamee'aa; innahoo Huwal 'Aleemul Hakeem (QS. Yūsuf:83)

English Sahih International:

[Jacob] said, "Rather, your souls have enticed you to something, so patience is most fitting. Perhaps Allah will bring them to me all together. Indeed, it is He who is the Knowing, the Wise." (QS. Yusuf, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

(ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதனைத் தங்கள் தந்தை யஃகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் "நீங்கள் கூறுவது) சரியன்று! உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவனும், ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்" என்று கூறிவிட்டு, (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௮௩)

Jan Trust Foundation

(ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) “இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன; ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“மாறாக! உங்கள் ஆன்மாக்கள் ஒரு காரியத்தை அலங்கரித்தன. ஆகவே, அழகிய பொறுமை(தான் நல்லது). அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வரக்கூடும். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்”என்று கூறினார்.